PT 6.3.10

துன்பம் நீங்கிவிடும்

1477 தாரார்மலர்க்கமலத் தடம்சூழ்ந்ததண்புறவில் *
சீரார்நெடுமறுகில் திருவிண்ணகரானை *
காரார்புயல்தடக்கைக் கலியனொலிமாலை *
ஆரார்இவைவல்லார் அவர்க்குஅல்லல்நில்லாவே. (2)
1477 ## tār ār malark kamalat * taṭam cūzhnta taṇ puṟavil *
cīr ār nĕṭu maṟukiṉ * tiruviṇṇakarāṉai **
kār ār puyal taṭak kaik * kaliyaṉ ŏli mālai *
ār ār ivai vallār * avarkku allal nillāve-10

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1477. Kaliyan, the poet, as generous as a rain-giving cloud, composed a garland of ten Tamil pāsurams on the god of Thiruvinnagar surrounded by flourishing groves and ponds blooming with lotuses. If devotees learn and recite these pāsurams no troubles will come to them in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தார் ஆர் இதழ்மிக்க; மலர் பூக்களையுடைய; கமல தடம் தாமரை; சூழ்ந்த தடாகங்கள் சூழ்ந்த; தண் குளிர்ந்த; புறவில் தோட்டங்களும்; சீர் ஆர் செல்வம் மிக்க; நெடு மறுகின் நீண்ட வீதிகளும் உள்ள; திருவிண்ணகரானை திருவிண்ணகரானைக் குறித்து; கார் ஆர் புயல் காளமேகம் போன்ற நீண்ட ஓளதார்யனுடைய; தடக்கை பரந்த கைகளையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலிமாலை அருளிச்செய்த; ஆர் ஆர் இவை இப்பாசுரங்களை; வல்லார் ஓதுபவர்களுக்கு; அவர்க்கு அவர்க்கு; அல்லல் நில்லாவே பாவங்கள் நில்லாது