PT 6.3.4

உன்னைச் சேர்ந்து என் தீவினைகளைப் போக்கினேன்

1471 சாந்தேந்துமென்முலையார் தடந்தோள்புணரின்பவெள்ளத்து
ஆழ்ந்தேன் * அருநகரத்தழுந்தும் பயன்படைத்தேன் *
போந்தேன்புண்ணியனே! உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகரானே!
1471 cāntu entu mĕṉ mulaiyār * taṭan tol̤ puṇar iṉpa vĕl̤l̤attu
āzhnteṉ * aru narakattu azhuntum * payaṉ paṭaitteṉ **
ponteṉ puṇṇiyaṉe * uṉṉai ĕyti ĕṉ tīviṉaikal̤
tīrnteṉ * niṉ aṭainteṉ * -tiruviṇṇakarāṉe-4

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1471. I was plunged into a flood of joy, as I embraced the beautiful arms of women with soft breasts smeared with sandal paste. But now I fell into the sorrow of hell for the rest of my life. You are virtuous and compassionate and since I approached you all my bad karmā is gone, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!; புண்ணியனே! புண்ணியனே!; சாந்து ஏந்து சாந்து அணிந்த; மென் முலையார் ஸ்தனங்களையுடைய; தடந்தோள் பெண்களை; புணர் அணைவதினால் உண்டாகும்; இன்ப வெள்ளத்து இன்ப வெள்ளத்தில்; ஆழ்ந்தேன் மூழ்கி இருந்தேன்; அரு நரகத்து கொடிய ஸம்ஸாரமாகிய; அழுந்தும் நரகத்திலிருக்கும்; பயன் பயனை; படைத்தேன் பெற்றேன் பின்பு; போந்தேன் வந்து உன்னை; நின் அடைந்தேன் சரண் அடைந்தேன்; உனை எய்தி உன்னை சரண் அடைந்தபின்; என் தீவினைகள் என் கொடிய பாபங்கள்; தீர்ந்தேன் தீரப்பெற்றேன்