PT 6.3.2

திருமாலே! நான் உனக்கு அடிமை

1469 துறந்தேன் ஆர்வச்செற்றச்சுற்றம் துறந்தமையால் *
சிறந்தேன்நின்னடிக்கே அடிமை திருமாலே! *
அறந்தானாய்த்திரிவாய்! உன்னைஎன்மனத்தகத்தே *
திறம்பாமல்கொண்டேன் திருவிண்ணகரானே!
1469 tuṟanteṉ ārvac cĕṟṟac * cuṟṟam tuṟantamaiyāl *
ciṟanteṉ niṉ aṭikke * aṭimai tirumāle **
aṟam-tāṉ āyt tirivāy * uṉṉai ĕṉ maṉattu akatte *
tiṟampāmal kŏṇṭeṉ * -tiruviṇṇakarāṉe-2

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1469. I do not love or hate anyone. I left my family and all other relatives and friends and became a good person. I, your slave, worship your feet, O Thirumāl. You the god of Thiruvinnagar are dharma itself. I received you in my heart and I will not let you leave it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரத்திலிருப்பவனே; திருமாலே! திருமாலே!; அறம் உண்மையான தருமமே; தானாய் வடிவாய் இருப்பவனே!; திரிவாய்! அருள் புரிய காலம் பார்த்து திரிபவனே!; சுற்றம் உறவையும்; ஆர்வச் செற்ற அன்பையும் விரோதத்தையும்; துறந்தேன் துறந்தேன் விட்டேன்; துறந்தமையால் விட்டதனால்; நின் அடிக்கே உன் திருவடிகளுக்கே; அடிமை கைங்கர்யம் செய்ய; சிறந்தேன் தகுதி பெற்றேன்; உன்னை உன்னை; என் மனத்து அகத்தே என் மனத்துள்; திறம்பாமல் திறம்பட; கொண்டேன் வைத்துக்கொண்டேன்