Chapter 4

Yashoda calls Kannan to come and drink milk - (சந்த மலர்)

கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
Yashoda calls Kannan to come and drink milk - (சந்த மலர்)
Standing at the extreme of enmity, the demons' voices recount the victorious deeds of Rama, which the āzhvār experiences. In a similar manner, filled with supreme love, the āzhvār experiences Krishna through the verses of devotees standing at the pinnacle of devotion. Assuming the role of Yashoda, like Periyāzhvār, the āzhvār calls the child Krishna to come and drink milk.
பகைமையின் எல்லையில் நின்ற அரக்கர் வாயினால் இராமனின் வெற்றிச் செயல்களை அனுபவித்த ஆழ்வார், பிரேமத்தில் எல்லையில் நிற்கும் அன்பர்களின் பாசுரங்களால் கண்ணனை அனுபவிக்கிறார். யசோதை நிலையில் இருந்துகொண்டு, பெரியாழ்வாரைப் போல் இவரும் குழந்தைக் கண்ணனை அம்மம். உண்ண அழைக்கிறார்.
Verses: 1878 to 1887
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 10.4.1

1878 சந்தமலர்க்குழல்தாழத் தானுகந்தோடித்தனியே
வந்து * என்முலைத்தடந்தன்னைவாங்கி நின்வாயில்மடுத்து *
நந்தன்பெறப்பெற்றநம்பீ! நானுகந்துண்ணும்அமுதே! *
எந்தைபெருமனே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே. (2)
1878 ## சந்த மலர்க் குழல் தாழத் * தான் உகந்து ஓடித் தனியே
வந்து * என் முலைத்தடம் தன்னை வாங்கி * நின் வாயில் மடுத்து **
நந்தன் பெறப் பெற்ற நம்பீ * நான் உகந்து உண்ணும் அமுதே *
எந்தை பெருமானே உண்ணாய் * என் அம்மம் சேமம் உண்ணாயே 1
1878 ## canta malark kuzhal tāzhat * tāṉ ukantu oṭit taṉiye
vantu * ĕṉ mulaittaṭam-taṉṉai vāṅki * niṉ vāyil maṭuttu **
nantaṉ pĕṟap pĕṟṟa nampī * nāṉ ukantu uṇṇum amute *
ĕntai pĕrumāṉe uṇṇāy * ĕṉ ammam cemam uṇṇāye-1

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1878. Run and come happily as fragrant flowers fall from your beautiful hair and put your mouth on my breasts, hold them and drink milk. O Nambi, son of Nandan, you are my nectar and I enjoy you. You are my father and my lord. Come and drink my sweet milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தன் பெற நந்தகோபாலன்; பெற்ற உன்னைப் பிள்ளையாக; நம்பீ! பெற்ற பேறு பெற்றவன்; நான் உகந்து நான் உகந்து; உண்ணும் உண்ணும்; அமுதே அமுதம் போன்ற இனியவனே!; எந்தை பெருமானே! எந்தை பெருமானே!; சந்த மலர் பூக்களை அணிந்த; குழல் தாழ தலைமுடியானது அலைய; தான் உகந்து ஓடி நீ தானே; தனியே தனியாக ஓடி; வந்து என் வந்து என்; முலைத்தடம் தன்னை மார்பகங்களை; வாங்கி பற்றி; நின்வாயில்மடுத்து உன் வாயில் வைத்து; சேமம் உண்ணாயே நன்மை பயக்கும்; உண்ணாய் என் அம்மம் பாலை உண்ணவேண்டும்

PT 10.4.2

1879 வங்கமறிகடல்வண்ணா! மாமுகிலேயொக்கும்நம்பீ! *
செங்கண்நெடியதிருவே! செங்கமலம்புரைவாயா! *
கொங்கைசுரந்திடஉன்னைக் கூவியும்காணாதிருந்தேன் *
எங்கிருந்துஆயர்களோடும் என்விளையாடுகின்றாயே?
1879 வங்க மறி கடல் வண்ணா * மா முகிலே ஒக்கும் நம்பீ *
செங்கண் நெடிய திருவே * செங்கமலம் புரை வாயா **
கொங்கை சுரந்திட உன்னைக் * கூவியும் காணாதிருந்தேன் *
எங்கு இருந்து ஆயர்களோடும் * என் விளையாடுகின்றாயே? 2
1879 vaṅka maṟi kaṭal vaṇṇā * mā mukile ŏkkum nampī *
cĕṅkaṇ nĕṭiya tiruve * cĕṅkamalam purai vāyā **
kŏṅkai curantiṭa uṉṉaik * kūviyum kāṇātirunteṉ *
ĕṅku iruntu āyarkal̤oṭum * ĕṉ vil̤aiyāṭukiṉṟāye?-2

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1879. O Nambi, colored like the ocean with rolling waves and like a dark cloud, you are tall and precious, with lovely eyes, and your mouth is red like a beautiful lotus. Milk is coming from my breasts. I called you loudly but I have not seen you. Where are you? Are you playing with the cowherd children?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்க கப்பல்களொடு கூடின; மறி அலைகள் மறித்தெழும்; கடல்! கடலைப் போன்ற; வண்ணா நிறமுடையவனே!; மா முகிலே ஒக்கும் மேகத்தை ஒத்த; நம்பீ! எம்பிரானே!; நெடிய நீண்ட; செங்கண் சிவந்த கண்களையுடைய; திருவே! ஸ்ரீமானே!; செங்கமலம் செந்தாமரைப் போன்ற; புரை வாயா! முகமுடையவனே!; கொங்கை ஸ்தனங்களில்; சுரந்திட பால் சுரக்க; உன்னைக் உன்னை; கூவியும் கூவி அழைத்தும் உன்னை; காணாது இருந்தேன் காணாமல் இருந்தேன்; ஆயர்களோடும் என் ஆயர்களோடு; எங்கு இருந்து எங்கு இருந்தாய் கண்ணா?

PT 10.4.3

1880 திருவிற்பொலிந்தஎழிலார் ஆயர்தம்பிள்ளைகளோடு *
தெருவில்திளைக்கின்றநம்பீ! செய்கின்றதீமைகள் கண்டிட்டு *
உருகிஎன்கொங்கையின்தீம்பால் ஓட்டந்துபாய்ந்திடுகின்ற *
மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ணநீவாராய்.
1880 திருவில் பொலிந்த எழில் ஆர் * ஆயர் தம் பிள்ளைகளோடு *
தெருவில் திளைக்கின்ற நம்பீ * செய்கின்ற தீமைகள் கண்டிட்டு **
உருகி என் கொங்கையின் தீம் பால் * ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
மருவிக் குடங்கால் இருந்து * வாய் முலை உண்ண நீ வாராய் 3
1880 tiruvil pŏlinta ĕzhil ār * āyar-tam pil̤l̤aikal̤oṭu *
tĕruvil til̤aikkiṉṟa nampī * cĕykiṉṟa tīmaikal̤ kaṇṭiṭṭu **
uruki ĕṉ kŏṅkaiyiṉ tīm pāl * oṭṭantu pāyntiṭukiṉṟa *
maruvik kuṭaṅkāl iruntu * vāy mulai uṇṇa nī vārāy-3

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1880. O Nambi, as you play happily on the street with the rich, handsome cowherd children my heart melts seeing your naughty play and milk spills from my breasts onto the ground. Come embrace me, sit on my lap and drink milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவில் பொலிந்த செல்வம் செழித்த; எழில் ஆர் ஆயர் தம் அழகிய ஆயர்; பிள்ளைகளோடு பிள்ளைகளோடு; தெருவில் தெருவில்; திளைக்கின்ற விளையாடும்; நம்பீ! நம்பீ!; செய்கின்ற நீ செய்துவரும்; தீமைகள் விளையாட்டுக்களை; கண்டிட்டு உருகி பார்த்து மகிழ்ந்து உருகி; என் கொங்கையின் என் ஸ்தனங்களில்; தீம் பால் ஓட்டந்து இனிய பால் வெள்ளமிட்டு; பாய்ந்திடுகின்ற பாய்ந்தோடுகின்றது; மருவிக் குடங்கால் அப்படி வீணாகாதபடி; இருந்து நீ இங்கு வந்து; வாய் முலை மடியிலமர்ந்து; உண்ண நீ வாராய் பாலை உண்ண வாராய்

PT 10.4.4

1881 மக்கள்பெறுதவம்போலும் வையத்துவாழும்மடவார் *
மக்கள்பிறர்கண்ணுக்கொக்கும் முதல்வா! மதக்களிறன்னாய்! *
செக்கரிளம்பிறைதன்னைவாங்கி நின்கையில்தருவன் *
ஒக்கலைமேலிருந்துஅம்மமுகந்து இனிதுண்ணநீவாராய்.
1881 மக்கள் பெறு தவம் போலும் * வையத்து வாழும் மடவார் *
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் * முதல்வா மதக் களிறு அன்னாய் **
செக்கர் இளம் பிறை தன்னை * வாங்கி நின் கையில் தருவன் *
ஒக்கலைமேல் இருந்து * அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் 4
1881 makkal̤ pĕṟu tavam polum- * vaiyattu vāzhum maṭavār *
makkal̤ piṟar kaṇṇukku-ŏkkum * mutalvā matak kal̤iṟu aṉṉāy **
cĕkkar il̤am piṟai-taṉṉai * vāṅki niṉ kaiyil taruvaṉ *
ŏkkalaimel iruntu * ammam ukantu iṉitu uṇṇa nī vārāy-4

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1881. When people look at you they think that you are the result of the tapas that all women have ever done. You, the first one of the world, are strong as a rutting elephant. I will catch the crescent moon in the red evening sky and give it in your hands. O dear one, come and sit on my lap and drink milk happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வையத்து வாழும் நாட்டில் வாழும்; மடவார் பெண்ளுக்கும்; மக்கள் பிறர் மற்றவர்; கண்ணுக்கு கண்களுக்கும்; தவம் போலும் நோன்பு நோற்ற தவமே; மக்கள் பெறு ஒரு குழந்தையோ என்று; ஒக்கும் முதல்வா! தோன்றும் முதல்வனே!; மதக்களிறு மதம் பிடித்த யானை; அன்னாய்! போன்றவனே!; செக்கர் இளம்பிறை தன்னை சிவந்த சந்திரனை; வாங்கி நின் பிடித்து உன்; கையில் தருவன் கையில் தருவேன்; ஒக்கலைமேல் என் இடுப்பிலே; உகந்து இருந்து மகிழ்ந்த வாறு இருந்து கொண்டு; அம்மம் இனிது இனிய பாலை; உண்ண நீ வாராய் நீ உண்ண வாராய்

PT 10.4.5

1882 மைத்தகருங்குஞ்சிமைந்தா! மாமருதூடுநடந்தாய்! *
வித்தகனே! விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா! *
இத்தனைபோதன்றிஎன்தன் கொங்கைசுரந்திருக்ககில்லா *
உத்தமனே! அம்மமுண்ணாய் உலகளந்தாய்! அம்முண்ணாய்.
1882 மைத்த கருங் குஞ்சி மைந்தா * மா மருது ஊடு நடந்தாய் *
வித்தகனே விரையாதே * வெண்ணெய் விழுங்கும் விகிர்தா **
இத்தனை போது அன்றி என் தன் * கொங்கை சுரந்து இருக்ககில்லா *
உத்தமனே அம்மம் உண்ணாய் * உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் 5
1882 maitta karuṅ kuñci maintā * mā marutu ūṭu naṭantāy *
vittakaṉe viraiyāte * vĕṇṇĕy vizhuṅkum vikirtā **
ittaṉai potu aṉṟi ĕṉ-taṉ * kŏṅkai curantu irukkakillā *
uttamaṉe ammam uṇṇāy * ulaku al̤antāy ammam uṇṇāy-5

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1882. My son with hair dark as kohl, you walked between the marudu trees and destroyed the Asuras. O clever one, you steal and swallow butter. Do not be in a hurry. The milk from my breasts doesn’t want to wait. O good one who measured the world, come and drink my milk, come and drink my milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைத்த மைபோன்ற; கருங் குஞ்சி கறுத்த தலைமுடியுள்ள; மைந்தா! மைந்தனே!; மா மருது பெரிய மருதமரங்களின்; ஊடு இடையே; நடந்தாய்! தவழ்ந்து சென்றவனே!; வித்தகனே! ஆச்சரியமானவனே!; விரையாதே மெள்ள நடந்து வந்து; வெண்ணெய் வெண்ணெய்; விழுங்கும் விகிர்தா! விழுங்கும் அழகனே!; உலகளந்தாய்! உலகம் அளந்தவனே!; என் தன் கொங்கை என் ஸ்தனங்களில் பால்; இத்தனை போது இத்தனை போது; சுரந்து சுரந்தது பொறுத்தது; அன்றி இருக்ககில்லா இனி பொறுக்காது; உத்தமனே! உத்தமனே!; அம்மம் உண்ணாய்! பாலைப் பருக வாராய்

PT 10.4.6

1883 பிள்ளைகள்செய்வனசெய்யாய் பேசின்பெரிதும்வலியை *
கள்ளம்மனத்திலுடையை காணவேதீமைகள்செய்தி *
உள்ளமுருகிஎன்கொங்கை ஓட்டந்துபாய்ந்திடுகின்ற *
பள்ளிக்குறிப்புச்செய்யாதே பாலமுதுண்ணநீவாராய்.
1883 பிள்ளைகள் செய்வன செய்யாய் * பேசின் பெரிதும் வலியை *
கள்ளம் மனத்தில் உடையை * காணவே தீமைகள் செய்தி **
உள்ளம் உருகி என் கொங்கை * ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
பள்ளிக் குறிப்புச் செய்யாதே * பால் அமுது உண்ண நீ வாராய் 6
1883 pil̤l̤aikal̤ cĕyvaṉa cĕyyāy * peciṉ pĕritum valiyai *
kal̤l̤am maṉattil uṭaiyai * kāṇave tīmaikal̤ cĕyti **
ul̤l̤am uruki ĕṉ kŏṅkai * oṭṭantu pāyntiṭukiṉṟa *
pal̤l̤ik kuṟippuc cĕyyāte * pāl amutu uṇṇa nī vārāy-6

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1883. You are not a good child if you do what other naughty children do. You speak more cleverly than others and like a thief you do many naughty deeds making my heart melt as I see you. Milk is spilling from my breasts. Don’t pretend you are sleepy. Come and drink milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிள்ளைகள் மற்ற பிள்ளைகள்; செய்வன செய்வதை; செய்யாய் நீ செய்வதில்லை; பேசின் உன்னைப் பற்றிச் சொல்லவேண்டுமானால்; பெரிதும் வலியை உன் வலிமையையும்; மனத்தில் உன் மனதிலுள்ள; கள்ளம் உடையை கள்ளத்தனதையும் தான்; காணவே கூறவேண்டும் பிறர் காண; தீமைகள் ஆச்சர்யமான தீம்புகள்; செய்தி செய்யும் உன்னை; உள்ளம் உருகி கண்டு என் உள்ளம் உருகி; என் கொங்கை என் ஸ்தனங்களிலிருந்து; ஓட்டந்து பால் வெள்ளமெனப் பெருகி; பாய்ந்திடுகின்ற பாய்கிறது; பள்ளிக் குறிப்பு தூங்குவது போல் பாசாங்கு; செய்யாதே பால்அமுது செய்யாமல் பாலை; உண்ண நீ வாராய் பருக நீ வாராய்

PT 10.4.7

1884 தன்மகனாகவன்பேய்ச்சி தான்முலையுண்ணக்கொடுக்க *
வன்மகனாய்அவளாவிவாங்கி முலையுண்டநம்பீ! *
நன்மகளாய்மகளோடு நானிலமங்கைமணாளா! *
என்மகனே! அம்மமுண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே.
1884 தன் மகன் ஆக வன் பேய்ச்சி * தான் முலை உண்ணக் கொடுக்க *
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி * முலை உண்ட நம்பீ **
நன் மகள் ஆய்மகளோடு * நானில மங்கை மணாளா *
என் மகனே அம்மம் உண்ணாய் * என் அம்மம் சேமம் உண்ணாயே 7
1884 taṉ makaṉ āka vaṉ peycci * tāṉ mulai uṇṇak kŏṭukka *
vaṉ makaṉ āy aval̤ āvi vāṅki * mulai uṇṭa nampī **
naṉ makal̤ āymakal̤oṭu * nāṉila-maṅkai maṇāl̤ā *
ĕṉ makaṉe ammam uṇṇāy * ĕṉ ammam cemam uṇṇāye-7

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1884. When Putanā, the devil woman, came as a mother and fed you the milk from her breasts, O Nambi, you drank her poisonous milk and killed her. You are the beloved of earth goddess and of beautiful Nappinnai, daughter of a cowherd. My son, drink milk. Come and eat your food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வன் பேய்ச்சி கொடிய பூதனையானவள்; தன் மகனாக உன்னைத் தன் மகன் போல; தான் முலை நினைத்து தான் பால்; உண்ண கொடுக்க உண்ணக் கொடுக்க; வன் மகனாய் வலிய ஆண்பிள்ளையாய்; அவள் ஆவி வாங்க அவள் உயிரை வாங்கி; முலை உண்ட நம்பி! பாலைப் பருகிய நம்பி!; நன் மகள் சிறந்த; ஆய்மகளோடு நப்பின்னைக்கும்; நானில மங்கை பூமாதேவிக்கும்; மணாளா! மணாளனே!; என் மகனே! என் மகனே!; என் அம்மம் சேமம் நன்மை பயக்கும் பாலைப் பருக; உண்ணாயே நீ வாராய்

PT 10.4.8

1885 உந்தம்அடிகள்முனிவர் உன்னைநான்என்கையில்கோலால் *
நொந்திடமோதவுங்கில்லேன் நுங்கள்தம்ஆநிரை யெல்லாம் *
வந்துபுகுதரும்போது வானிடைத்தெய்வங்கள்காண *
அந்தியம்போதுஅங்குநில்லேல் ஆழியங்கையனே! வாராய்.
1885 உந்தம் அடிகள் முனிவர் * உன்னை நான் என் கையில் கோலால் *
நொந்திட மோதவும் கில்லேன் * நுங்கள் தம் ஆ நிரை எல்லாம் **
வந்து புகுதரும் போது * வானிடைத் தெய்வங்கள் காண *
அந்தி அம் போது அங்கு நில்லேல் * ஆழி அம் கையனே வாராய் 8
1885 untam aṭikal̤ muṉivar * uṉṉai nāṉ ĕṉ kaiyil kolāl *
nŏntiṭa motavum killeṉ * nuṅkal̤-tam ā-nirai ĕllām **
vantu pukutarum potu * vāṉiṭait tĕyvaṅkal̤ kāṇa *
anti am potu aṅku nillel * āzhi am kaiyaṉe vārāy-8

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1885. If I hit you with the stick I’m holding, your relatives will be angry with me. I am worried but I won’t hurt you. When the cows return home, the gods in the sky will see them. Don’t stand in the street in the evening, O lord with a discus in your hands. Come to me and eat your food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உந்தம் அடிகள் நந்தகோபன்; முனிவர் மகன் நீ யோவெனில்; என் கையில் என் கையிலுள்ள; கோலால் கோலால்; உன்னை நான் உன்னை நான்; நொந்திட நோகும்படி; மோதவும் கில்லேன் அடிக்க மாட்டேன்; நுங்கள் தம் உங்களுடைய; ஆ நிரை எல்லாம் பசுக்கூட்டங்களெல்லாம்; புகுதரும் போது மேய்ந்த பின் வரும் போது; வானிடை தெய்வங்கள் ஆகாசத்திலுள்ள தேவர்கள்; காண காணுமாறு; அந்தி அம் போது மாலைப் பொழுது; அங்கு நில்லேல் நாற்சந்தியிலே நிற்கவேண்டாம்; ஆழி அம் சக்கரத்தை; கையனே! கையிலுடையவனே!; வாராய் என்னருகே வந்துவிடு

PT 10.4.9

1886 பெற்றத்தலைவன்எங்கோமான் பேரருளாளன்மதலாய்! *
சுற்றக்குழாத்திளங்கோவே! தோன்றியதொல்புகழாளா! *
கற்றினந்தோறும்மறித்துக் கானம்திரிந்தகளிறே! *
எற்றுக்கென்அம்மமுண்ணாதே எம்பெருமான்! இருந்தாயே?
1886 பெற்றத் தலைவன் எம் கோமான் * பேர் அருளாளன் மதலாய் *
சுற்றக் குழாத்து இளங் கோவே * தோன்றிய தொல் புகழாளா **
கற்று இனம் தோறும் மறித்துக் * கானம் திரிந்த களிறே *
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே * எம் பெருமான் இருந்தாயே 9
1886 pĕṟṟat talaivaṉ ĕm komāṉ * per arul̤āl̤aṉ matalāy *
cuṟṟak kuzhāttu il̤aṅ kove * toṉṟiya tŏl pukazhāl̤ā **
kaṟṟu iṉam toṟum maṟittuk * kāṉam tirinta kal̤iṟe *
ĕṟṟukku ĕṉ ammam uṇṇāte * ĕm pĕrumāṉ iruntāye-9

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1886. You, great as an elephant, the son of the generous Nandan, the chief of the cowherds, are a prince among your relatives, famous from ancient times. You graze the cows every day in the forest. Why haven’t you come to eat food before this?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெற்றத் தலைவன் பசுக்களுக்குத் தலைவனே!; என் கோமான் எம் பெருமானே!; பேரருளாளன் மஹா தயாளுவான நந்தகோபனின்; மதலாய் மகனே!; சுற்ற குழாத்து சுற்றதாருக்கெல்லாம்; இளங் கோவே! யுவராஜாவானவனே!; தோன்றிய தொல் எங்கும் பரவிய; புகழாளா! புகழுடையவனே!; எம் பெருமான்! எம் பெருமானே!; கானம் தோறும் காடுகள் தோறும்; கற்று இனம் கன்றுகளின் கூட்டங்களை; மறித்து மடக்கி மேய்த்து; திரிந்த திரிந்த; களிறே! யானை போன்றவனே!; எற்றுக்கு என் அம்மம் ஏன் என்னிடம்; உண்ணாதே பால் பருகாமல்; இருந்தாயே இருந்தாய்

PT 10.4.10

1887 இம்மைஇடர்கெடவேண்டி ஏந்தெழில்தோள்கலிகன்றி *
செம்மைப்பனுவல்நூல்கொண்டு செங்கணெடியவன்தன்னை *
அம்மமுண்ணென்றுரைக்கின்ற பாடலிவைஐந்துமைந்தும் *
மெய்ம்மைமனத்துவைத்தேத்த விண்ணவராகலுமாமே. (2)
1887 ## இம்மை இடர் கெட வேண்டி * ஏந்து எழில் தோள் கலிகன்றி *
செம்மைப் பனுவல் நூல்கொண்டு * செங்கண் நெடியவன் தன்னை **
அம்மம் உண் என்று உரைக்கின்ற * பாடல் இவை ஐந்தும் ஐந்தும் *
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த * விண்ணவர் ஆகலும் ஆமே 10
1887 ## immai iṭar kĕṭa veṇṭi * entu ĕzhil tol̤ kalikaṉṟi *
cĕmmaip paṉuval nūlkŏṇṭu * cĕṅkaṇ nĕṭiyavaṉ-taṉṉai **
ammam uṇ ĕṉṟu uraikkiṉṟa * pāṭal ivai aintum aintum *
mĕymmai maṉattu vaittu etta * viṇṇavar ākalum āme-10

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1887. Kaliyan, the poet with handsome heroic arms composed ten divine pāsurams on the lovely-eyed Nedumal. If devotees learn and recite these ten pāsurams that describe how Yashodā called Kannan to come and eat and if they worship the true god, they will go to the spiritual world and be with the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழில் ஏந்து அழகிய; தோள் தோள்களையுடைய; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; இம்மை இப்பிறவியிலுண்டான; இடர் துயரம் எல்லாம்; கெட வேண்டி அழியவேண்டி; செங்கண் புண்டரீகாக்ஷனான; நெடியவன் தன்னை பெருமானைக் குறித்து; செம்மை பனுவல் நூல் சிறந்த சாஸ்திர நூலை; கொண்டு அருளிச்செய்த; அம்மம் உண் என்று அம்மம் உண்ண வா என்று; உரைக்கின்ற பாடல் அழைக்கும் இந்த பாடலான; இவை ஐந்தும் ஐந்தும் பத்துப் பாசுரங்களையும்; மெய்ம்மை மனத்து வைத்து உண்மை மனத்தோடு; ஏத்த அனுஸந்திப்பார்களாகில்; விண்ணவர் நித்யஸூரிகளாக; ஆகலும் ஆமே ஆவார்கள்