(கீழ் பூதனை பால் உண்ட தீமை அனுபவம் நம்மைக் கட்டவும் அடிக்கவும் அழைக்கிறாள் ஆகும் அம்மம் உண்ண என்றது வியாஜ்யம் மாத்திரம் என்று ஓட கோலும் கையுமாக பின் தொடர்ந்து அடிக்க மாட்டாமல் அச்சமூட்டி அழைக்கிறாள் )
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகு தரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல்