PT 10.4.6

பாசாங்கு செய்யாதே; தாய்ப்பால் பருகிட வா

1883 பிள்ளைகள்செய்வனசெய்யாய் பேசின்பெரிதும்வலியை *
கள்ளம்மனத்திலுடையை காணவேதீமைகள்செய்தி *
உள்ளமுருகிஎன்கொங்கை ஓட்டந்துபாய்ந்திடுகின்ற *
பள்ளிக்குறிப்புச்செய்யாதே பாலமுதுண்ணநீவாராய்.
1883 pil̤l̤aikal̤ cĕyvaṉa cĕyyāy * peciṉ pĕritum valiyai *
kal̤l̤am maṉattil uṭaiyai * kāṇave tīmaikal̤ cĕyti **
ul̤l̤am uruki ĕṉ kŏṅkai * oṭṭantu pāyntiṭukiṉṟa *
pal̤l̤ik kuṟippuc cĕyyāte * pāl amutu uṇṇa nī vārāy-6

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1883. You are not a good child if you do what other naughty children do. You speak more cleverly than others and like a thief you do many naughty deeds making my heart melt as I see you. Milk is spilling from my breasts. Don’t pretend you are sleepy. Come and drink milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிள்ளைகள் மற்ற பிள்ளைகள்; செய்வன செய்வதை; செய்யாய் நீ செய்வதில்லை; பேசின் உன்னைப் பற்றிச் சொல்லவேண்டுமானால்; பெரிதும் வலியை உன் வலிமையையும்; மனத்தில் உன் மனதிலுள்ள; கள்ளம் உடையை கள்ளத்தனதையும் தான்; காணவே கூறவேண்டும் பிறர் காண; தீமைகள் ஆச்சர்யமான தீம்புகள்; செய்தி செய்யும் உன்னை; உள்ளம் உருகி கண்டு என் உள்ளம் உருகி; என் கொங்கை என் ஸ்தனங்களிலிருந்து; ஓட்டந்து பால் வெள்ளமெனப் பெருகி; பாய்ந்திடுகின்ற பாய்கிறது; பள்ளிக் குறிப்பு தூங்குவது போல் பாசாங்கு; செய்யாதே பால்அமுது செய்யாமல் பாலை; உண்ண நீ வாராய் பருக நீ வாராய்