PT 10.4.2

விளையாட்டுகள் போதும்; தாய்ப்பால் பருக வா

1879 வங்கமறிகடல்வண்ணா! மாமுகிலேயொக்கும்நம்பீ! *
செங்கண்நெடியதிருவே! செங்கமலம்புரைவாயா! *
கொங்கைசுரந்திடஉன்னைக் கூவியும்காணாதிருந்தேன் *
எங்கிருந்துஆயர்களோடும் என்விளையாடுகின்றாயே?
1879 vaṅka maṟi kaṭal vaṇṇā * mā mukile ŏkkum nampī *
cĕṅkaṇ nĕṭiya tiruve * cĕṅkamalam purai vāyā **
kŏṅkai curantiṭa uṉṉaik * kūviyum kāṇātirunteṉ *
ĕṅku iruntu āyarkal̤oṭum * ĕṉ vil̤aiyāṭukiṉṟāye?-2

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1879. O Nambi, colored like the ocean with rolling waves and like a dark cloud, you are tall and precious, with lovely eyes, and your mouth is red like a beautiful lotus. Milk is coming from my breasts. I called you loudly but I have not seen you. Where are you? Are you playing with the cowherd children?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்க கப்பல்களொடு கூடின; மறி அலைகள் மறித்தெழும்; கடல்! கடலைப் போன்ற; வண்ணா நிறமுடையவனே!; மா முகிலே ஒக்கும் மேகத்தை ஒத்த; நம்பீ! எம்பிரானே!; நெடிய நீண்ட; செங்கண் சிவந்த கண்களையுடைய; திருவே! ஸ்ரீமானே!; செங்கமலம் செந்தாமரைப் போன்ற; புரை வாயா! முகமுடையவனே!; கொங்கை ஸ்தனங்களில்; சுரந்திட பால் சுரக்க; உன்னைக் உன்னை; கூவியும் கூவி அழைத்தும் உன்னை; காணாது இருந்தேன் காணாமல் இருந்தேன்; ஆயர்களோடும் என் ஆயர்களோடு; எங்கு இருந்து எங்கு இருந்தாய் கண்ணா?