Chapter 4

Yashoda calls Kannan to come and drink milk - (சந்த மலர்)

கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
Yashoda calls Kannan to come and drink milk - (சந்த மலர்)
Standing at the extreme of enmity, the demons' voices recount the victorious deeds of Rama, which the āzhvār experiences. In a similar manner, filled with supreme love, the āzhvār experiences Krishna through the verses of devotees standing at the pinnacle of devotion. Assuming the role of Yashoda, like Periyāzhvār, the āzhvār calls the child Krishna to come and drink milk.
பகைமையின் எல்லையில் நின்ற அரக்கர் வாயினால் இராமனின் வெற்றிச் செயல்களை அனுபவித்த ஆழ்வார், பிரேமத்தில் எல்லையில் நிற்கும் அன்பர்களின் பாசுரங்களால் கண்ணனை அனுபவிக்கிறார். யசோதை நிலையில் இருந்துகொண்டு, பெரியாழ்வாரைப் போல் இவரும் குழந்தைக் கண்ணனை அம்மம். உண்ண அழைக்கிறார்.
Verses: 1878 to 1887
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
  • PT 10.4.1
    1878 ## சந்த மலர்க் குழல் தாழத் * தான் உகந்து ஓடித் தனியே
    வந்து * என் முலைத்தடம் தன்னை வாங்கி * நின் வாயில் மடுத்து **
    நந்தன் பெறப் பெற்ற நம்பீ * நான் உகந்து உண்ணும் அமுதே *
    எந்தை பெருமானே உண்ணாய் * என் அம்மம் சேமம் உண்ணாயே 1
  • PT 10.4.2
    1879 வங்க மறி கடல் வண்ணா * மா முகிலே ஒக்கும் நம்பீ *
    செங்கண் நெடிய திருவே * செங்கமலம் புரை வாயா **
    கொங்கை சுரந்திட உன்னைக் * கூவியும் காணாதிருந்தேன் *
    எங்கு இருந்து ஆயர்களோடும் * என் விளையாடுகின்றாயே? 2
  • PT 10.4.3
    1880 திருவில் பொலிந்த எழில் ஆர் * ஆயர் தம் பிள்ளைகளோடு *
    தெருவில் திளைக்கின்ற நம்பீ * செய்கின்ற தீமைகள் கண்டிட்டு **
    உருகி என் கொங்கையின் தீம் பால் * ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
    மருவிக் குடங்கால் இருந்து * வாய் முலை உண்ண நீ வாராய் 3
  • PT 10.4.4
    1881 மக்கள் பெறு தவம் போலும் * வையத்து வாழும் மடவார் *
    மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் * முதல்வா மதக் களிறு அன்னாய் **
    செக்கர் இளம் பிறை தன்னை * வாங்கி நின் கையில் தருவன் *
    ஒக்கலைமேல் இருந்து * அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் 4
  • PT 10.4.5
    1882 மைத்த கருங் குஞ்சி மைந்தா * மா மருது ஊடு நடந்தாய் *
    வித்தகனே விரையாதே * வெண்ணெய் விழுங்கும் விகிர்தா **
    இத்தனை போது அன்றி என் தன் * கொங்கை சுரந்து இருக்ககில்லா *
    உத்தமனே அம்மம் உண்ணாய் * உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் 5
  • PT 10.4.6
    1883 பிள்ளைகள் செய்வன செய்யாய் * பேசின் பெரிதும் வலியை *
    கள்ளம் மனத்தில் உடையை * காணவே தீமைகள் செய்தி **
    உள்ளம் உருகி என் கொங்கை * ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *
    பள்ளிக் குறிப்புச் செய்யாதே * பால் அமுது உண்ண நீ வாராய் 6
  • PT 10.4.7
    1884 தன் மகன் ஆக வன் பேய்ச்சி * தான் முலை உண்ணக் கொடுக்க *
    வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி * முலை உண்ட நம்பீ **
    நன் மகள் ஆய்மகளோடு * நானில மங்கை மணாளா *
    என் மகனே அம்மம் உண்ணாய் * என் அம்மம் சேமம் உண்ணாயே 7
  • PT 10.4.8
    1885 உந்தம் அடிகள் முனிவர் * உன்னை நான் என் கையில் கோலால் *
    நொந்திட மோதவும் கில்லேன் * நுங்கள் தம் ஆ நிரை எல்லாம் **
    வந்து புகுதரும் போது * வானிடைத் தெய்வங்கள் காண *
    அந்தி அம் போது அங்கு நில்லேல் * ஆழி அம் கையனே வாராய் 8
  • PT 10.4.9
    1886 பெற்றத் தலைவன் எம் கோமான் * பேர் அருளாளன் மதலாய் *
    சுற்றக் குழாத்து இளங் கோவே * தோன்றிய தொல் புகழாளா **
    கற்று இனம் தோறும் மறித்துக் * கானம் திரிந்த களிறே *
    எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே * எம் பெருமான் இருந்தாயே 9
  • PT 10.4.10
    1887 ## இம்மை இடர் கெட வேண்டி * ஏந்து எழில் தோள் கலிகன்றி *
    செம்மைப் பனுவல் நூல்கொண்டு * செங்கண் நெடியவன் தன்னை **
    அம்மம் உண் என்று உரைக்கின்ற * பாடல் இவை ஐந்தும் ஐந்தும் *
    மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த * விண்ணவர் ஆகலும் ஆமே 10