(அச்சம் படுத்திப் பார்த்தாள் அது கார்யகரம் ஆகாமல் இருக்கவே மிகவும் கொண்டாடி அழைக்கிறாள் )
பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே——10-4-9-
பெற்றம் தலைவன் என் கோமான் – பசுக்களுக்கு பிரதானன் ஆனவனே – மேல் விழுந்து முலை உண்ண