PT 10.4.7

பூதகியைக் கொன்றவனே! தாய்ப்பால் பருகு

1884 தன்மகனாகவன்பேய்ச்சி தான்முலையுண்ணக்கொடுக்க *
வன்மகனாய்அவளாவிவாங்கி முலையுண்டநம்பீ! *
நன்மகளாய்மகளோடு நானிலமங்கைமணாளா! *
என்மகனே! அம்மமுண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே.
1884 taṉ makaṉ āka vaṉ peycci * tāṉ mulai uṇṇak kŏṭukka *
vaṉ makaṉ āy aval̤ āvi vāṅki * mulai uṇṭa nampī **
naṉ makal̤ āymakal̤oṭu * nāṉila-maṅkai maṇāl̤ā *
ĕṉ makaṉe ammam uṇṇāy * ĕṉ ammam cemam uṇṇāye-7

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1884. When Putanā, the devil woman, came as a mother and fed you the milk from her breasts, O Nambi, you drank her poisonous milk and killed her. You are the beloved of earth goddess and of beautiful Nappinnai, daughter of a cowherd. My son, drink milk. Come and eat your food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வன் பேய்ச்சி கொடிய பூதனையானவள்; தன் மகனாக உன்னைத் தன் மகன் போல; தான் முலை நினைத்து தான் பால்; உண்ண கொடுக்க உண்ணக் கொடுக்க; வன் மகனாய் வலிய ஆண்பிள்ளையாய்; அவள் ஆவி வாங்க அவள் உயிரை வாங்கி; முலை உண்ட நம்பி! பாலைப் பருகிய நம்பி!; நன் மகள் சிறந்த; ஆய்மகளோடு நப்பின்னைக்கும்; நானில மங்கை பூமாதேவிக்கும்; மணாளா! மணாளனே!; என் மகனே! என் மகனே!; என் அம்மம் சேமம் நன்மை பயக்கும் பாலைப் பருக; உண்ணாயே நீ வாராய்