PT 10.4.3

தாய்ப்பால் சுரக்கின்றது: பருகுதற்கு வா

1880 திருவிற்பொலிந்தஎழிலார் ஆயர்தம்பிள்ளைகளோடு *
தெருவில்திளைக்கின்றநம்பீ! செய்கின்றதீமைகள் கண்டிட்டு *
உருகிஎன்கொங்கையின்தீம்பால் ஓட்டந்துபாய்ந்திடுகின்ற *
மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ணநீவாராய்.
1880 tiruvil pŏlinta ĕzhil ār * āyar-tam pil̤l̤aikal̤oṭu *
tĕruvil til̤aikkiṉṟa nampī * cĕykiṉṟa tīmaikal̤ kaṇṭiṭṭu **
uruki ĕṉ kŏṅkaiyiṉ tīm pāl * oṭṭantu pāyntiṭukiṉṟa *
maruvik kuṭaṅkāl iruntu * vāy mulai uṇṇa nī vārāy-3

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1880. O Nambi, as you play happily on the street with the rich, handsome cowherd children my heart melts seeing your naughty play and milk spills from my breasts onto the ground. Come embrace me, sit on my lap and drink milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவில் பொலிந்த செல்வம் செழித்த; எழில் ஆர் ஆயர் தம் அழகிய ஆயர்; பிள்ளைகளோடு பிள்ளைகளோடு; தெருவில் தெருவில்; திளைக்கின்ற விளையாடும்; நம்பீ! நம்பீ!; செய்கின்ற நீ செய்துவரும்; தீமைகள் விளையாட்டுக்களை; கண்டிட்டு உருகி பார்த்து மகிழ்ந்து உருகி; என் கொங்கையின் என் ஸ்தனங்களில்; தீம் பால் ஓட்டந்து இனிய பால் வெள்ளமிட்டு; பாய்ந்திடுகின்ற பாய்ந்தோடுகின்றது; மருவிக் குடங்கால் அப்படி வீணாகாதபடி; இருந்து நீ இங்கு வந்து; வாய் முலை மடியிலமர்ந்து; உண்ண நீ வாராய் பாலை உண்ண வாராய்