Chapter 5

Gopis ask Kannan to clap his hands - (பூங் கோதை)

சப்பாணி கொட்ட வேண்டுதல்
Gopis ask Kannan to clap his hands - (பூங் கோதை)
Clapping both hands together is called "Sappani," and this hand-clapping game is a child's play. In this manner, the āzhvār, assuming the role of Yashoda, calls Krishna to play and enjoy, asking Him to engage in this playful activity.
இரு கைகளையும் சேர்த்துத் தட்டுதல் சப்பாணி எனப்படும் இங்ஙனம் கை கொட்டி விளையாடுவது குழந்தையின் விளையாட்டு. இவ்வாறு விளையாடுமாறு யசோதை நிலையில் இருந்து கொண்டு இவ்வாழ்வார் கண்ணனை வேண்டுகிறார்.
Verses: 1888 to 1897
Grammar: Kaliththāḻisai / கலித்தாழிசை
  • PT 10.5.1
    1888 ## பூங் கோதை ஆய்ச்சி * கடை வெண்ணெய் புக்கு உண்ண *
    ஆங்கு அவள் ஆர்த்துப் * புடைக்கப் புடையுண்டு **
    ஏங்கி இருந்து * சிணுங்கி விளையாடும் *
    ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி * ஒளி மணி வண்ணனே சப்பாணி 1
  • PT 10.5.2
    1889 தாயர் மனங்கள் தடிப்பத் * தயிர் நெய் உண்டு
    ஏ எம் பிராக்கள் * இரு நிலத்து எங்கள் தம் **
    ஆயர் அழக * அடிகள் * அரவிந்த
    வாயவனே கொட்டாய் சப்பாணி * மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2
  • PT 10.5.3
    1890 தாம் மோர் உருட்டித் * தயிர் நெய் விழுங்கிட்டு *
    தாமோ தவழ்வர் என்று * ஆய்ச்சியர் தாம்பினால் **
    தாம் மோதரக் கையால் * ஆர்க்கத் தழும்பு இருந்த *
    தாமோதரா கொட்டாய் சப்பாணி * தாமரைக் கண்ணனே சப்பாணி 3
  • PT 10.5.4
    1891 பெற்றார் தளை கழலப் * பேர்ந்து அங்கு அயல் இடத்து *
    உற்றார் ஒருவரும் இன்றி * உலகினில் **
    மற்றாரும் அஞ்சப் போய் * வஞ்சப் பெண் நஞ்சு உண்ட *
    கற்றாயனே கொட்டாய் சப்பாணி * கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி 4
  • PT 10.5.5
    1892 சோத்து என நின்னைத் * தொழுவன் வரம் தர *
    பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் ** பெரியன
    ஆய்ச்சியர் * அப்பம் தருவர் * அவர்க்காகச்
    சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி * தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி 5
  • PT 10.5.6
    1893 கேவலம் அன்று * உன் வயிறு வயிற்றுக்கு *
    நான் அவல் அப்பம் தருவன் ** கருவிளைப்
    பூ அலர் நீள் முடி * நந்தன் தன் போர் ஏறே *
    கோவலனே கொட்டாய் சப்பாணி * குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி 6
  • PT 10.5.7
    1894 புள்ளினை வாய் பிளந்து * பூங் குருந்தம் சாய்த்து *
    துள்ளி விளையாடி * தூங்கு உறி வெண்ணெயை **
    அள்ளிய கையால் * அடியேன் முலை நெருடும் *
    பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி * பேய் முலை உண்டானே சப்பாணி 7
  • PT 10.5.8
    1895 யாயும் பிறரும் * அறியாத யாமத்து *
    மாய வலவைப் * பெண் வந்து முலை தர **
    பேய் என்று அவளைப் * பிடித்து உயிர் உண்ட *
    வாயவனே கொட்டாய் சப்பாணி * மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி 8
  • PT 10.5.9
    1896 கள்ளக் குழவி ஆய்க் * காலால் சகடத்தை *
    தள்ளி உதைத்திட்டுத் * தாய் ஆய் வருவாளை **
    மெள்ளத் தொடர்ந்து * பிடித்து ஆர் உயிர் உண்ட *
    வள்ளலே கொட்டாய் சப்பாணி * மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 9
  • PT 10.5.10
    1897 ## கார் ஆர் புயல் கைக் * கலிகன்றி மங்கையர் கோன் *
    பேராளன் நெஞ்சில் * பிரியாது இடம்கொண்ட
    சீராளா ** செந்தாமரைக் கண்ணா * தண் துழாய்த் *
    தார் ஆளா கொட்டாய் சப்பாணி * தட மார்வா கொட்டாய் சப்பாணி 10