சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து நந்தன் பெறப் பெற்ற நம்பீ நானுகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-
(அம்மம் சேமம்-க்ஷேமம் கொடுக்கும் தாய் பால் நந்தன் பெறப் பெற்ற நம்பீ—இவன் அவரைத் தகப்பனாய் பெற்றதை அலாப்ய லாபமாக கொண்டானே – -எடுத்த பேராளன் சந்த மலர்-செவ்விப்பூக்கள்