PT 10.4.5

தாய்ப்பால் சுரப்பது நிற்கவில்லை; ஓடிவா

1882 மைத்தகருங்குஞ்சிமைந்தா! மாமருதூடுநடந்தாய்! *
வித்தகனே! விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா! *
இத்தனைபோதன்றிஎன்தன் கொங்கைசுரந்திருக்ககில்லா *
உத்தமனே! அம்மமுண்ணாய் உலகளந்தாய்! அம்முண்ணாய்.
1882 maitta karuṅ kuñci maintā * mā marutu ūṭu naṭantāy *
vittakaṉe viraiyāte * vĕṇṇĕy vizhuṅkum vikirtā **
ittaṉai potu aṉṟi ĕṉ-taṉ * kŏṅkai curantu irukkakillā *
uttamaṉe ammam uṇṇāy * ulaku al̤antāy ammam uṇṇāy-5

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1882. My son with hair dark as kohl, you walked between the marudu trees and destroyed the Asuras. O clever one, you steal and swallow butter. Do not be in a hurry. The milk from my breasts doesn’t want to wait. O good one who measured the world, come and drink my milk, come and drink my milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைத்த மைபோன்ற; கருங் குஞ்சி கறுத்த தலைமுடியுள்ள; மைந்தா! மைந்தனே!; மா மருது பெரிய மருதமரங்களின்; ஊடு இடையே; நடந்தாய்! தவழ்ந்து சென்றவனே!; வித்தகனே! ஆச்சரியமானவனே!; விரையாதே மெள்ள நடந்து வந்து; வெண்ணெய் வெண்ணெய்; விழுங்கும் விகிர்தா! விழுங்கும் அழகனே!; உலகளந்தாய்! உலகம் அளந்தவனே!; என் தன் கொங்கை என் ஸ்தனங்களில் பால்; இத்தனை போது இத்தனை போது; சுரந்து சுரந்தது பொறுத்தது; அன்றி இருக்ககில்லா இனி பொறுக்காது; உத்தமனே! உத்தமனே!; அம்மம் உண்ணாய்! பாலைப் பருக வாராய்