PT 10.4.4

பிறைச் சந்திரனை வாங்கித் தருவேன்: ஓடிவா

1881 மக்கள்பெறுதவம்போலும் வையத்துவாழும்மடவார் *
மக்கள்பிறர்கண்ணுக்கொக்கும் முதல்வா! மதக்களிறன்னாய்! *
செக்கரிளம்பிறைதன்னைவாங்கி நின்கையில்தருவன் *
ஒக்கலைமேலிருந்துஅம்மமுகந்து இனிதுண்ணநீவாராய்.
1881 makkal̤ pĕṟu tavam polum- * vaiyattu vāzhum maṭavār *
makkal̤ piṟar kaṇṇukku-ŏkkum * mutalvā matak kal̤iṟu aṉṉāy **
cĕkkar il̤am piṟai-taṉṉai * vāṅki niṉ kaiyil taruvaṉ *
ŏkkalaimel iruntu * ammam ukantu iṉitu uṇṇa nī vārāy-4

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1881. When people look at you they think that you are the result of the tapas that all women have ever done. You, the first one of the world, are strong as a rutting elephant. I will catch the crescent moon in the red evening sky and give it in your hands. O dear one, come and sit on my lap and drink milk happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வையத்து வாழும் நாட்டில் வாழும்; மடவார் பெண்ளுக்கும்; மக்கள் பிறர் மற்றவர்; கண்ணுக்கு கண்களுக்கும்; தவம் போலும் நோன்பு நோற்ற தவமே; மக்கள் பெறு ஒரு குழந்தையோ என்று; ஒக்கும் முதல்வா! தோன்றும் முதல்வனே!; மதக்களிறு மதம் பிடித்த யானை; அன்னாய்! போன்றவனே!; செக்கர் இளம்பிறை தன்னை சிவந்த சந்திரனை; வாங்கி நின் பிடித்து உன்; கையில் தருவன் கையில் தருவேன்; ஒக்கலைமேல் என் இடுப்பிலே; உகந்து இருந்து மகிழ்ந்த வாறு இருந்து கொண்டு; அம்மம் இனிது இனிய பாலை; உண்ண நீ வாராய் நீ உண்ண வாராய்