PT 1.8.3

கண்ணபிரானே வேங்கடத்தில் உள்ளான்

1020 நின்றமாமருதுஇற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான் *
என்றும்வானவர்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான் *
கன்றிமாரிபொழிந்திடக் கடிதாநிரைக்குஇடர் நீக்குவான் *
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடைநெஞ்சமே!
PT.1.8.3
1020 niṉṟa mā marutu iṟṟu vīzha * naṭanta niṉmalaṉ nemiyāṉ *
ĕṉṟum vāṉavar kaitŏzhum * iṇaittāmarai aṭi ĕm pirāṉ **
kaṉṟi māri pŏzhintiṭak * kaṭitu ā-niraikku iṭar nīkkuvāṉ *
cĕṉṟu kuṉṟam ĕṭuttavaṉ * tiruveṅkaṭam aṭai nĕñcame-3

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1020. He, the faultless One, walked between the twin marudha trees, which were possessed by demons and firmly rooted, causing them to break and fall. He holds the divine discus in His hand. The nityasūris always worship His twin lotus-like feet. When Indra, in anger, poured down heavy rains, He quickly went and lifted the Govardhana hill to shelter the cattle from harm. That same Lord, our protector, now resides at Thiruvēṅkaṭam. O mind, go and reach that place.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்ற அசுரனாக நகராமல் நின்ற; மா மருது பெரிய மருதமரங்களிரண்டும்; இற்று வீழ முறிந்து விழும்படியாக; நடந்த நடுவே போன; நின்மலன் குற்றமற்ற மனதையுடையவனும்; நேமியான் சக்கரத்தை கையிலுடையவனும்; என்றும் வானவர் எப்போதும் நித்யஸூரிகள்; கை தொழும் வணங்கும்; தாமரை இணை தாமரைபோன்ற இரண்டு; அடி எம்பிரான் பாதங்களையுடையவனும்; கன்றி இந்திரன் கோபங்கொண்டு; மாரி மழையை; பொழிந்திட பொழிந்த போது; கடிது ஆ நிரைக்கு பசுக்கூட்டங்களின்; இடர் நீக்குவான் துன்பம் நீக்க; சென்று உடனே வேகமாகச் சென்று; குன்றம் கோவர்த்தன மலையை; எடுத்தவன் குடையாக எடுத்தவன்; திருவேங்கடம் இருக்குமிடம் திருவேங்கடம்; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
ninṛa standing firm (due to being possessed by demon); mā marudhu the big marudha tree; iṝu vīzha to break and fall down; nadandha going through; ninmalan one who has very pure heart; nĕmiyān one who is having divine chakra (in his divine hand); vānavar nithyasūris; enṛum always; kaithozhum worshipping; thāmarai lotus flower like; iṇai adi having a pair of divine feet; em pirān being benefactor; kanṛi (indhra) being angry; māri heavy rain; pozhindhida poured; ā cows-; niraikku for their herds; idar sorrow; nīkkuvān to eliminate and protect them; kadidhu quickly; senṛu went; kunṛam gŏvardhana hill; eduththavan the abode, where sarvĕṣvaran who lifted and held as umbrella, is mercifully residing; thiruvĕngadam thirumalā; nenjamĕ ŏh mind!; adai reach there.