PT 1.8.1

மனமே! வேங்கடம் அடை

1018 கொங்கலர்ந்தமலர்க்குருந்தம்ஒசித்த கோவலன் எம்பிரான் *
சங்குதங்குதடங்கடல் துயில்கொண்டதாமரைக் கண்ணினன் *
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்தம்மிடம் * பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)
PT.1.8.1
1018 ## kŏṅku alarnta malark kuruntam ŏcitta * kovalaṉ ĕm pirāṉ *
caṅku taṅku taṭaṅ kaṭal * tuyil kŏṇṭa tāmaraik kaṇṇiṉaṉ **
pŏṅku pul̤l̤iṉai vāy pil̤anta * purāṇar-tam iṭam * pŏṅku nīrc
cĕṅ kayal til̤aikkum cuṉait * tiruveṅkaṭam aṭai nĕñcame-1

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1018. He rests upon the vast ocean, where conches lie in stillness, our Lord with lotus-like eyes— Kṛṣṇa, the cowherd divine. He crushed the demon Kurundha, who hid in fragrant blooming trees. He split the cruel Bakāsura’s beak with ease and fierce might. That Master of the Purāṇas now dwells at sacred Thiruvēṅkaṭam, where red fish leap in abundant clear springs. Go, O heart, and seek that place!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கு தங்கு சங்குகள் தங்கியிருக்கிற; தடங் கடல் பரந்த பாற்கடலில்; துயில் கொண்ட சயனித்திருப்பவனே!; கோவலன் கண்ணன்; தாமரை தாமரையொத்த; கண்ணினன் கண்களையுடையவனே; கொங்கு மணமிக்க; அலர்ந்த மலர் பூக்கள் நிறைந்த; குருந்தம் குருந்த மரமான அசுரனை; ஒசித்த முறித்து அழித்த; பொங்கு செருக்குடன் இருந்த; புள்ளினை பறவையாக வந்த பகாஸூரன்; வாய் பிளந்த வாயை பிளந்து அழித்த; எம்பிரான் எம்பெருமான்; புராணர் தம் ஸ்ரீ மந்நாராயணன்; இடம் இருக்கு மிடமாயும்; பொங்கு நீர் நீர்வளமுடையதாய்; செங் கயல் சிவந்த கயல் மீன்கள்; திளைக்கும் களித்து வாழும்; சுனை சுனைகளையுடைய; திருவேங்கடம் திருவேங்கடமலையை; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
sangu conches; thangu present; thadam vast; kadal thiruppāṛkadal (kshīrābdhi); thuyil koṇda mercifully resting; thāmaraik kaṇṇinan having lotus flower like divine eyes; kŏvalan being krishṇa; kongu fragrance; alarndha spreading; malar filled with flowers; kurundham kurukkaththi tree (which is possessed by a demon); osiththa one who destroyed; pongu who came fiercely; pul̤l̤inai bakāsuran-s; vāy mouth; pil̤andha one who tore and threw down; em pirān being my benefactor; purāṇar tham sarvĕṣvaran who is popular through purāṇams, his; idam abode; pongu nīr having abundance of water; sem reddish; kayal fish; thil̤aikkum joyfully living; thiruvĕngadam thiruvĕngadam thirumalā; nenjamĕ ŏh mind!; adai try to reach