Chapter 5

Advising the people to worship God before the time of their death - (ஆசைவாய்ச் சென்ற)

பத்தராய் இறப்பார் பெறும் பேறு
Advising the people to worship God before the time of their death - (ஆசைவாய்ச் சென்ற)
Everyone should recite the divine names of the Lord. Those who chant the Lord's names daily will reap great benefits. Their glory is boundless. "Do not wait for a particular time to recite the Lord's name. Can you call upon Him at the moment of death? Can you utter His divine name then? Say it now. Build a temple in your heart, establish the Lord there, and offer flowers of devotion with eagerness," says the āzhvār.
ஒவ்வொருவரும் பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். நாள்தோறும் பகவத் நாமங்களைச் சொல்லுகிறவர்கள் பெரும் பயனடைவார்கள். அவர்கள் பெருமை அளவு கடந்தது. "பகவந் நாமத்தைச் சொல்ல ஒரு காலத்தை எதிர்பார்க்க வேண்டா. உயிர் போகும் நேரத்தில் அவனை அழைக்கமுடியுமா? அவன் திருநாமத்தைச் சொல்லமுடியுமா? இப்போதே சொல்லுங்கள். இதயமாகிற கோயிலைக் கட்டி, அங்குப் பகவானை நிலைநிறுத்தி ஆர்வமாகிற மலரை இட்டு வணங்குங்கள்" என்கிறார் ஆழ்வார்.
Verses: 371 to 380
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become devotees, who only think of the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 4.5.1

371 ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி *
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே *
கேசவா! புருடோத்தமா! என்றும்
கேழலாகியகேடிலீ! என்றும் *
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே. (2)
371 ## ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி * அன்னை அத்தன் என் புத்திரர் பூமி *
வாச வார் குழலாள் என்று மயங்கி * மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே **
கேசவா புருடோத்தமா என்றும் * கேழல் ஆகிய கேடிலீ என்றும் *
பேசுவார் அவர் எய்தும் பெருமை * பேசுவான் புகில் நம் பரம் அன்றே (1)
371 ## ācaivāyc cĕṉṟa cintaiyar āki * aṉṉai attaṉ ĕṉ puttirar pūmi *
vāca vār kuzhalāl̤ ĕṉṟu mayaṅki * māl̤um ĕllaikkaṇ vāy tiṟavāte **
kecavā puruṭottamā ĕṉṟum * kezhal ākiya keṭilī ĕṉṟum *
pecuvār avar ĕytum pĕrumai * pecuvāṉ pukil nam param aṉṟe (1)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

371. Even if people have only thought of their mothers, fathers, children, and wives with fragrant hair, if they close their eyes when they are dying and praise the god and say, “Kesava, Purushothaman, you became a boar and you are faultless, ” they are my dear friends, and no words are enough for me to praise them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னை என்னுடைய தாய்; அத்தன் என்னுடைய தந்தை; என் புத்திரர் என்னுடைய புத்திரர்; பூமி என்னுடைய பூமி; வாசவார் பரிமளம் வீசும்; குழலாள் முடியையுடைய என் மனைவி; என்று என்று வாய் வலிக்க; ஆசைவாய்ச் சென்ற ஆசையின் வழியே போன; சிந்தையர் ஆகி நெஞ்சையுடையராய்; மயங்கி மயங்கி; மாளும் எல்லைகண் உயிர் பிரியும் சமயத்தில்; வாய் வாய் திறந்து; திறவாதே அவர்கள் பேரைச்சொல்லாமல்; கேசவா! கேசவனே!; புருடோத்தமா! என்றும் புருடோத்தமனே! என்றும்; கேழல் ஆகிய வராக ரூபம்கொண்ட; கேடிலீ! என்றும் அழிவில்லாதவனே! என்றும்; பேசுவார் அவர் சொல்லுபவர்கள்; எய்தும் பெருமை அடையக்கூடிய பெருமைகளை; பேசுவான் புகில் பேச ஆரம்பித்தால்; நம் பரம் அன்றே நம்மால் விவரிக்க இயலாது
ācaivāyc cĕṉṟa normally going along the path of desire; cintaiyar āki thinking and; mayaṅki in delusion; ĕṉṟu saying; aṉṉai my mother; attaṉ my father; ĕṉ puttirar my son; pūmi my land; kuḻalāl̤ and my wife with; vācavār fragrant hair; māl̤um ĕllaikaṇ but at the moment of death; vāy by mouth; tiṟavāte instead of telling their names; pecuvār avar if they start saying; kecavā! Kesava!; puruṭottamā! ĕṉṟum o Supreme Being!; keṭilī! ĕṉṟum o imperishable One!; keḻal ākiya who took the form of Varaha; pecuvāṉ pukil if one begins to speak of; ĕytum pĕrumai the greatness those people will achieve; nam param aṉṟe no words are enough

PAT 4.5.2

372 சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து * எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் *
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி *
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைகொடுக்கிலும்போகவொட்டாரே.
372 சீயினால் செறிந்து ஏறிய புண்மேல் * செற்றல் ஏறிக் குழம்பு இருந்து * எங்கும்
ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி * எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் **
வாயினால் நமோ நாரணா என்று * மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி *
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் * பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே (2)
372 cīyiṉāl cĕṟintu eṟiya puṇmel * cĕṟṟal eṟik kuzhampu iruntu * ĕṅkum
īyiṉāl arippu uṇṭu mayaṅki * ĕllaivāyc cĕṉṟu cervataṉ muṉṉam **
vāyiṉāl namo nāraṇā ĕṉṟu * mattakattiṭaik kaikal̤aik kūppi *
poyiṉāl piṉṉai it ticaikku ĕṉṟum * piṇai kŏṭukkilum poka ŏṭṭāre (2)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

372. If people who were never the devotees of Nārāyanan are sick and their wounds become putrid and swarm with flies, and if, fainting and coming to the end of their lives, they fold their hands and worship him, saying “Namo Nārāyana, ” they will never again go near people who are not the devotees of Nārāyanan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீயினால் செறிந்து சீயாலே நிறைந்த; ஏறிய புண்மேல் புண்ணின் மேல்; செற்றல் ஏறி ஈ இருந்து முட்டையிட்டு; குழம்பு இருந்து பழுத்து நீராய்க் கசியுமளவில்; எங்கும் ஈயினால் உடல் முழுதும் ஈயினால்; அரிப்பு உண்டு மயங்கி தினவு ஏற்பபட்டு மயங்கி; எல்லைவாய்ச் சென்று இறுதிக் காலம் வரைச் சென்று; சேர்வதன் முன்னம் அடைவதற்கு முன்னே; வாயினால் வாயாலே; நமோ நாரணா என்று நமோ நாராயணா என்று; மத்தகத்திடை உச்சியிலே; கைகளைக் கூப்பி கைகளைக் கூப்பி; போயினால் பரமபதம் போய்ச் சேர்ந்தால்; பின்னை பிறகு; இத் திசைக்கு இந்த பூலோகத்துக்கு; என்றும் மறுபடியும்; பிணை நித்யமுக்தர்களுக்கு; கொடுக்கிலும் உத்தரவாதம் அளித்தாலும்; போக பரமபதத்திலுள்ளவர்கள் போக; ஒட்டாரே விடமாட்டார்கள்
cervataṉ muṉṉam before; ĕṅkum īyiṉāl body swarmed with flies; cĕṟṟal eṟi with flies; eṟiya puṇmel above the wound; cīyiṉāl cĕṟintu filled with pus; kuḻampu iruntu that is ready to burst open; arippu uṇṭu mayaṅki and body become weak; ĕllaivāyc cĕṉṟu and finally die; vāyiṉāl by mouth if one says; namo nāraṇā ĕṉṟu Namo Narayana; kaikal̤aik kūppi with hands folded; mattakattiṭai on top of the head; poyiṉāl will reach Paramapadam; piṉṉai later; piṇai for those who are eternally liberated; kŏṭukkilum even if a guarantee is given; poka those who are in Paramapadam,; ŏṭṭāre will not allow them to come; it ticaikku to this world; ĕṉṟum again

PAT 4.5.3

373 சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து *
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம் *
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி *
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
373 சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் * சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து *
ஆர் வினவிலும் வாய் திறவாதே * அந்த காலம் அடைவதன் முன்னம் **
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து * மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி *
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (3)
373 corviṉāl pŏrul̤ vaittatu uṇṭākil * cŏllu cŏl ĕṉṟu cuṟṟum iruntu *
ār viṉavilum vāy tiṟavāte * anta kālam aṭaivataṉ muṉṉam **
mārvam ĕṉpatu or koyil amaittu * mātavaṉ ĕṉṉum tĕyvattai nāṭṭi *
ārvam ĕṉpatu or pū iṭa vallārkku * arava taṇṭattil uyyalum āme (3)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

373. If someone has collected and saved wealth and if his relatives come to him before his death and ask greedily, “Tell us where you keep your wealth! Tell us where you keep it!” if he, without saying anything, makes his heart a temple of Madhavan, places the god there and sprinkles his love as flowers, he will be saved even if a snake comes to bite him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோர்வினால் ஞாபக மறதியாலே; பொருள் பொருள்களை; வைத்தது உண்டாகில் புதைத்து வைத்திருந்தால்; சொல்லு அது இருக்குமிடத்தை; சொல் என்று சொல்லு சொல்லு என்று; சுற்றும் இருந்து நாற்புறத்திலும் சூழ்ந்திருந்து; ஆர் வினவிலும் சுற்றத்தார் கேட்டாலும்; வாய் திறவாதே வாயைத் திறக்கமாட்டாதபடி; அந்த காலம் மரணகாலம்; அடைவதன் முன்னம் அடைவதற்கு முன்பு; மார்வம் என்பது இருதயம் என்கிற; ஓர் கோயில் ஒரு சந்நிதியை; அமைத்து ஏற்படுத்தி; மாதவன் என்னும் திருமால் என்கிற; தெய்வத்தை தெய்வத்தை; நாட்டி எழுந்தருளப்பண்ணி; ஆர்வம் என்பது ஓர் பக்தி என்கிற ஒரு; பூ இட மலரைச் சமர்ப்பிக்க; வல்லார்க்கு வல்லவர்களுக்கு; அரவ யமபடர்களால் வரும்; தண்டத்தில் துன்பத்தினின்றும்; உய்யலும் ஆமே உய்ய முடியுமே!
aṭaivataṉ muṉṉam before; anta kālam death; corviṉāl due to forgetfulness; ār viṉavilum even when relatives; cuṟṟum iruntu surround one; cŏl ĕṉṟu and ask; cŏllu for the places where; pŏrul̤ treasures; vaittatu uṇṭākil are hidden; vāy tiṟavāte without opening the mouth; amaittu create; or koyil a shrine in the; mārvam ĕṉpatu heart; nāṭṭi and install; tĕyvattai the Lord; mātavaṉ ĕṉṉum Madhavan there; pū iṭa and offer the flowers of; ārvam ĕṉpatu or bhakti; vallārkku those devotees; uyyalum āme will be saved; taṇṭattil from the tortures caused by; arava the messengers of death

PAT 4.5.4

374 மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி *
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக்
கண்ணுறக்கமதாவதன்முன்னம் *
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி *
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே.
374 மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து * மேல் மிடற்றினை உள் எழ வாங்கி *
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் * கண் உறக்கமது ஆவதன் முன்னம் **
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை * மூன்று மாத்திரை உள் எழ வாங்கி *
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் * விண்ணகத்தினில் மேவலும் ஆமே (4)
374 mel ĕzhuntatu or vāyuk kil̤arntu * mel miṭaṟṟiṉai ul̤ ĕzha vāṅki *
kālum kaiyum vitir vitirttu eṟik * kaṇ uṟakkamatu āvataṉ muṉṉam **
mūlam ākiya ŏṟṟai ĕzhuttai * mūṉṟu māttirai ul̤ ĕzha vāṅki *
velai vaṇṇaṉai mevutir ākil * viṇṇakattiṉil mevalum āme (4)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-13

Simple Translation

374. When someone is old, his breathing may become thin. His neck will be swelling with air. His legs and hands will be shaking. If he says the mantra of one sound before he closes his eyes and thinks of him, he will go to the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேல் எழுந்தது ஓர் வாயு மேல் எழுந்த மூச்சு; கிளர்ந்து குமுறி எழுந்து; மேல் மிடற்றினை மேல் நெஞ்சை; உள் எழ வாங்கி கீழே இழுத்து விழுந்து; காலுங் கையும் கால்களும் கைகளும்; விதிர் விதிர்த்து ஏறி பதைபதைக்கப்பெற்று; கண் உறக்கமது மரணமானது; ஆவதன் முன்னம் சம்பவிக்கும் முன்; மூலம் ஆகிய ’ஓம்’ என்ற பிரணவத்தை; ஒற்றை எழுத்தை ஒற்றை எழுத்தை; மூன்று மாத்திரை மூன்று விநாடி; உள் எழ வாங்கி உள்ளே செலுத்தி; வேலை கடல்; வண்ணனை நிறவண்ண எம்பெருமானை; மேவுதிர் ஆகில் தொழுதீர்களாகில்; விண்ணகத்தினில் ஸ்ரீவைகுண்டத்தை; மேவலும் ஆமே சென்று அடையலாம்
āvataṉ muṉṉam before; kaṇ uṟakkamatu death; kāluṅ kaiyum when the legs and hands; vitir vitirttu eṟi shake; mel ĕḻuntatu or vāyu breath arise; kil̤arntu and rumbles; mel miṭaṟṟiṉai in the chest; ul̤ ĕḻa vāṅki and draws inwards; mevutir ākil if one worship; vaṇṇaṉai the Lord with the complexion of; velai sea; ul̤ ĕḻa vāṅki and send in; ŏṟṟai ĕḻuttai the single letter; mūlam ākiya pranava (Om) syllable; mūṉṟu māttirai for three seconds; mevalum āme one can attain; viṇṇakattiṉil the divine abode (Sri Vaikuntha)

PAT 4.5.5

375 மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே *
கடைவழிவாரக்கண்டமடைப்பக்
கண்ணுறக்கமதாவதன்முன்னம் *
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார் *
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே.
375 மடி வழி வந்து நீர் புலன்சோர * வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே *
கடைவழி வாரக் கண்டம் அடைப்பக் * கண் உறக்கமது ஆவதன் முன்னம் **
தொடை வழி உம்மை நாய்கள் கவரா * சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் *
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் * இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே (5)
375 maṭi vazhi vantu nīr pulaṉcora * vāyil aṭṭiya kañciyum mīṇṭe *
kaṭaivazhi vārak kaṇṭam aṭaippak * kaṇ uṟakkamatu āvataṉ muṉṉam **
tŏṭai vazhi ummai nāykal̤ kavarā * cūlattāl ummaip pāyvatum cĕyyār *
iṭaivazhiyil nīr kūṟaiyum izhavīr * iruṭīkecaṉ ĕṉṟu etta vallīre (5)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

375. Before someone comes to the time of his death and the water he has drunk is spit out and the food that he ate is vomited and his eyes close, if he praises god saying, “Rishikesā!” on his way, the dogs will not come. No one will hurt him with their spears. He will not lose his wealth any time.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மடி புலன் வழி வந்து மடி வழியாக வந்து; நீர் சோர சிறுநீர் பெருகவும்; வாயில் அட்டிய வாயிலே இருந்த; கஞ்சியும் மீண்டே கஞ்சியும் மறுபடியும்; கடைவழி வார கடைவாய் வழியே வழிந்திட; கண்டம் அடைப்பக் தொண்டை அடைக்கவும்; கண் உறக்கமது மரணம்; ஆவதன் முன்னம் ஏற்படும் முன்பு; தொடை வழி உம்மை உம்மை கால் தொடையில்; நாய்கள் கவரா செந்நாய்கள் கவ்வாது; சூலத்தால் உம்மை சூலாயுதத்தால் உங்களை; பாய்வதும் செய்யார் குத்தவும் மாட்டார்கள்; இடை வழியில் நீர் நடுவழியில் நீங்கள்; கூறையும் இழவீர் வஸ்திரத்தையும் இழக்கமாட்டீர்; இருடீகேசன் என்று இருடீகேசன் என்று; ஏத்த வல்லீரே துதிக்கக் கூடியவர்களாகில்!
āvataṉ muṉṉam before the; kaṇ uṟakkamatu death; kaṇṭam aṭaippak when throat chokes; kaṭaivaḻi vāra vomits out; kañciyum mīṇṭe the food; vāyil aṭṭiya through the mouth; nīr cora and urine comes out; maṭi pulaṉ vaḻi vantu of the body; kūṟaiyum iḻavīr one will not loose the; iṭai vaḻiyil nīr dress in the midway; pāyvatum cĕyyār and no one will hurt with; cūlattāl ummai spears; nāykal̤ kavarā the red dogs will not bite; tŏṭai vaḻi ummai the thighs; etta vallīre if one recites the name of; iruṭīkecaṉ ĕṉṟu Rishikesha

PAT 4.5.6

376 அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை *
சங்கம்விட்டவர்கையைமறித்துப்
பையவேதலைசாய்ப்பதன்முன்னம் *
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனைமார்பில்
தங்கவிட்டுவைத்து * ஆவதோர்கருமம்சாதிப்பார்க்கு
என்றும்சாதிக்கலாமே.
376 அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி * ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை *
சங்கம் விட்டு அவர் கையை மறித்துப் * பையவே தலை சாய்ப்பதன் முன்னம் **
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை * மதுசூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து * ஆவது ஓர் கருமம் சாதிப்பார்க்கு * என்றும் சாதிக்கலாமே (6)
376 aṅkam viṭṭu avai aintum akaṟṟi * āvi mūkkiṉiṟ cotitta piṉṉai *
caṅkam viṭṭu avar kaiyai maṟittup * paiyave talai cāyppataṉ muṉṉam **
vaṅkam viṭṭu ulavum kaṭal pal̤l̤i māyaṉai * matucūtaṉai mārpil
taṅka viṭṭuvaittu * āvatu or karumam cātippārkku * ĕṉṟum cātikkalāme (6)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

376. Before someone loses the sense of his eyes, nose, mouth, ears and touch, and before his breath ceases, and before he can no longer swallow the water given to him from a conch, and before his head sags to the side, if he thinks in his heart of the Māyan Madhusudhanan resting on the ocean, abundant with water, there is nothing that he cannot achieve.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கம் விட்டவை உடலை விட்டு அந்த; ஐந்தும் அகற்றி பஞ்சபூதங்களும் அகன்றுபோக; ஆவி மூக்கினில் மூக்கில் கையை வைத்து பிராணன்; சோதித்த பின்னை இருக்கிறதா என்று சோதித்த பின்பு; சங்கம் விட்டவர் இனி அவர் பிழைக்கமாட்டார் என்று; கையை மறித்து கையை விரித்து; பையவே தலை மெள்ள மெள்ள தலை; சாய்ப்பதன் முன்னம் தொங்கவிடுவதற்கு முன்; வங்கம் விட்டு உலவும் கப்பல்கள் பயணிக்கும்; கடற் பள்ளி கடலில் சயனித்திருக்கும்; மாயனை ஆச்சரியமான எம்பிரானை; மதுசூதனனை மார்பில் மதுசூதனனை நெஞ்சில்; தங்க விட்டு தங்கச் செய்து; வைத்து ஆவது ஓர் கருமம் வைப்பது ஒரு பணி என; சாதிப்பார்க்கு செய்பவர்களை; என்றும் சாதிக்கலாமே என்றும் வணங்கலாம்
aintum akaṟṟi before the five elements; aṅkam viṭṭavai leave the body; cotitta piṉṉai after testing if breath exists; āvi mūkkiṉil in the nostrils; kaiyai maṟittu and giving up; caṅkam viṭṭavar that the one will not survive; cāyppataṉ muṉṉam before the sagging of; paiyave talai the head; cātippārkku those who; vaittu āvatu or karumam by making it a task; taṅka viṭṭu retain in; matucūtaṉaṉai mārpil heart, the Madhusudhanan; māyaṉai the mysterious Lord; kaṭaṟ pal̤l̤i the One who rests on the ocean; vaṅkam viṭṭu ulavum where ships travel; ĕṉṟum cātikkalāme can always be revered

PAT 4.5.7

377 தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து *
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப்
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் *
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி *
மன்னவன்மதுசூதனனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே.
377 தென்னவன் தமர் செப்பம் இலாதார் * சே அதக்குவார் போலப் புகுந்து *
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப் * பின் முன் ஆக இழுப்பதன் முன்னம் **
இன்னவன் இனையான் என்று சொல்லி * எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி *
மன்னவன் மதுசூதனன் என்பார் * வானகத்து மன்றாடிகள் தாமே (7)
377 tĕṉṉavaṉ tamar cĕppam ilātār * ce atakkuvār polap pukuntu *
piṉṉum vaṉ kayiṟṟāl piṇittu ĕṟṟip * piṉ muṉ āka izhuppataṉ muṉṉam **
iṉṉavaṉ iṉaiyāṉ ĕṉṟu cŏlli * ĕṇṇi ul̤l̤attu irul̤ aṟa nokki *
maṉṉavaṉ matucūtaṉaṉ ĕṉpār * vāṉakattu maṉṟāṭikal̤ tāme (7)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

377. Before the heartless messengers of Yama enter someone’s home like kidnappers, tie him with strong ropes and pull him away, if he worships in his heart faultlessly and says “O Madhusudanan, you are my king, I am your slave!” he will reach the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்னவன் தென்திசையான் யமனின்; தமர் கிங்கரர்கள்; செப்பம் இலாதார் சீர்மை யற்றவர்கள்; சே அதக்குவார் எருதுகளை அடக்குவதை; போலப் புகுந்து போல புகுந்து; பின்னும் மேலும்; வன் கயிற்றால் வலியப் பாசக்கயிற்றினால்; பிணித்து எற்றி கட்டி வருத்தி; பின் முன் ஆக முன் பின்னாக உலுக்கி; இழுப்பதன் முன்னம் இழுத்துச்செல்வதற்கு முன்னே; இன்னவன் இவன் இத்தகைய குணமுடைய; இனையான் சொரூபி என்று; எண்ணி உள்ளத்து உள்ளத்தில் எண்ணி; இருள் அற நெஞ்சிலுள்ள அஞ்ஞானம் விலக; நோக்கி நோக்கி; மன்னவன் மதுசூதனன் மதுசூதனப் பெருமானே; என்பார் என்று சொல்பவர்; வானகத்து ஸ்ரீவைகுண்டத்திலே; மன்றாடிகள் தாமே எம்பிரானுக்குச் சேவைபுரிய இறைஞ்சுவர்
cĕppam ilātār before the ruthless; tamar messengers of; tĕṉṉavaṉ Yama; polap pukuntu who like; ce atakkuvār taming the bulls; piṉṉum come; vaṉ kayiṟṟāl with strong ropes; iḻuppataṉ muṉṉam and take the soul; piṇittu ĕṟṟi by pulling; piṉ muṉ āka twisting and turning; ĕṇṇi ul̤l̤attu those who think in the heart; iṉṉavaṉ of the other One; iṉaiyāṉ who is compassionate; irul̤ aṟa to dispel darkness; nokki looking towards; ĕṉpār and say that He is; maṉṉavaṉ matucūtaṉaṉ Lord Madhusudhanan; maṉṟāṭikal̤ tāme will serve the Lord in; vāṉakattu Sri Vaikunta

PAT 4.5.8

378 கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து *
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே *
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு *
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே.
378 கூடிக் கூடி உற்றார்கள் இருந்து * குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து *
பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு * நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே **
கோடி மூடி எடுப்பதன் முன்னம் * கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு *
கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால் * குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே (8)
378 kūṭik kūṭi uṟṟārkal̤ iruntu * kuṟṟam niṟka naṟṟaṅkal̤ paṟaintu *
pāṭip pāṭi or pāṭaiyil iṭṭu * narip paṭaikku ŏru pākuṭam pole **
koṭi mūṭi ĕṭuppataṉ muṉṉam * kauttuvam uṭaik kovintaṉoṭu *
kūṭi āṭiya ul̤l̤attar āṉāl * kuṟippiṭam kaṭantu uyyalum āme (8)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

378. Before someone’s relatives gather together, speak only of his good qualities and not his faults, sing and sing, and put him on a bier and take him to the burning ground and leave him there in the forest after putting new clothes on him, if he sings, dances and worships the god Govindan adorned with the Kaustubham ornament, he will escape from Yama and join the god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து பந்துக்கள் கூடியிருந்து; குற்றம் நிற்க குற்றச் செயல்கள் பலவற்றை ஒதுக்கி; நற்றங்கள் பறைந்து நல்லவற்றை மட்டும் சொல்லி; பாடிப் பாடி பிரலாபித்து; ஓர் பாடையில் உயிர் நீத்தவரை ஒரு பாடையிலே; இட்டு படுக்கவைத்து; நரிப் படைக்கு நரிக்கூட்டத்துக்கு; ஒரு பாகுடம் ஒரு பாகுக் குடத்தைப்; போலே கொடுப்பதுபோல; கோடி மூடி துணியால் மூடி; எடுப்பதன் சுடுகாட்டுக்கு எடுத்து; முன்னம் போகும் முன்; கௌத்துவம் உடை கௌஸ்துபத்தை உடைய; கோவிந்தனோடு எம்பெருமான் குணங்களில்; கூடி ஆடிய ஈடுபட்டு கூடி ஆடும்; உள்ளத்தர் ஆனால் நெஞ்சையுடையவரானால்; குறிப்பிடம் கடந்து யமலோகத்தைக் கடந்துபோய்; உய்யலும் ஆமே உய்யலாமே!
kūṭik kūṭi uṟṟārkal̤ iruntu before the relatives gather; pāṭip pāṭi and sing; naṟṟaṅkal̤ paṟaintu only praises; kuṟṟam niṟka and not talk about the sins; iṭṭu before they put the; or pāṭaiyil dead body on a bier; pole like offering; ŏru pākuṭam the vessel (body); narip paṭaikku to a pack of wolfs; muṉṉam before they; koṭi mūṭi cover with cloth; ul̤l̤attar āṉāl those who in their heart; ĕṭuppataṉ and take the body to burial ground; kūṭi āṭiya merge and dance with; kovintaṉoṭu the divine qualities of; kauttuvam uṭai the Lord with Kaustubha gem; uyyalum āme they can be saved; kuṟippiṭam kaṭantu and will go beyond the realm of death

PAT 4.5.9

379 வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற *
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற *
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் * ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
379 வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப * வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்ற *
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் * தாரமும் ஒரு பக்கம் அலற்ற **
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் * செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
ஆய் * ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (9)
379 vāy ŏru pakkam vāṅki valippa * vārnta nīrk kuzhik kaṇkal̤ mizhaṟṟa *
tāy ŏru pakkam tantai ŏru pakkam * tāramum ŏru pakkam alaṟṟa **
tī ŏru pakkam cervataṉ muṉṉam * cĕṅkaṇ mālŏṭum cikkĕṉac cuṟṟam
āy * ŏru pakkam niṟka vallārkku * arava taṇṭattil uyyalum āme (9)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

379. Before someone cannot speak and his weakening eyes shed water and his mother, father and wife weep, and before fire takes hold of his body, if he worships the lord and thinks of himself as the devotee of the lovely-eyed Thirumāl, and if he thinks of the god as his relative, he will escape from Yama’s messengers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாய் ஒரு பக்கம் வாய் ஒரு பக்கமாக; வாங்கி வலிப்ப வாதத்தால் இழுக்கப்பட்டு; வார்ந்த நீர்க் வாயிலிட்ட நீர் வெளியே பெருக; குழிக் கண்கள் மிழற்ற இடுங்கிய கண் அலமந்திருக்க; தாய் ஒரு பக்கம் ஒரு பக்கத்தில் தாயும்; தந்தை ஒரு பக்கம் ஒரு பக்கத்தில் தந்தையும்; தாரமும் மனைவி; ஒரு பக்கம் அலற்ற ஒரு பக்கம் கதறிட; தீ ஓரு பக்கம் மற்றொரு பக்கத்திலே நெருப்பானது; சேர்வதன் முன்னம் வந்து சேர்வதற்கு முன்னே; செங்கண் சிவந்த கண்ணனான; மாலொடும் பெருமாளை; சிக்கெனச் சுற்றம் சிக்கெனப் உற்றானாக; ஆய் ஒரு பக்கம் ஆகி அவன் பக்கலிலேயே; நிற்க வல்லார்க்கு நிற்கக் கூடியவர்களுக்கு; அரவ தண்டத்தில் யமதண்டனையிலிருந்து; உய்யலும் ஆமே உய்யவும் இயலும்
vārnta nīrk the water given comes out; vāṅki valippa of the paralyzed mouth; vāy ŏru pakkam that shifts to one side; kuḻik kaṇkal̤ miḻaṟṟa with confused eyes; tāy ŏru pakkam with mother on one side; tantai ŏru pakkam father on one side; tāramum and wife; ŏru pakkam alaṟṟa wailing; cervataṉ muṉṉam before comes; tī oru pakkam the fire from another side; niṟka vallārkku those who; āy ŏru pakkam stand by; mālŏṭum Tirumal (the Lord); cĕṅkaṇ with red eyes; cikkĕṉac cuṟṟam and think of him as a relative; uyyalum āme they can escape; arava taṇṭattil the punishment of Yama

PAT 4.5.10

380 செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் *
பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் *
சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்
செய்தமாலைஇவைபத்தும்வல்லார் *
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தை பெறுவர்தாமே. (2)
380 ## செத்துப் போவதோர் போது நினைந்து * செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல் *
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப் * பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன் **
சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் * செய்த மாலை இவை பத்தும் வல்லார் *
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் * சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே (10)
380 ## cĕttup povator potu niṉaintu * cĕyyum cĕykaikal̤ tevapirāṉmel *
pattarāy iṟantār pĕṟum peṟṟaip * pāzhit tol̤ viṭṭucittaṉ puttūrkkoṉ **
cittam naṉku ŏruṅkit tirumālaic * cĕyta mālai ivai pattum vallār *
cittam naṉku ŏruṅkit tirumāl mel * cĕṉṟa cintai pĕṟuvarkal̤ tāme (10)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

380. Vishnuchithan, the chief of Villiputhur, composed ten pāsurams which say that if people worship the lord and ask for his refuge and become his devotees, before Yama’s messengers come and take them they will be able to reach god. If people learn and recite these pāsurams they will become devotees, thinking only of him. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செத்துப் போவதோர் போது இறந்து போகும்போது; நினைந்து நினைத்து; செய்யும் செய்கைகள் செய்யும் செயல்களை; தேவபிரான்மேல் தேவபிரான் மீது; பத்தராய் பக்தியுள்ளவர்களாய் இருந்து; இறந்தார் மரணமடைந்தவர்; பெறும் பெறக்கூடிய; பேற்றை பலன்களைக் குறித்து; பாழி வலிமைமிக்க; தோள் தோள்களையுடையவரும்; புத்தூர்க்கோன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தலைவருமான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சித்தம் நன்கு மனதை நன்றாக; ஒருங்கி ஒருமுகப்படுத்தி; திருமாலை எம்பெருமானனைப் பற்றி; செய்த மாலை அருளிச் செய்த பாசுரங்களான; இவை பத்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் அனுசந்திப்பவர்கள்; சித்தம் ஆழ்வாரைப் போல மனது; நன்கு ஒருங்கி நன்கு ஒருமுகப் பட்டு; திருமால் மேல் எம்பெருமானிடத்தில்; சென்ற குடிகொண்ட; சிந்தை மனதை; பெறுவர் உடையராவர்
vallār those who recite; ivai pattum these ten pasurams; cĕyta mālai rendered; tirumālai about the Lord; viṭṭucittaṉ by Periazhwar; puttūrkkoṉ the chieftan of SriVilliputhur; pāḻi the one with strong; tol̤ shoulders; ŏruṅki with a focused; cittam naṉku mind; peṟṟai about the benefits; iṟantār a dead person; pĕṟum attains; niṉaintu by thinking; cĕyyum cĕykaikal̤ and acting; pattarāy as devotees; tevapirāṉmel of the Lord; cĕttup povator potu at the time of death; cittam they will become devotees; naṉku ŏruṅki and think only of; tirumāl mel Him