PAT 4.5.2

நமோநாரணா என்று கைகூப்பி வணங்கு

372 சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து * எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் *
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி *
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைகொடுக்கிலும்போகவொட்டாரே.
372 cīyiṉāl cĕṟintu eṟiya puṇmel * cĕṟṟal eṟik kuzhampu iruntu * ĕṅkum
īyiṉāl arippu uṇṭu mayaṅki * ĕllaivāyc cĕṉṟu cervataṉ muṉṉam **
vāyiṉāl namo nāraṇā ĕṉṟu * mattakattiṭaik kaikal̤aik kūppi *
poyiṉāl piṉṉai it ticaikku ĕṉṟum * piṇai kŏṭukkilum poka ŏṭṭāre (2)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

372. If people who were never the devotees of Nārāyanan are sick and their wounds become putrid and swarm with flies, and if, fainting and coming to the end of their lives, they fold their hands and worship him, saying “Namo Nārāyana, ” they will never again go near people who are not the devotees of Nārāyanan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீயினால் செறிந்து சீயாலே நிறைந்த; ஏறிய புண்மேல் புண்ணின் மேல்; செற்றல் ஏறி ஈ இருந்து முட்டையிட்டு; குழம்பு இருந்து பழுத்து நீராய்க் கசியுமளவில்; எங்கும் ஈயினால் உடல் முழுதும் ஈயினால்; அரிப்பு உண்டு மயங்கி தினவு ஏற்பபட்டு மயங்கி; எல்லைவாய்ச் சென்று இறுதிக் காலம் வரைச் சென்று; சேர்வதன் முன்னம் அடைவதற்கு முன்னே; வாயினால் வாயாலே; நமோ நாரணா என்று நமோ நாராயணா என்று; மத்தகத்திடை உச்சியிலே; கைகளைக் கூப்பி கைகளைக் கூப்பி; போயினால் பரமபதம் போய்ச் சேர்ந்தால்; பின்னை பிறகு; இத் திசைக்கு இந்த பூலோகத்துக்கு; என்றும் மறுபடியும்; பிணை நித்யமுக்தர்களுக்கு; கொடுக்கிலும் உத்தரவாதம் அளித்தாலும்; போக பரமபதத்திலுள்ளவர்கள் போக; ஒட்டாரே விடமாட்டார்கள்
cervataṉ muṉṉam before; ĕṅkum īyiṉāl body swarmed with flies; cĕṟṟal eṟi with flies; eṟiya puṇmel above the wound; cīyiṉāl cĕṟintu filled with pus; kuḻampu iruntu that is ready to burst open; arippu uṇṭu mayaṅki and body become weak; ĕllaivāyc cĕṉṟu and finally die; vāyiṉāl by mouth if one says; namo nāraṇā ĕṉṟu Namo Narayana; kaikal̤aik kūppi with hands folded; mattakattiṭai on top of the head; poyiṉāl will reach Paramapadam; piṉṉai later; piṇai for those who are eternally liberated; kŏṭukkilum even if a guarantee is given; poka those who are in Paramapadam,; ŏṭṭāre will not allow them to come; it ticaikku to this world; ĕṉṟum again