373 சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் * சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து * ஆர் வினவிலும் வாய் திறவாதே * அந்த காலம் அடைவதன் முன்னம் ** மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து * மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி * ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு * அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (3)
373. If someone has collected and saved wealth
and if his relatives come to him before his death
and ask greedily,
“Tell us where you keep your wealth!
Tell us where you keep it!”
if he, without saying anything,
makes his heart a temple of Madhavan,
places the god there and sprinkles his love as flowers,
he will be saved even if a snake comes to bite him.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மூன்றாம் பாட்டு- ஆத்ம சமர்ப்பணம் பண்ணினார்க்கு யம வச்யதை இல்லை என்கிறார்-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே –4-5-3-