PAT 4.5.7

மதுசூதனன் என்று அடிக்கடி கூறு

377 தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து *
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப்
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் *
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி *
மன்னவன்மதுசூதனனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே.
377 tĕṉṉavaṉ tamar cĕppam ilātār * ce atakkuvār polap pukuntu *
piṉṉum vaṉ kayiṟṟāl piṇittu ĕṟṟip * piṉ muṉ āka izhuppataṉ muṉṉam **
iṉṉavaṉ iṉaiyāṉ ĕṉṟu cŏlli * ĕṇṇi ul̤l̤attu irul̤ aṟa nokki *
maṉṉavaṉ matucūtaṉaṉ ĕṉpār * vāṉakattu maṉṟāṭikal̤ tāme (7)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

377. Before the heartless messengers of Yama enter someone’s home like kidnappers, tie him with strong ropes and pull him away, if he worships in his heart faultlessly and says “O Madhusudanan, you are my king, I am your slave!” he will reach the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்னவன் தென்திசையான் யமனின்; தமர் கிங்கரர்கள்; செப்பம் இலாதார் சீர்மை யற்றவர்கள்; சே அதக்குவார் எருதுகளை அடக்குவதை; போலப் புகுந்து போல புகுந்து; பின்னும் மேலும்; வன் கயிற்றால் வலியப் பாசக்கயிற்றினால்; பிணித்து எற்றி கட்டி வருத்தி; பின் முன் ஆக முன் பின்னாக உலுக்கி; இழுப்பதன் முன்னம் இழுத்துச்செல்வதற்கு முன்னே; இன்னவன் இவன் இத்தகைய குணமுடைய; இனையான் சொரூபி என்று; எண்ணி உள்ளத்து உள்ளத்தில் எண்ணி; இருள் அற நெஞ்சிலுள்ள அஞ்ஞானம் விலக; நோக்கி நோக்கி; மன்னவன் மதுசூதனன் மதுசூதனப் பெருமானே; என்பார் என்று சொல்பவர்; வானகத்து ஸ்ரீவைகுண்டத்திலே; மன்றாடிகள் தாமே எம்பிரானுக்குச் சேவைபுரிய இறைஞ்சுவர்
cĕppam ilātār before the ruthless; tamar messengers of; tĕṉṉavaṉ Yama; polap pukuntu who like; ce atakkuvār taming the bulls; piṉṉum come; vaṉ kayiṟṟāl with strong ropes; iḻuppataṉ muṉṉam and take the soul; piṇittu ĕṟṟi by pulling; piṉ muṉ āka twisting and turning; ĕṇṇi ul̤l̤attu those who think in the heart; iṉṉavaṉ of the other One; iṉaiyāṉ who is compassionate; irul̤ aṟa to dispel darkness; nokki looking towards; ĕṉpār and say that He is; maṉṉavaṉ matucūtaṉaṉ Lord Madhusudhanan; maṉṟāṭikal̤ tāme will serve the Lord in; vāṉakattu Sri Vaikunta