PAT 4.5.10

தேவபிரானின் பக்தராக இருப்பர்

380 செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் *
பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் *
சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்
செய்தமாலைஇவைபத்தும்வல்லார் *
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தை பெறுவர்தாமே. (2)
380 ## cĕttup povator potu niṉaintu * cĕyyum cĕykaikal̤ tevapirāṉmel *
pattarāy iṟantār pĕṟum peṟṟaip * pāzhit tol̤ viṭṭucittaṉ puttūrkkoṉ **
cittam naṉku ŏruṅkit tirumālaic * cĕyta mālai ivai pattum vallār *
cittam naṉku ŏruṅkit tirumāl mel * cĕṉṟa cintai pĕṟuvarkal̤ tāme (10)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

380. Vishnuchithan, the chief of Villiputhur, composed ten pāsurams which say that if people worship the lord and ask for his refuge and become his devotees, before Yama’s messengers come and take them they will be able to reach god. If people learn and recite these pāsurams they will become devotees, thinking only of him. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செத்துப் போவதோர் போது இறந்து போகும்போது; நினைந்து நினைத்து; செய்யும் செய்கைகள் செய்யும் செயல்களை; தேவபிரான்மேல் தேவபிரான் மீது; பத்தராய் பக்தியுள்ளவர்களாய் இருந்து; இறந்தார் மரணமடைந்தவர்; பெறும் பெறக்கூடிய; பேற்றை பலன்களைக் குறித்து; பாழி வலிமைமிக்க; தோள் தோள்களையுடையவரும்; புத்தூர்க்கோன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தலைவருமான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சித்தம் நன்கு மனதை நன்றாக; ஒருங்கி ஒருமுகப்படுத்தி; திருமாலை எம்பெருமானனைப் பற்றி; செய்த மாலை அருளிச் செய்த பாசுரங்களான; இவை பத்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் அனுசந்திப்பவர்கள்; சித்தம் ஆழ்வாரைப் போல மனது; நன்கு ஒருங்கி நன்கு ஒருமுகப் பட்டு; திருமால் மேல் எம்பெருமானிடத்தில்; சென்ற குடிகொண்ட; சிந்தை மனதை; பெறுவர் உடையராவர்
vallār those who recite; ivai pattum these ten pasurams; cĕyta mālai rendered; tirumālai about the Lord; viṭṭucittaṉ by Periazhwar; puttūrkkoṉ the chieftan of SriVilliputhur; pāḻi the one with strong; tol̤ shoulders; ŏruṅki with a focused; cittam naṉku mind; peṟṟai about the benefits; iṟantār a dead person; pĕṟum attains; niṉaintu by thinking; cĕyyum cĕykaikal̤ and acting; pattarāy as devotees; tevapirāṉmel of the Lord; cĕttup povator potu at the time of death; cittam they will become devotees; naṉku ŏruṅki and think only of; tirumāl mel Him