PAT 4.5.1

பகவானிடம் மனம் செலுத்தாமல் காலங்கடத்தும் மக்களுக்கு நல்லுரை கூறல் கேசவா புருடோத்தமா என்று சொல்க

371 ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி *
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே *
கேசவா! புருடோத்தமா! என்றும்
கேழலாகியகேடிலீ! என்றும் *
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே. (2)
371 ## ācaivāyc cĕṉṟa cintaiyar āki * aṉṉai attaṉ ĕṉ puttirar pūmi *
vāca vār kuzhalāl̤ ĕṉṟu mayaṅki * māl̤um ĕllaikkaṇ vāy tiṟavāte **
kecavā puruṭottamā ĕṉṟum * kezhal ākiya keṭilī ĕṉṟum *
pecuvār avar ĕytum pĕrumai * pecuvāṉ pukil nam param aṉṟe (1)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

371. Even if people have only thought of their mothers, fathers, children, and wives with fragrant hair, if they close their eyes when they are dying and praise the god and say, “Kesava, Purushothaman, you became a boar and you are faultless, ” they are my dear friends, and no words are enough for me to praise them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னை என்னுடைய தாய்; அத்தன் என்னுடைய தந்தை; என் புத்திரர் என்னுடைய புத்திரர்; பூமி என்னுடைய பூமி; வாசவார் பரிமளம் வீசும்; குழலாள் முடியையுடைய என் மனைவி; என்று என்று வாய் வலிக்க; ஆசைவாய்ச் சென்ற ஆசையின் வழியே போன; சிந்தையர் ஆகி நெஞ்சையுடையராய்; மயங்கி மயங்கி; மாளும் எல்லைகண் உயிர் பிரியும் சமயத்தில்; வாய் வாய் திறந்து; திறவாதே அவர்கள் பேரைச்சொல்லாமல்; கேசவா! கேசவனே!; புருடோத்தமா! என்றும் புருடோத்தமனே! என்றும்; கேழல் ஆகிய வராக ரூபம்கொண்ட; கேடிலீ! என்றும் அழிவில்லாதவனே! என்றும்; பேசுவார் அவர் சொல்லுபவர்கள்; எய்தும் பெருமை அடையக்கூடிய பெருமைகளை; பேசுவான் புகில் பேச ஆரம்பித்தால்; நம் பரம் அன்றே நம்மால் விவரிக்க இயலாது
ācaivāyc cĕṉṟa normally going along the path of desire; cintaiyar āki thinking and; mayaṅki in delusion; ĕṉṟu saying; aṉṉai my mother; attaṉ my father; ĕṉ puttirar my son; pūmi my land; kuḻalāl̤ and my wife with; vācavār fragrant hair; māl̤um ĕllaikaṇ but at the moment of death; vāy by mouth; tiṟavāte instead of telling their names; pecuvār avar if they start saying; kecavā! Kesava!; puruṭottamā! ĕṉṟum o Supreme Being!; keṭilī! ĕṉṟum o imperishable One!; keḻal ākiya who took the form of Varaha; pecuvāṉ pukil if one begins to speak of; ĕytum pĕrumai the greatness those people will achieve; nam param aṉṟe no words are enough