PAT 4.5.9

செங்கண்மாலையே சுற்றமாகக் கொண்டு வாழ்

379 வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற *
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற *
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் * ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.
379 vāy ŏru pakkam vāṅki valippa * vārnta nīrk kuzhik kaṇkal̤ mizhaṟṟa *
tāy ŏru pakkam tantai ŏru pakkam * tāramum ŏru pakkam alaṟṟa **
tī ŏru pakkam cervataṉ muṉṉam * cĕṅkaṇ mālŏṭum cikkĕṉac cuṟṟam
āy * ŏru pakkam niṟka vallārkku * arava taṇṭattil uyyalum āme (9)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

379. Before someone cannot speak and his weakening eyes shed water and his mother, father and wife weep, and before fire takes hold of his body, if he worships the lord and thinks of himself as the devotee of the lovely-eyed Thirumāl, and if he thinks of the god as his relative, he will escape from Yama’s messengers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாய் ஒரு பக்கம் வாய் ஒரு பக்கமாக; வாங்கி வலிப்ப வாதத்தால் இழுக்கப்பட்டு; வார்ந்த நீர்க் வாயிலிட்ட நீர் வெளியே பெருக; குழிக் கண்கள் மிழற்ற இடுங்கிய கண் அலமந்திருக்க; தாய் ஒரு பக்கம் ஒரு பக்கத்தில் தாயும்; தந்தை ஒரு பக்கம் ஒரு பக்கத்தில் தந்தையும்; தாரமும் மனைவி; ஒரு பக்கம் அலற்ற ஒரு பக்கம் கதறிட; தீ ஓரு பக்கம் மற்றொரு பக்கத்திலே நெருப்பானது; சேர்வதன் முன்னம் வந்து சேர்வதற்கு முன்னே; செங்கண் சிவந்த கண்ணனான; மாலொடும் பெருமாளை; சிக்கெனச் சுற்றம் சிக்கெனப் உற்றானாக; ஆய் ஒரு பக்கம் ஆகி அவன் பக்கலிலேயே; நிற்க வல்லார்க்கு நிற்கக் கூடியவர்களுக்கு; அரவ தண்டத்தில் யமதண்டனையிலிருந்து; உய்யலும் ஆமே உய்யவும் இயலும்
vārnta nīrk the water given comes out; vāṅki valippa of the paralyzed mouth; vāy ŏru pakkam that shifts to one side; kuḻik kaṇkal̤ miḻaṟṟa with confused eyes; tāy ŏru pakkam with mother on one side; tantai ŏru pakkam father on one side; tāramum and wife; ŏru pakkam alaṟṟa wailing; cervataṉ muṉṉam before comes; tī oru pakkam the fire from another side; niṟka vallārkku those who; āy ŏru pakkam stand by; mālŏṭum Tirumal (the Lord); cĕṅkaṇ with red eyes; cikkĕṉac cuṟṟam and think of him as a relative; uyyalum āme they can escape; arava taṇṭattil the punishment of Yama