Chapter 6

Advising the devotees about naming children with the names of god - (காசும் கறை)

திருமாலின் நாமம் இடுதல்
Advising the devotees about naming children with the names of god - (காசும் கறை)

Don't have time to recite the Lord's names? If so, do one thing! Name your children after the Lord. When you call them, the Lord will think you are calling Him. Both the parents who named their children and the children who bear the names will be blessed, says this hymn.

பகவந் நாமங்களைச் சொல்ல நேரம் இல்லையா! அப்படியானால் ஒன்று செய்யுங்கள்! உங்கள் குழந்தைகளுக்குப் பகவானின் பெயரை இடுங்கள். அவர்களை நீங்கள் அழைக்கும்போது, பகவான் தன்னையே அழைப்பதாக நினைக்கிறான். பெயரிட்ட தாய்தந்தையர்களும், பெயர் தாங்கிய குழந்தைகளும் நன்மை பெறுவார்கள் என்கிறது இத்திருமொழி.

Verses: 381 to 390
Grammar: Kaliththuṟai / கலித்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
  • PAT 4.6.1
    381 ## காசும் கறை உடைக் கூறைக்கும் * அங்கு ஓர் கற்றைக்கும்
    ஆசையினால் * அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள் **
    கேசவன் பேர் இட்டு * நீங்கள் தேனித்து இருமினோ *
    நாயகன் நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (1)
  • PAT 4.6.2
    382 அங்கு ஒரு கூறை * அரைக்கு உடுப்பதன் ஆசையால் *
    மங்கிய மானிட சாதியின் * பேர் இடும் ஆதர்காள்! **
    செங்கண் நெடுமால்! * சிரீதரா என்று அழைத்தக்கால் *
    நங்கைகாள் நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (2)
  • PAT 4.6.3
    383 உச்சியில் எண்ணெயும் * சுட்டியும் வளையும் உகந்து *
    எச்சம் பொலிந்தீர்காள் * என் செய்வான் பிறர் பேர் இட்டீர்? **
    பிச்சை புக்கு ஆகிலும் * எம்பிரான் திருநாமமே
    நச்சுமின் * நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (3)
  • PAT 4.6.4
    384 மானிட சாதியில் தோன்றிற்று * ஓர் மானிட சாதியை *
    மானிட சாதியின் பேர் இட்டால் * மறுமைக்கு இல்லை **
    வான் உடை மாதவா * கோவிந்தா என்று அழைத்தக்கால் *
    நான் உடை நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (4)
  • PAT 4.6.5
    385 மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் * மல ஊத்தையை *
    மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் * மறுமைக்கு இல்லை **
    குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா * என்று அழைத்தக்கால் *
    நலம் உடை நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (5)
  • PAT 4.6.6
    386 நாடும் நகரும் அறிய * மானிடப் பேர் இட்டு *
    கூடி அழுங்கிக் * குழியில் வீழ்ந்து வழுக்காதே **
    சாடு இறப் பாய்ந்த தலைவா * தாமோதரா என்று
    நாடுமின் * நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (6)
  • PAT 4.6.7
    387 மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
    எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் * ஏழை மனிசர்காள் **
    கண்ணுக்கு இனிய * கருமுகில் வண்ணன் நாமமே
    நண்ணுமின் * நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (7)
  • PAT 4.6.8
    388 நம்பி பிம்பி என்று * நாட்டு மானிடப் பேர் இட்டால் *
    நம்பும் பிம்பும் எல்லாம் * நாலு நாளில் அழுங்கிப்போம் **
    செம்பெருந் தாமரைக் கண்ணன் * பேர் இட்டு அழைத்தக்கால் *
    நம்பிகாள்! நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (8)
  • PAT 4.6.9
    389 ஊத்தைக் குழியில் * அமுதம் பாய்வது போல் * உங்கள்
    மூத்திரப் பிள்ளையை * என் முகில் வண்ணன் பேர் இட்டு **
    கோத்துக் குழைத்துக் * குணாலம் ஆடித் திரிமினோ! *
    நாத் தகு நாரணன் * தம் அன்னை நரகம் புகாள் (9)
  • PAT 4.6.10
    390 ## சீர் அணி மால் * திருநாமமே இடத் தேற்றிய *
    வீர் அணி தொல்புகழ் * விட்டுசித்தன் விரித்த ** சொல்
    ஓர் அணி ஒண் தமிழ் * ஒன்பதோடு ஒன்றும் வல்லவர் *
    பேர் அணி வைகுந்தத்து * என்றும் பேணி இருப்பரே (10)