PAT 4.5.6

இதயத்தில் மதுசூதனனை அமைத்து வழிபடு

376 அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை *
சங்கம்விட்டவர்கையைமறித்துப்
பையவேதலைசாய்ப்பதன்முன்னம் *
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனைமார்பில்
தங்கவிட்டுவைத்து * ஆவதோர்கருமம்சாதிப்பார்க்கு
என்றும்சாதிக்கலாமே.
376 aṅkam viṭṭu avai aintum akaṟṟi * āvi mūkkiṉiṟ cotitta piṉṉai *
caṅkam viṭṭu avar kaiyai maṟittup * paiyave talai cāyppataṉ muṉṉam **
vaṅkam viṭṭu ulavum kaṭal pal̤l̤i māyaṉai * matucūtaṉai mārpil
taṅka viṭṭuvaittu * āvatu or karumam cātippārkku * ĕṉṟum cātikkalāme (6)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

376. Before someone loses the sense of his eyes, nose, mouth, ears and touch, and before his breath ceases, and before he can no longer swallow the water given to him from a conch, and before his head sags to the side, if he thinks in his heart of the Māyan Madhusudhanan resting on the ocean, abundant with water, there is nothing that he cannot achieve.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கம் விட்டவை உடலை விட்டு அந்த; ஐந்தும் அகற்றி பஞ்சபூதங்களும் அகன்றுபோக; ஆவி மூக்கினில் மூக்கில் கையை வைத்து பிராணன்; சோதித்த பின்னை இருக்கிறதா என்று சோதித்த பின்பு; சங்கம் விட்டவர் இனி அவர் பிழைக்கமாட்டார் என்று; கையை மறித்து கையை விரித்து; பையவே தலை மெள்ள மெள்ள தலை; சாய்ப்பதன் முன்னம் தொங்கவிடுவதற்கு முன்; வங்கம் விட்டு உலவும் கப்பல்கள் பயணிக்கும்; கடற் பள்ளி கடலில் சயனித்திருக்கும்; மாயனை ஆச்சரியமான எம்பிரானை; மதுசூதனனை மார்பில் மதுசூதனனை நெஞ்சில்; தங்க விட்டு தங்கச் செய்து; வைத்து ஆவது ஓர் கருமம் வைப்பது ஒரு பணி என; சாதிப்பார்க்கு செய்பவர்களை; என்றும் சாதிக்கலாமே என்றும் வணங்கலாம்
aintum akaṟṟi before the five elements; aṅkam viṭṭavai leave the body; cotitta piṉṉai after testing if breath exists; āvi mūkkiṉil in the nostrils; kaiyai maṟittu and giving up; caṅkam viṭṭavar that the one will not survive; cāyppataṉ muṉṉam before the sagging of; paiyave talai the head; cātippārkku those who; vaittu āvatu or karumam by making it a task; taṅka viṭṭu retain in; matucūtaṉaṉai mārpil heart, the Madhusudhanan; māyaṉai the mysterious Lord; kaṭaṟ pal̤l̤i the One who rests on the ocean; vaṅkam viṭṭu ulavum where ships travel; ĕṉṟum cātikkalāme can always be revered