Chapter 5

Yashoda calls a crow to come to help her to comb Kannan's hair - (பின்னை மணாளனை)

குழல்வாரக் காக்கையை வா எனல்
Yashoda calls a crow to come to help her to comb Kannan's hair - (பின்னை மணாளனை)
Raising a child is indeed a battle. Somehow, the mother managed to bathe the unruly Krishna by speaking sweet words. She then thought of combing his hair and making him look beautiful. Krishna, trying to escape from his mother's grasp, wanted to run away. "Crow, come! Come and comb Krishna's hair!" she called out to a crow, diverting Krishna's attention. In this way, she managed to comb his hair, and the āzhvār also experiences this joy.
குழந்தையை வளர்ப்பது பெறும் போர்தான். கட்டுப்படாத கண்ணனை நயமான வார்த்தைகளைக் கூறி எப்படியோ நீராட்டி விட்டாள் தாய். கூந்தலை வாரி அழகு செய்விக்க எண்ணினாள். கண்ணன் தாயின் பிடியிலிருந்து விடுவித்துக் கோண்டு ஓட நினைக்கிறான். "காக்காய் வா! கண்ணனுக்குக் குழல் வார வா!" என்று காக்கையை அழைத்துக் கண்ணனின் கவனத்தைத் திருப்புகிறாள். இவ்வாறு சீராட்டிக் குழல் வாரியதை ஆழ்வாரும் அனுபவிக்கிறார்.
Verses: 162 to 171
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting rid of all your bad karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 2.5.1

162 பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை *
முன்னையமரர் முதல்தனிவித்தினை *
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட *
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2)
162 ## பின்னை மணாளனைப் * பேரில் கிடந்தானை *
முன்னை அமரர் * முதல் தனி வித்தினை **
என்னையும் எங்கள் * குடி முழுது ஆட்கொண்ட *
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் * மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (1)
162 ## piṉṉai maṇāl̤aṉaip * peril kiṭantāṉai *
muṉṉai amarar * mutal taṉi vittiṉai **
ĕṉṉaiyum ĕṅkal̤ * kuṭi muzhutu āṭkŏṇṭa *
maṉṉaṉai vantu kuzhalvārāy akkākkāy * mātavaṉtaṉ kuzhalvārāy akkākkāy (1)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

162. He is the beloved of Nappinnai and he rests on the waters in Thirupper (Koiladi), the ancient, the unique singular force. He is my protector and that of my whole clan O crow, come and help me comb the hair of the king, the protector of me and my whole clan. . O crow, come and help me comb Mādhavan’s hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னை மணாளனை நப்பின்னை மணாளனை; பேரில் கிடந்தானை திருபேர் தலத்தில் கிடந்தானை; முன்னை அமரர் முதல் நித்யஸூரிகளின் தலைவனாய்; தனி ஒப்பற்ற; வித்தினை காரணனாய்; என்னையும் என்னையும்; எங்கள் குடி முழுது எங்கள் அனைத்துக் குடியினரையும்; ஆட்கொண்ட மன்னனை அடிமைகொண்டபிரபுவின்; வந்து குழல் வாராய் அருகே வந்து தலை வாரிடுவாய்; அக்காக்காய்! காக்கையே!; மாதவன் தன் மாதவனின்; குழல் வாராய் தலையை வாரிடுவாய்; அக்காக்காய்! காக்கையே!
piṉṉai maṇāl̤aṉai He is the beloved of Napinnai; peril kiṭantāṉai the One who resides in Thiruper; muṉṉai amarar mutal the Leader of divine beings; taṉi He is incomparable; vittiṉai and the divine cause; āṭkŏṇṭa maṉṉaṉai He is the protector of; ĕṉṉaiyum me and; ĕṅkal̤ kuṭi muḻutu our entire clan; akkākkāy! oh crow!; vantu kuḻal vārāy come and help comb the hair of; mātavaṉ taṉ Madhavan; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb His hair

PAT 2.5.2

163 பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம் *
மாயச்சகடும் மருதும்இறுத்தவன் *
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல் *
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
163 பேயின் முலை உண்ட * பிள்ளை இவன் முன்னம் *
மாயச் சகடும் * மருதும் இறுத்தவன் **
காயாமலர் வண்ணன் * கண்ணன் கருங்குழல் *
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய் * தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (2)
163 peyiṉ mulai uṇṭa * pil̤l̤ai ivaṉ muṉṉam *
māyac cakaṭum * marutum iṟuttavaṉ **
kāyāmalar vaṇṇaṉ * kaṇṇaṉ karuṅkuzhal *
tūytu āka vantu kuzhalvārāy akkākkāy * tūmaṇi vaṇṇaṉ kuzhalvārāy akkākkāy (2)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

163. He is the divine child who sucked milk from the evil Putanā's breasts, destroyed the magical Sakatāsuran when he came as a cart and killed the two Asurans disguised as marudam trees. His body is blue like the kaya flower. O crow, come and help me comb his hair. O crow, he has a pure body colored like a blue sapphire. Come and help me comb and groom his hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேயின் முலை பூதனையின்; உண்ட பிள்ளை பாலைப் பருகியவனும்; இவன் முன்னம் இவன் முன்பு; மாய வஞ்சனையாக வந்த; சகடும் சகாடாசுரனையும்; மருதும் மருத மரமாக வந்த; இறுத்தவன் அசுரர்களையும் அழித்தவனும்; காயா மலர் காயாம்பூ மலர்; வண்ணன் நிறத்தவனும்; கண்ணன் கண்ணபிரானின்; கருங்குழல் தலமுடியை; தூய்து ஆகவந்து நன்றாக வந்து; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!; தூமணி மாசு மறுவற்ற; வண்ணன் மணிவண்ணனின்; குழல்வாராய் தலையை வாரி; அக்காக்காய்! விடுவாய் காகமே!
uṇṭa pil̤l̤ai the One who drank the milk; peyiṉ mulai of Putana; ivaṉ muṉṉam Once He; iṟuttavaṉ Killed the asuras who came; marutum as marudam trees; māya and the wicked; cakaṭum Sakatasuran; vaṇṇaṉ He has the skin color of; kāyā malar kaya flower; akkākkāy! oh crow!; tūytu ākavantu come and help; kuḻal vārāy comb; karuṅkuḻal the hair of; kaṇṇaṉ Kannan; akkākkāy! oh crown comb; tūmaṇi the pure; kuḻalvārāy hair; vaṇṇaṉ of Manivannan

PAT 2.5.3

164 திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த *
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் *
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
164 திண்ணக் கலத்தில் * திரை உறிமேல் வைத்த *
வெண்ணெய் விழுங்கி * விரைய உறங்கிடும்
அண்ணல் ** அமரர் பெருமானை * ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் * கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (3)
164 tiṇṇak kalattil * tirai uṟimel vaitta *
vĕṇṇĕy vizhuṅki * viraiya uṟaṅkiṭum
aṇṇal ** amarar pĕrumāṉai * āyartam
kaṇṇaṉai vantu kuzhalvārāy akkākkāy * kārmukil vaṇṇaṉ kuzhalvārāy akkākkāy (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

164. He swallowed the butter kept in a strong pot on the uri and quickly ran away, pretending to rest. He is the god of gods, the cowherds' chief O crow, , come and help me comb Kannan's hair. His complexion is dark as a cloud. Come and help me comb his hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திண்ணக் கலத்தில் திடமான கலத்தில்; திரை உறி மேல் முறுக்கேறிய உறியில்; வைத்த வைத்திருந்த; வெண்ணெய் வெண்ணெயை; விழுங்கி விழுங்கிவிட்டு; விரைய உறங்கிடும் வேகமாகத் தூங்கப் போகும்; அண்ணல் ஸ்வாமி; அமரர் பெருமானை தேவர்பிரான்; ஆயர் தம் ஆயர்களின்; கண்ணனை கண் போன்றவனிடம்; வந்து வந்து; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!; கார்முகில் வண்ணன் கரு மேக நிறத்தழகனின்; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!
aṇṇal Swami; amarar pĕrumāṉai the Lord of the gods; viḻuṅki swallowed; vĕṇṇĕy the butter; vaitta stored in a; tiṇṇak kalattil secure; tirai uṟi mel and strong pot; viraiya uṟaṅkiṭum and ran pretending to rest; kaṇṇaṉai He is the eye; āyar tam of Aiyarpadi; akkākkāy! oh crow!; vantu come; kuḻal vārāy and comb His hair; kārmukil vaṇṇaṉ His complexion is that of dark clouds; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb His hair

PAT 2.5.4

165 பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு *
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு *
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட *
பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்.
165 பள்ளத்தில் மேயும் * பறவை உருக் கொண்டு *
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு **
புள் இது என்று * பொதுக்கோ வாய் கீண்டிட்ட *
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் * பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் (4)
165 pal̤l̤attil meyum * paṟavai uruk kŏṇṭu *
kal̤l̤a acuraṉ varuvāṉait tāṉ kaṇṭu **
pul̤ itu ĕṉṟu * pŏtukko vāy kīṇṭiṭṭa *
pil̤l̤aiyai vantu kuzhalvārāy akkākkāy * pey mulai uṇṭāṉ kuzhalvārāy akkākkāy (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

165. Bānasuran came stealthily in the form of a heron that flies on the valley. The divine child understood his disguise and split open his beak in a split second. O crow, come and comb His hair. O crow, come and comb His hair, who drank milk from the wicked Poothana's breasts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பள்ளத்தில் மேயும் தாழ்ந்த நீர் நிலைகளிலே மேயும்; பறவை உருக் கொண்டு பறவை உருவத்தில்; கள்ள அசுரன் வருவானை வரும் கள்ள அசுரனை; தான் கண்டு தானாகப் பார்த்து; புள் இது என்று அதைப் பட்சியாகவே பாவித்து; பொதுக்கோ சட்டென்று; வாய் கீண்டிட்ட வாயைப் பிளந்திட்ட; பிள்ளையை வந்து அருமைப் பிள்ளையிடம் வந்து; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!; பேய்முலை பூதனையின் பாலை; உண்டான் உறிஞ்சியவனின்; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!
tāṉ kaṇṭu You saw; pul̤ itu ĕṉṟu and recognized; kal̤l̤a acuraṉ varuvāṉai Banasuran who came as; paṟavai uruk kŏṇṭu a heron bird; pal̤l̤attil meyum that flies in the valleys; pŏtukko and quickly; vāy kīṇṭiṭṭa opened and broke his beaks; akkākkāy! Oh crow!; pil̤l̤aiyai vantu you come to this child; kuḻal vārāy and comb His hair; uṇṭāṉ by sucking; peymulai the milk, He killed Putana; akkākkāy! oh crow!; kuḻal vārāy come His hair

PAT 2.5.5

166 கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை *
பற்றியெறிந்த பரமன்திருமுடி *
உற்றனபேசி நீஓடித்திரியாதே *
அற்றைக்கும்வந்து குழல்வாராய்அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய்அக்காக்காய்.
166 கற்றினம் மேய்த்துக் * கனிக்கு ஒரு கன்றினைப் *
பற்றி எறிந்த * பரமன் திருமுடி **
உற்றன பேசி * நீ ஓடித் திரியாதே *
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் * ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் (5)
166 kaṟṟiṉam meyttuk * kaṉikku ŏru kaṉṟiṉaip *
paṟṟi ĕṟinta * paramaṉ tirumuṭi **
uṟṟaṉa peci * nī oṭit tiriyāte *
aṟṟaikkum vantu kuzhalvārāy akkākkāy * āzhiyāṉtaṉ kuzhalvārāy akkākkāy (5)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

166. O crow, as he grazed the cattle he hurled Vathsāsuran who came as a calf, onto the wood apple tree, shaking down its fruits and killed him. Don’t fly around everywhere and wander, crowing sweetly and praising the name of the highest. O crow, come every day and help me comb his hair. O crow, come and help me comb the hair of the lord with a discus( chakra) in his hand.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கற்றினம் மேய்த்து கன்றுகளை மேய்த்து; கனிக்கு கனி பறிக்க; ஒரு கன்றினை அசுரனாய் வந்த கன்றினை; பற்றி எறிந்த காலைப் பிடித்து வீசிய; பரமன் திரு முடி பிரானின் தலையை; உற்றன பேசி அவனக்கு இஷ்டமானதைப் பேசி; நீ ஓடித் திரியாதே ஓடி அலையாமல்; அற்றைக்கும் வந்து நாள் தோறும் வந்து; குழல் வாராய் முடியை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!; ஆழியான் தன் ஆழி ஏந்தியவனுடைய; குழல் வாராய் முடியை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!
kaṟṟiṉam meyttu While He grazed the cattle; kaṉikku He shook the fruits from a tree; ŏru kaṉṟiṉai and killed an asuran who came as calf; paṟṟi ĕṟinta by holding his legs and throwing him away; akkākkāy! oh crow!; nī oṭit tiriyāte dont wander around; uṟṟaṉa peci talk to Him on things He likes; aṟṟaikkum vantu and come every day; kuḻal vārāy to comb; paramaṉ tiru muṭi His divine hair; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb the hair; āḻiyāṉ taṉ of the One with discus in His hand

PAT 2.5.6

167 கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை *
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் *
விழிக்குமளவிலே வேரறுத்தானை *
குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
167 கிழக்கில் குடி மன்னர் * கேடு இலாதாரை *
அழிப்பான் நினைந்திட்டு * அவ் ஆழிஅதனால் **
விழிக்கும் அளவிலே * வேர் அறுத்தானைக் *
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய் * கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய் (6)
167 kizhakkil kuṭi maṉṉar * keṭu ilātārai *
azhippāṉ niṉaintiṭṭu * av āzhiataṉāl **
vizhikkum al̤avile * ver aṟuttāṉaik *
kuzhaṟku aṇi ākak kuzhalvārāy akkākkāy * kovintaṉtaṉ kuzhalvārāy akkākkāy (6)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

167. When the innocent people of the eastern region were troubled by Narakasura, He destroyed the asura with His discus (chakra) in the blink of an eye. O crow, come and help me comb his hair and make it beautiful. O crow, come and help me comb Govindan’s hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேடு நமக்கு எந்த கேடும் வராது; இலாதாரை என நினைத்தவர்களை; அழிப்பான் நினைந்திட்டு அழிக்க நினைத்த; கிழக்கில் குடி கீழ்திசை; மன்னர் மன்னர்களான நரகாசுரன்; அவ்வாழி அதனால் சக்கராயுதத்தினால்; விழிக்கும் அளவிலே கண்ணிமைக்கும் நேரத்தில்; வேர் அறுத்தானை வேரோடு அழித்தவனின்; குழற்கு அணியாக கூந்தலுக்கு அலங்காரமாக; குழல் வாராய் தலை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!; கோவிந்தன் கோவிந்தனின்; தன் குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!
avvāḻi ataṉāl with His discus; viḻikkum al̤avile in the blink of the eye; ver aṟuttāṉai He uprooted and destroyed; maṉṉar Narakasuran; ilātārai wo had the desire; aḻippāṉ niṉaintiṭṭu to kill; keṭu the innocent people; kiḻakkil kuṭi of the eastern region; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb; kuḻaṟku aṇiyāka to decorate His hair; akkākkāy! oh crow!; taṉ kuḻal vārāy comb the hair; kovintaṉ of Govinda

PAT 2.5.7

168 பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும் *
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே *
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர் *
வண்டொத்திருண்ட குழல்வாராய்அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
168 பிண்டத் திரளையும் * பேய்க்கு இட்ட நீர்ச் சோறும் *
உண்டற்கு வேண்டி * நீ ஓடித் திரியாதே **
அண்டத்து அமரர் * பெருமான் அழகு அமர் *
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் * மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (7)
168 piṇṭat tiral̤aiyum * peykku iṭṭa nīrc coṟum *
uṇṭaṟku veṇṭi * nī oṭit tiriyāte **
aṇṭattu amarar * pĕrumāṉ azhaku amar *
vaṇṭu ŏttu iruṇṭa kuzhalvārāy akkākkāy * māyavaṉtaṉ kuzhalvārāy akkākkāy (7)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

168. o crow, don't run after the food people offer in ceremony to their ancestors and the rice and water offered to spirits. O crow, come and help me comb the hair, dark as a bee, of the beautiful child, the god of the gods in the sky. O crow, come and help me comb the hair of Māyavan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிண்ட திதிகளில் பித்ருக்குப் போடும்; திரளையும் பிண்டத்தையும்; பேய்க்கு இட்ட பிசாசுகளுக்கு இட்ட; நீர்ச் சோறும் நீர் விட்ட சோற்றையும்; உண்டற்கு வேண்டி சாப்பிடுவதற்காக; நீ ஓடித் திரியாதே நீ ஓடிஅலையாதே!; அண்டத்து மேலுலக; அமரர் பெருமான் தேவர்கள் அதிபதியினுடய; அழகு அமர் அழகு பொருந்திய; வண்டு போல வண்டு போல் உள்ள; இருண்ட குழல் கரிய கூந்தலை; வாராய் அக்காக்காய்! வாரிவிடுவாய் காகமே!; மாயவன் தன் மாயங்கள் புரிபவனின்; குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!
nī oṭit tiriyāte do not wander around; uṇṭaṟku veṇṭi to eat; nīrc coṟum rice mixed with water; tiral̤aiyum and food; peykku iṭṭa offered to spirirts; piṇṭa and ancestors; vārāy akkākkāy! Oh crow comb; iruṇṭa kuḻal the dark hair; amarar pĕrumāṉ of the Lord for the gods; aṇṭattu of the higher worlds; aḻaku amar who is beautiful; vaṇṭu pola like a bee; akkākkāy! Oh crow; kuḻal vārāy comb the hair; māyavaṉ taṉ of the One who does miracles

PAT 2.5.8

169 உந்தியெழுந்த உருவமலர்தன்னில் *
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன் *
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி *
தந்தத்தின்சீப்பால் குழல்வாராய்அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
169 உந்தி எழுந்த * உருவ மலர்தன்னில் *
சந்தச் சதுமுகன் * தன்னைப் படைத்தவன் **
கொந்தக் குழலைக் * குறந்து புளி அட்டி *
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் * தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய் (8)
169 unti ĕzhunta * uruva malartaṉṉil *
cantac catumukaṉ * taṉṉaip paṭaittavaṉ **
kŏntak kuzhalaik * kuṟantu pul̤i aṭṭi *
tantattiṉ cīppāl kuzhalvārāy akkākkāy * tāmotaraṉtaṉ kuzhalvārāy akkākkāy (8)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

169. O crow, He created Brahmā(four-headed Nānmuhan) on a beautiful lotus on his navel. Come and help me comb his hair. Come help me untangle his thick hair with oil and make it beautiful with a white comb made of ivory. O crow, come and help me comb Damodaran’s hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உந்தி எழுந்த உருவ நாபியில் உண்டான; மலர் தன்னில் தாமரை மலரிலே; சந்த அழகிய; சதுமுகன் தன்னை நான்முகனை; படைத்தவன் படைத்தவனின்; கொந்த திரண்ட; குழலைக் குறந்து கூந்தலை சீவி; புளி அட்டி புளிப்பழம் போட்டுத் தேய்த்து; தந்தத்தின் சீப்பால் தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பால்; குழல் வாராய் கூந்தலை வாரிவிடுவாய்!; அக்காக்காய்! காகமே!; தாமோதரன் தன் தாமோதரனின்; குழல் வாராய் கூந்தலை வாரிவிடுவாய்!; அக்காக்காய்! காகமே!
paṭaittavaṉ He was the One who created Brahma; catumukaṉ taṉṉai who emerged; malar taṉṉil on the lotus flower; canta that was beautiful; unti ĕḻunta uruva and originated from His navel; akkākkāy! oh crow!; kuḻalaik kuṟantu comb His hair; kŏnta that is dense; pul̤i aṭṭi and apply tamarind to the hair; kuḻal vārāy comb the hair; tantattiṉ cīppāl with a comb made of ivory; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb the hair of; tāmotaraṉ taṉ Damodaran

PAT 2.5.9

170 மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த *
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் *
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து *
பின்னேயிருந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராய்அக்காக்காய்.
170 மன்னன்தன் தேவிமார் * கண்டு மகிழ்வு எய்த *
முன் இவ் உலகினை * முற்றும் அளந்தவன் **
பொன்னின் முடியினைப் * பூ அணைமேல் வைத்து *
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் * பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் (9)
170 maṉṉaṉtaṉ tevimār * kaṇṭu makizhvu ĕyta *
muṉ iv ulakiṉai * muṟṟum al̤antavaṉ **
pŏṉṉiṉ muṭiyiṉaip * pū aṇaimel vaittu *
piṉṉe iruntu kuzhalvārāy akkākkāy * per āyirattāṉ kuzhalvārāy akkākkāy (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

170. King Māhabali's queens rejoiced, when He measured the whole world (by growing in size). O crow, come. I have put Him on a soft bed. Come from behind and comb His Hair. O crow, come and help me comb the hair of the my child with a thousand names.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னன் தன் தேவிமார் மகாபலியின் மனைவியர்; கண்டு மகிழ்வு எய்த இவனை பார்த்து மகிழ்வடைய; முன் இவ் உலகினை முன்பு இந்த லோகம்; முற்றும் அளந்தவன் முழுதையும் அளந்தவனின்; பொன்னின் முடியினை பொன் போன்ற தலைமுடியை; பூ அணை மேல் பூ போன்ற தலையணை மேல்; வைத்து வைத்து; பின்னே இருந்து நீ பின் பக்கமிருந்து; குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!; பேர் ஆயிரத்தான் ஆயிரம் நாமமுடையவனின்; குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!
maṉṉaṉ taṉ tevimār the queens of King Mahabali; kaṇṭu makiḻvu ĕyya felt happy seeing You; muṉ iv ulakiṉai in the past, You measured; muṟṟum al̤antavaṉ the entire world; vaittu I have spread; pŏṉṉiṉ muṭiyiṉai His golden hair; pū aṇai mel on a flower-like soft pillow; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb His hair; piṉṉe iruntu from behind; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb the hair; per āyirattāṉ of the One with thousand names

PAT 2.5.10

171 கண்டார்பழியாமே அக்காக்காய் * கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல் *
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் *
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2)
171 ## கண்டார் பழியாமே * அக்காக்காய் * கார்வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா * என்ற ஆய்ச்சி சொல் **
விண் தோய் மதிள் * வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல் *
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே (10)
171 ## kaṇṭār pazhiyāme * akkākkāy * kārvaṇṇaṉ
vaṇṭu ār kuzhalvāra vā * ĕṉṟa āycci cŏl **
viṇ toy matil̤ * villiputtūrk koṉ paṭṭaṉ cŏl *
kŏṇṭāṭip pāṭak kuṟukā viṉai tāme (10)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

171. "Hey crow, let not people who see Him, make fun of His uncombed hair. Come, O crow, help me comb His dark cloud-colored hair that swarms with bees. "So says Yashodā to the crow. Pattan, the chief of Villiputhur surrounded by walls that touch the sky, composed these pāsurams that describe how the cowherdess Yashodā called the crow. Those who celebrate and sing these pāsurams, will not have any bad karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்டார் பார்த்தவர்கள்; பழியாமே கேலிசெய்யாதிருக்க; அக்காக்காய்! காக்கையே; கார் வண்ணன் மேக வண்ணனின்; வண்டார் குழல் வண்டை ஒத்த கரிய கூந்தலை; வார வா என்ற வாரி விடுகிறேன் வா என்று; ஆய்ச்சி சொல் யசோதை சொன்னவைகளை; விண்தோய் மதில் விண்ணுயர்ந்த மதிள்களை உடைய; வில்லிபுத்தூர்க் கோன் வில்லிபுத்தூர் கோமகன்; பட்டன் சொல் பெரியாழ்வார் அருளிச் செய்த இவற்றை; கொண்டாடிப் பாட பாராட்டி பாடுவர்களை; குறுகா வினைதானே! அணுகாது வெவ்வினைகள்!
kaṇṭār to avoid people; paḻiyāme making fun; āycci cŏl Yashoda seeked the help; akkākkāy! a crow; vāra vā ĕṉṟa to comb; kār vaṇṇaṉ dark cloud colored Kannan's; vaṇṭār kuḻal dark hair swarmed with bees; kŏṇṭāṭip pāṭa those who sing; paṭṭaṉ cŏl these hyms composed by Periyazhwar; villiputtūrk koṉ the chief of Villiputur; viṇtoy matil the town surrounded by walls that touch the sky; kuṟukā viṉaitāṉe! will not have bad karma