PAT 2.5.9

உலகளந்தான் ஆயிரம் பேருடையான்

170 மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த *
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் *
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து *
பின்னேயிருந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராய்அக்காக்காய்.
170 maṉṉaṉtaṉ tevimār * kaṇṭu makizhvu ĕyta *
muṉ iv ulakiṉai * muṟṟum al̤antavaṉ **
pŏṉṉiṉ muṭiyiṉaip * pū aṇaimel vaittu *
piṉṉe iruntu kuzhalvārāy akkākkāy * per āyirattāṉ kuzhalvārāy akkākkāy (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

170. King Māhabali's queens rejoiced, when He measured the whole world (by growing in size). O crow, come. I have put Him on a soft bed. Come from behind and comb His Hair. O crow, come and help me comb the hair of the my child with a thousand names.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னன் தன் தேவிமார் மகாபலியின் மனைவியர்; கண்டு மகிழ்வு எய்த இவனை பார்த்து மகிழ்வடைய; முன் இவ் உலகினை முன்பு இந்த லோகம்; முற்றும் அளந்தவன் முழுதையும் அளந்தவனின்; பொன்னின் முடியினை பொன் போன்ற தலைமுடியை; பூ அணை மேல் பூ போன்ற தலையணை மேல்; வைத்து வைத்து; பின்னே இருந்து நீ பின் பக்கமிருந்து; குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!; பேர் ஆயிரத்தான் ஆயிரம் நாமமுடையவனின்; குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!
maṉṉaṉ taṉ tevimār the queens of King Mahabali; kaṇṭu makiḻvu ĕyya felt happy seeing You; muṉ iv ulakiṉai in the past, You measured; muṟṟum al̤antavaṉ the entire world; vaittu I have spread; pŏṉṉiṉ muṭiyiṉai His golden hair; pū aṇai mel on a flower-like soft pillow; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb His hair; piṉṉe iruntu from behind; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb the hair; per āyirattāṉ of the One with thousand names