PAT 2.5.6

ப்ராக்ஜ்யோதிஷபுர மன்னரை அழித்தவன்

167 கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை *
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் *
விழிக்குமளவிலே வேரறுத்தானை *
குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
167 kizhakkil kuṭi maṉṉar * keṭu ilātārai *
azhippāṉ niṉaintiṭṭu * av āzhiataṉāl **
vizhikkum al̤avile * ver aṟuttāṉaik *
kuzhaṟku aṇi ākak kuzhalvārāy akkākkāy * kovintaṉtaṉ kuzhalvārāy akkākkāy (6)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

167. When the innocent people of the eastern region were troubled by Narakasura, He destroyed the asura with His discus (chakra) in the blink of an eye. O crow, come and help me comb his hair and make it beautiful. O crow, come and help me comb Govindan’s hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேடு நமக்கு எந்த கேடும் வராது; இலாதாரை என நினைத்தவர்களை; அழிப்பான் நினைந்திட்டு அழிக்க நினைத்த; கிழக்கில் குடி கீழ்திசை; மன்னர் மன்னர்களான நரகாசுரன்; அவ்வாழி அதனால் சக்கராயுதத்தினால்; விழிக்கும் அளவிலே கண்ணிமைக்கும் நேரத்தில்; வேர் அறுத்தானை வேரோடு அழித்தவனின்; குழற்கு அணியாக கூந்தலுக்கு அலங்காரமாக; குழல் வாராய் தலை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!; கோவிந்தன் கோவிந்தனின்; தன் குழல் வாராய் தலையை வாரிவிடுவாய்; அக்காக்காய்! காகமே!
avvāḻi ataṉāl with His discus; viḻikkum al̤avile in the blink of the eye; ver aṟuttāṉai He uprooted and destroyed; maṉṉar Narakasuran; ilātārai wo had the desire; aḻippāṉ niṉaintiṭṭu to kill; keṭu the innocent people; kiḻakkil kuṭi of the eastern region; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb; kuḻaṟku aṇiyāka to decorate His hair; akkākkāy! oh crow!; taṉ kuḻal vārāy comb the hair; kovintaṉ of Govinda