உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலை குறந்து புளி யட்டித் தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2-5-8– –
பதவுரை
அக்காக்காய்!- உந்தி–(தனது) திருநாபியிலே எழுந்த–உண்டான உருவம்–ஸுருபத்தையுடைய மலர் தன்னில்–தாமரைப் பூவிலே சந்தம்–சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய சதுமுகன் தன்னை–நான்முகனை படைத்தவன்–ஸ்ருஷ்டித்த