PAT 2.5.4

பறவை உருக்கொண்ட அசுரன் வதம்

165 பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு *
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு *
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட *
பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்.
165 pal̤l̤attil meyum * paṟavai uruk kŏṇṭu *
kal̤l̤a acuraṉ varuvāṉait tāṉ kaṇṭu **
pul̤ itu ĕṉṟu * pŏtukko vāy kīṇṭiṭṭa *
pil̤l̤aiyai vantu kuzhalvārāy akkākkāy * pey mulai uṇṭāṉ kuzhalvārāy akkākkāy (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

165. Bānasuran came stealthily in the form of a heron that flies on the valley. The divine child understood his disguise and split open his beak in a split second. O crow, come and comb His hair. O crow, come and comb His hair, who drank milk from the wicked Poothana's breasts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பள்ளத்தில் மேயும் தாழ்ந்த நீர் நிலைகளிலே மேயும்; பறவை உருக் கொண்டு பறவை உருவத்தில்; கள்ள அசுரன் வருவானை வரும் கள்ள அசுரனை; தான் கண்டு தானாகப் பார்த்து; புள் இது என்று அதைப் பட்சியாகவே பாவித்து; பொதுக்கோ சட்டென்று; வாய் கீண்டிட்ட வாயைப் பிளந்திட்ட; பிள்ளையை வந்து அருமைப் பிள்ளையிடம் வந்து; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!; பேய்முலை பூதனையின் பாலை; உண்டான் உறிஞ்சியவனின்; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!
tāṉ kaṇṭu You saw; pul̤ itu ĕṉṟu and recognized; kal̤l̤a acuraṉ varuvāṉai Banasuran who came as; paṟavai uruk kŏṇṭu a heron bird; pal̤l̤attil meyum that flies in the valleys; pŏtukko and quickly; vāy kīṇṭiṭṭa opened and broke his beaks; akkākkāy! Oh crow!; pil̤l̤aiyai vantu you come to this child; kuḻal vārāy and comb His hair; uṇṭāṉ by sucking; peymulai the milk, He killed Putana; akkākkāy! oh crow!; kuḻal vārāy come His hair