PAT 2.5.1

கண்ணனின் குழலை வாரக் காக்கையை வாவெனல் பின்னை மணாளன் மாதவன்

162 பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை *
முன்னையமரர் முதல்தனிவித்தினை *
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட *
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2)
162 ## piṉṉai maṇāl̤aṉaip * peril kiṭantāṉai *
muṉṉai amarar * mutal taṉi vittiṉai **
ĕṉṉaiyum ĕṅkal̤ * kuṭi muzhutu āṭkŏṇṭa *
maṉṉaṉai vantu kuzhalvārāy akkākkāy * mātavaṉtaṉ kuzhalvārāy akkākkāy (1)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

162. He is the beloved of Nappinnai and he rests on the waters in Thirupper (Koiladi), the ancient, the unique singular force. He is my protector and that of my whole clan O crow, come and help me comb the hair of the king, the protector of me and my whole clan. . O crow, come and help me comb Mādhavan’s hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னை மணாளனை நப்பின்னை மணாளனை; பேரில் கிடந்தானை திருபேர் தலத்தில் கிடந்தானை; முன்னை அமரர் முதல் நித்யஸூரிகளின் தலைவனாய்; தனி ஒப்பற்ற; வித்தினை காரணனாய்; என்னையும் என்னையும்; எங்கள் குடி முழுது எங்கள் அனைத்துக் குடியினரையும்; ஆட்கொண்ட மன்னனை அடிமைகொண்டபிரபுவின்; வந்து குழல் வாராய் அருகே வந்து தலை வாரிடுவாய்; அக்காக்காய்! காக்கையே!; மாதவன் தன் மாதவனின்; குழல் வாராய் தலையை வாரிடுவாய்; அக்காக்காய்! காக்கையே!
piṉṉai maṇāl̤aṉai He is the beloved of Napinnai; peril kiṭantāṉai the One who resides in Thiruper; muṉṉai amarar mutal the Leader of divine beings; taṉi He is incomparable; vittiṉai and the divine cause; āṭkŏṇṭa maṉṉaṉai He is the protector of; ĕṉṉaiyum me and; ĕṅkal̤ kuṭi muḻutu our entire clan; akkākkāy! oh crow!; vantu kuḻal vārāy come and help comb the hair of; mātavaṉ taṉ Madhavan; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb His hair