PAT 2.5.10

வினைகள் குறுகா

171 கண்டார்பழியாமே அக்காக்காய் * கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல் *
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் *
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2)
171 ## kaṇṭār pazhiyāme * akkākkāy * kārvaṇṇaṉ
vaṇṭu ār kuzhalvāra vā * ĕṉṟa āycci cŏl **
viṇ toy matil̤ * villiputtūrk koṉ paṭṭaṉ cŏl *
kŏṇṭāṭip pāṭak kuṟukā viṉai tāme (10)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

171. "Hey crow, let not people who see Him, make fun of His uncombed hair. Come, O crow, help me comb His dark cloud-colored hair that swarms with bees. "So says Yashodā to the crow. Pattan, the chief of Villiputhur surrounded by walls that touch the sky, composed these pāsurams that describe how the cowherdess Yashodā called the crow. Those who celebrate and sing these pāsurams, will not have any bad karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்டார் பார்த்தவர்கள்; பழியாமே கேலிசெய்யாதிருக்க; அக்காக்காய்! காக்கையே; கார் வண்ணன் மேக வண்ணனின்; வண்டார் குழல் வண்டை ஒத்த கரிய கூந்தலை; வார வா என்ற வாரி விடுகிறேன் வா என்று; ஆய்ச்சி சொல் யசோதை சொன்னவைகளை; விண்தோய் மதில் விண்ணுயர்ந்த மதிள்களை உடைய; வில்லிபுத்தூர்க் கோன் வில்லிபுத்தூர் கோமகன்; பட்டன் சொல் பெரியாழ்வார் அருளிச் செய்த இவற்றை; கொண்டாடிப் பாட பாராட்டி பாடுவர்களை; குறுகா வினைதானே! அணுகாது வெவ்வினைகள்!
kaṇṭār to avoid people; paḻiyāme making fun; āycci cŏl Yashoda seeked the help; akkākkāy! a crow; vāra vā ĕṉṟa to comb; kār vaṇṇaṉ dark cloud colored Kannan's; vaṇṭār kuḻal dark hair swarmed with bees; kŏṇṭāṭip pāṭa those who sing; paṭṭaṉ cŏl these hyms composed by Periyazhwar; villiputtūrk koṉ the chief of Villiputur; viṇtoy matil the town surrounded by walls that touch the sky; kuṟukā viṉaitāṉe! will not have bad karma