PAT 2.5.3

அமரர் பெருமான் கண்ணன்

164 திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த *
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் *
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
164 tiṇṇak kalattil * tirai uṟimel vaitta *
vĕṇṇĕy vizhuṅki * viraiya uṟaṅkiṭum
aṇṇal ** amarar pĕrumāṉai * āyartam
kaṇṇaṉai vantu kuzhalvārāy akkākkāy * kārmukil vaṇṇaṉ kuzhalvārāy akkākkāy (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

164. He swallowed the butter kept in a strong pot on the uri and quickly ran away, pretending to rest. He is the god of gods, the cowherds' chief O crow, , come and help me comb Kannan's hair. His complexion is dark as a cloud. Come and help me comb his hair.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திண்ணக் கலத்தில் திடமான கலத்தில்; திரை உறி மேல் முறுக்கேறிய உறியில்; வைத்த வைத்திருந்த; வெண்ணெய் வெண்ணெயை; விழுங்கி விழுங்கிவிட்டு; விரைய உறங்கிடும் வேகமாகத் தூங்கப் போகும்; அண்ணல் ஸ்வாமி; அமரர் பெருமானை தேவர்பிரான்; ஆயர் தம் ஆயர்களின்; கண்ணனை கண் போன்றவனிடம்; வந்து வந்து; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!; கார்முகில் வண்ணன் கரு மேக நிறத்தழகனின்; குழல் வாராய் தலையை வாரி விடுவாய்; அக்காக்காய்! காகமே!
aṇṇal Swami; amarar pĕrumāṉai the Lord of the gods; viḻuṅki swallowed; vĕṇṇĕy the butter; vaitta stored in a; tiṇṇak kalattil secure; tirai uṟi mel and strong pot; viraiya uṟaṅkiṭum and ran pretending to rest; kaṇṇaṉai He is the eye; āyar tam of Aiyarpadi; akkākkāy! oh crow!; vantu come; kuḻal vārāy and comb His hair; kārmukil vaṇṇaṉ His complexion is that of dark clouds; akkākkāy! oh crow!; kuḻal vārāy comb His hair