பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும் உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய் மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2-5-7– –
பதவுரை
அக்காக்காய்!- பிண்டம் திரளையும்–(பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும் பேய்க்கு இட்ட-பிசாசங்களுக்குப் பொகட்ட நீர் சோறும்–நீரையுடைய சோற்றையும் உண்டற்கு–உண்ணுதற்கு