இவற்றில் ப்ராவண்யம் இவள் பரமே யென்னவுண்டாய் ஷோடச கலாபூர்ணமான சந்த்ரமண்டலம்போலே பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே தேவபோக்யமானவதில் அம்ருதம் போலன்றிக்கே என்னாத் தமிழரிசைகாரர் முதற்பத்தர் வானவரென்னம்மான் பார்பரவென்னும்படி ஸேச்வரவிபூதி போக்யமான பாலோடமுதன்ன மென்மொழி முகஞ்செய்தது.