Chapter 8

Sending messenger birds including to Thirunādu - (பொன் உலகு)

திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்
This segment is about sending emissaries to Bhagavān. Āzhvār sends various species of birds as his messengers. “When you meet Bhagavān, ask Him if what He is doing is on par with His nature” instructs parānkusa nāyaki to her emissaries in these hymns.
இது தூது விடும் பகுதி. ஆழ்வார் புள்ளினங்களை இதில் தூது விடுகிறார். “பகவானைப் பார்த்து, இச்செயல் உன் தகுதிக்கு ஏற்றதுதானா எனக் கேளுங்கள்” என்று கூறிப் பராங்குசநாயகி பறவைகளைத் தூது விடுதல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
Verses: 3420 to 3430
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: their hearts will melt for the god
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.8.1

3420 பொன்னுலகாளீரோ! புவனிமுழுதாளீரோ? *
நன்னலப்புள்ளினங்காள்! வினையாட்டியேன்நானிரந்தேன் *
முன்னுலகங்களெல்லாம்படைத்த முகில்வண்ணன் கண்ணன் *
என்னலங்கொண்டபிரான்தனக்கு என்நிலைமை யுரைத்தே. (2)
3420 ## பொன் உலகு ஆளீரோ * புவனி முழுது ஆளீரோ? *
நல் நலப் புள்ளினங்காள் * வினையாட்டியேன் நான் இரந்தேன் **
முன் உலகங்கள் எல்லாம் படைத்த * முகில்வண்ணன் கண்ணன் *
என் நலம் கொண்ட பிரான் தனக்கு * என் நிலைமை உரைத்தே. (1)
3420 ## pŏṉ ulaku āl̤īro * puvaṉi muzhutu āl̤īro? *
nal nalap pul̤l̤iṉaṅkāl̤ * viṉaiyāṭṭiyeṉ nāṉ iranteṉ **
muṉ ulakaṅkal̤ ĕllām paṭaitta * mukilvaṇṇaṉ kaṇṇaṉ *
ĕṉ nalam kŏṇṭa pirāṉ taṉakku * ĕṉ nilaimai uraitte. (1)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Birds of noble demeanor, I implore you, convey to the Lord with the color of clouds, the Creator of worlds, the Benefactor who instilled such immense love in me, my state of being. In return, I shall bestow upon you the authority to govern both the earthly realm and the magnificent SriVaikuntam.

Explanatory Notes

(i) Two special points are made out, in this song. No reward is too great for those who mediate between us and God, not even the Earth and spiritual world, put together. Therefore it is, aphorism 432 of ‘Śrī Vacaṉa Bhūṣaṇa’ avers that it would be possible to recompense theĀcāryā, in an adequate measure only if there were four vibhūtīs and two Gods. The idea is that any + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நல சிறந்த நற்குணங்களையுடைய; புள்ளினங்காள்! பறவைக் கூட்டங்களே!; வினையாட்டியேன் பாபங்களையுடைய நான்; நான் இரந்தேன் உங்களை யாசித்துக் கேட்கிறேன்; முன் உலகங்கள் தொடக்க காலத்தில் உலகங்களை; எல்லாம் படைத்த எல்லாம் படைத்த; முகில் வண்ணன் மேக நிறப் பெருமானான; கண்ணன் கண்ணனிடம்; என் நலம் கொண்ட எனக்கு நன்மைகளைச் செய்த; பிரான் தனக்கு ஸ்வாமியிடம்; என் நிலைமை என் நிலைமை எடுத்து; உரைத்தே சொல்லி நீங்கள் செய்யும் இந்த உதவிக்கு; பொன் உலகு நீங்கள் பரமபதத்தை; ஆளீரோ ஆளும்படியும்; புவனி முழுது இந்த பூலோகத்தை; ஆளீரோ ஆளும்படியும் நான் செய்வேன்
vinaiyāttiyĕn who am having sins to be separated from him and sending message to him; nān ī; irandhĕn praying to you as his devotees pray to him;; mun in the beginning; ulagangal̤ world; ellām all; padaiththa created; mugil like black cloud; vaṇṇan one who is having divine form; kaṇṇan being easily approachable for his devotees [as krishṇa]; en my; nalam all distinguished features; koṇda took ownership; pirān thanakku to the benefactor; en my; nilaimai state; uraiththu informing; pon eternally desirable; ulagu paramapadham; āl̤īrŏ? would you rule?; bhuvani highlighted by the earth; muzhudhu entire material realm; āl̤īrŏ rule.; kil̤igāl̤ ŏh parrots (who are enjoyable for both parānguṣa nāyaki and emperumān due to their physical beauty and sweet talks)!; kai amar chakkaram having the beautiful combination of his hand and the divine disc

TVM 6.8.2

3421 மையமர்வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து *
நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ? *
கையமர்சக்கரத்து என்கனிவாய்ப்பெருமானைக் கண்டு *
மெய்யமர்காதல்சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.
3421 மை அமர் வாள் நெடும் கண் * மங்கைமார் முன்பு என் கை இருந்து *
நெய் அமர் இன் அடிசில் * நிச்சல் பாலொடு மேவீரோ **
கை அமர் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
மெய் அமர் காதல் சொல்லிக் * கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2)
3421 mai amar vāl̤ nĕṭum kaṇ * maṅkaimār muṉpu ĕṉ kai iruntu *
nĕy amar iṉ aṭicil * niccal pālŏṭu mevīro **
kai amar cakkarattu * ĕṉ kaṉivāyp pĕrumāṉaik kaṇṭu *
mĕy amar kātal cŏllik * kil̤ikāl̤ viraintu oṭivante (2)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Parrots, go to my Lord with red lips, carrying my wish to be embraced by Him. Return soon and bring sweet porridge with ghee and milk for me to hold in front of my friends who have beautiful and kohl-lined eyes.

Explanatory Notes

Having offered both spiritual world and Earth to her emissaries, in the last song, the Nāyakī now offers to give her very self unto them, a more precious gift, coveted by the Lord Himself and that too, not secretly, but in front of all her mates. It is noteworthy that the Nāyaki indicates beforehand how she would reward her emissaries. The accent thus ultimately rests on service unto the Lord’s devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிளிகாள்! கிளிகளே!; கை அமர் கையிலிருக்கும்; சக்கரத்து சக்கரத்துடனும்; என் கனி கோவைக் கனி போன்ற; வாய் அதரத்துடனும் இருக்கும்; பெருமானைக் கண்டு பெருமானைக் கண்டு; மெய் அமர் என்னுடைய ஆழ்ந்த; காதல் சொல்லி காதலைச் சொல்லி; விரைந்து ஓடிவந்தே விரைந்து ஓடி வந்து; மை அமர் வாள் மை பொருந்திய வாள் போன்ற; நெடுங் கண் நீண்ட கண்களை உடைய; மங்கைமார் முன்பு பெண்களின் முன்னால்; என் கை இருந்து என் கையிலிருந்து; நெய் அமர் நெய்யோடும்; பாலோடு பாலோடும் கூடின; இன் அடிசில் இனிய உணவினை; நிச்சல் மேவீரோ தினமும் அங்கீகரிக்க வேண்டும்
kani enjoyable like a ripened fruit; vāy having beautiful lips; en perumānai the lord who has accepted me as his servitor; kaṇdu (you who are fortunate to see him before me,) on seeing; mey with the divine form; amar to enjoy in abundance; kādhal great desire; solli telling; viraindhu in a speedy manner; ŏdi vandhu arriving quickly; mai black pigment; amar aptly; vāl̤ radiant; nedu expansive; kaṇ having eyes; mangaimār munbu in the presence of the girl friends who are of the same age; en my; kai hand; irundhu being present; ney with ghee; amar together; in sweet; adisil rice; pālodu with milk; nichchal eternally; mĕvīr accept.; kūdiya mutually close; vaṇdu inangāl̤ swarm of bees!

TVM 6.8.3

3422 ஓடிவந்தென்குழல்மேல் ஒளிமாமலரூதீரோ? *
கூடிய வண்டினங்காள் குருநாடுடையைவர்கட்காய் *
ஆடியமாநெடுந்தேர்ப் படைநீறெழச்செற்றபிரான் *
சூடியதண்துளவமுண்ட தூமதுவாய்கள்கொண்டே.
3422 ஓடிவந்து என் குழல்மேல் * ஒளி மா மலர் ஊதீரோ *
கூடிய வண்டினங்காள் * குருநாடு உடை ஐவர்கட்கு ஆய் **
ஆடிய மா நெடும் தேர்ப்படை * நீறு எழச் செற்ற பிரான் *
சூடிய தண் துளவம் உண்ட * தூ மது வாய்கள் கொண்டே (3)
3422 oṭivantu ĕṉ kuzhalmel * ŏl̤i mā malar ūtīro *
kūṭiya vaṇṭiṉaṅkāl̤ * kurunāṭu uṭai aivarkaṭku āy **
āṭiya mā nĕṭum terppaṭai * nīṟu ĕzhac cĕṟṟa pirāṉ *
cūṭiya taṇ tul̤avam uṇṭa * tū matu vāykal̤ kŏṇṭe (3)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh, merry swarm of bees, fly swiftly and sip the sweet nectar from the cool tuḷaci flowers adorning the locks of my Lord. He who shattered mighty steeds and vast chariots, securing victory for the five Pandavas, awaits your return. Amid the vibrant blooms, revel on my hair with joyous dance.

Explanatory Notes

Here is a case of collective bargaining by a swarm of bees, on behalf of the Nāyakī. And when they come back with their mouths, soaked in honey from the Lord’s locks, they could jolly well play right on the Nāyakī’s head and thus indirectly feed her with the Lord’s honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூடிய கூடிக் களிக்கும்; வண்டினங்காள்! வண்டினங்களே!; குருநாடு உடை குரு நாடு குரு வம்சத்தைச் சேர்ந்த; ஐவர்கட்கு ஆய் பாண்டவர்களுக்காக; ஆடிய மா வெற்றி பொருந்திய குதிரைகளை பூட்டிய; நெடுந் தேர் நீண்ட தேரை ஓட்டி; படை துர்யோதனனின் படைகளை; நீர் எழ செற்ற பொடியாகும்படி அழித்த; பிரான் ஸ்வாமியிடம் சென்று; சூடிய அவன் அணிந்துள்ள; தண் துளவம் குளிர்ந்த துளசியிலுள்ள; உண்ட தேனைப் பருகி; தூ மது தூய மதுவை உடைய; வாய்கள் கொண்டே வாய்களைக் கொண்டு; ஓடி வந்து ஓடி வந்து; என் குழல் மேல் என் கூந்தலின் மேலுள்ள; ஒளி மா மலர் ஒளி பொருந்திய பூக்களில்; ஊதீரோ ஊதுவீர்களாக
kuru nādudai the leaders of kurukshĕthra; aivargatku āy for the five pāṇdavas; ādiya having beautiful movements; horses; nedu tall; thĕr chariots; padai army; nīṛu ezha to become dust particles; seṝa destroyed; pirān krishṇa, the great benefactor; sūdiya decorated on his divine hair; thaṇ invigorating; thul̤abam from the thiruththuzhāy; uṇda drank; thū pure; madhu having honey; vāygal̤ mouth; koṇdu having; ŏdi vandhu coming here immediately; en my; kuzhalmĕl on hair; ol̤i radiant; best; malar in flower; ūdhīr suck it as you sucked the honey; en raised by me; mullaigal̤ jasmine

TVM 6.8.4

3423 தூமதுவாய்கள்கொண்டுவந்து என்முல்லைகள்மேல் தும்பிகாள் *
பூமதுஉண்ணச்செல்லில் வினையேனைப்பொய் செய்தகன்ற *
மாமதுவார்தண்துழாய்முடி வானவர்கோனைக்கண்டு *
யாமிதுவோதக்கவாறு என்னவேண்டும்கண்டீர் நுங்கட்கே.
3423 தூ மது வாய்கள் கொண்டுவந்து * என் முல்லைகள்மேல் தும்பிகாள் *
பூ மது உண்ணச் செல்லில் * வினையேனைப் பொய்செய்து அகன்ற **
மா மது வார் தண் துழாய் முடி * வானவர் கோனைக் கண்டு *
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் * கண்டீர் நுங்கட்கே? (4)
3423 tū matu vāykal̤ kŏṇṭuvantu * ĕṉ mullaikal̤mel tumpikāl̤ *
pū matu uṇṇac cĕllil * viṉaiyeṉaip pŏycĕytu akaṉṟa **
mā matu vār taṇ tuzhāy muṭi * vāṉavar koṉaik kaṇṭu *
yām ituvo takkavāṟu ĕṉṉaveṇṭum * kaṇṭīr nuṅkaṭke? (4)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Sweet beetles dwelling in jasmine flowers, raised by me, when next you seek honey, meet the Lord of Nithyasuris in SriVaikuntam. He wears a cool tuḷaci garland on His head, who freely mingled with this sinner as if in a dream, and then departed. Express that it is hardly fitting for Him to cling to sovereignty and leave me behind.

Explanatory Notes

(i) The beetles, ever in quest of honey, are directed by the Nāyakī to the Lord in spiritual world, on whose crown is honey-studded tuḷaci, garland, so as to gather the honey therefrom and incidentally tell the Lord that He should not keep aloof from her, at that distance, gloating over His transcendent glory. It is through such mediation by the God’s chosen few, His detachment + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முல்லைகள் மேல் முல்லைக் கொடியில் வாழும்; என் தும்பிகாள்! எனக்குப் பிரியமான தும்பிகளே!; தூ மது தூய மதுவைப் பருக; வாய்கள் வாயை; கொண்டு வந்து என் கொண்டு வந்து; பூ மது அந்த முல்லைப் பூவிலுள்ள மதுவை; உண்ண உண்ண; செல்லில் சென்றால் நீங்கள் செய்யவேண்டியது; வினையேனை பாவியான என்னுடன்; பொய் செய்து பொய்யான கலவிகளைச் செய்து; அகன்ற நீங்கிய பிரிந்து போன; மா மது வார் சிறந்த மது பெருகும்; தண் துழாய் குளிர்ந்த துளசி மாலை; முடி தரித்த முடியை உடையவனும்; வானவர் கோனை நித்யஸூரிகளின் தலைவனுமான; கண்டு பெருமானைக் கண்டு; நுங்கட்கே உங்களுக்கே இது; யாம் இதுவோ அந்தப் பெண்ணை இப்படி; கண்டீர் தவிக்கவிடுவது; தக்கவாறு தகுந்தது தானோ?; என்ன வேண்டும் என்று நீங்கள் கேளுங்கள்
mĕl seated on; thumbigāl̤ dragonflies!; thū pure; madhu having honey as identity; vāygal̤ mouths; koṇdu with; vandhu arriving; flower-s; madhu honey; uṇṇa to drink; sella if you set out; vinaiyĕnai me who is having the sin which caused the separation [from emperumān ]; poy mischievous union; seydhu performed; aganṛa separated; greatly flowing; madhu honey; vār dripping; thaṇ cool; thuzhāy decorated with thiruththuzhāy; mudi donning the divine crown; vānavar for nithyasūris (eternal associates of emperumān in paramapadham); kŏnai one who is the ruler; kaṇdu on seeing; nungatku for you (who are present in such prosperous situation); yām your highness; idhuvŏ should manifest your supremacy like this?; thakkavāṛu fitting your merciful stature?; yān ī; val̤arththa grew up by my raising

TVM 6.8.5

3424 நுங்கட்குயானுரைக்கேன்வம்மின் யான்வளர்த்த கிளிகாள் *
வெங்கட்புள்ளூர்ந்துவந்து வினையேனைநெஞ்சங்கவர்ந்த *
செங்கட்கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை *
எங்குச்சென்றாகிலும்கண்டு இதுவோதக்கவாறு என்மினே.
3424 நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் * யான் வளர்த்த கிளிகாள் *
வெம் கண் புள் ஊர்ந்து வந்து * வினையேனை நெஞ்சம் கவர்ந்த **
செங்கண் கருமுகிலைச் * செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை *
எங்குச் சென்றாகிலும் கண்டு * இதுவோ தக்கவாறு? என்மினே (5)
3424 nuṅkaṭku yāṉ uraikkeṉ vammiṉ * yāṉ val̤artta kil̤ikāl̤ *
vĕm kaṇ pul̤ ūrntu vantu * viṉaiyeṉai nĕñcam kavarnta **
cĕṅkaṇ karumukilaic * cĕyya vāyc cĕzhuṅ kaṟpakattai *
ĕṅkuc cĕṉṟākilum kaṇṭu * ituvo takkavāṟu? ĕṉmiṉe (5)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

My dear pet parrots, come close as I have something to tell you. Wherever you may fly, find the Lord with the hue of clouds, with lotus-like eyes, the fulfiller of wishes, perched uniquely on the hot-eyed bird. He who stole this sinner's heart when He came to me. Tell Him it's not right for us to be apart.

Explanatory Notes

(i) Be it anywhere: Go and ferret Him out, wherever He might be hiding, even as Hanumān solemnly resolved that he shall go to swarga [svarga] and find out Sītā even if he couldn’t locate her in Laṅkā. It is this phrase that gives the clue for the interpretation that this song deals with the ‘Antaryāmi’ (hidden or all-pervading) aspect of the Lord, as well.

(ii) Unique + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் வளர்த்த நான் வளர்த்த; கிளிகாள்! கிளிகளே!; வம்மின் வாருங்கள்; நுங்கட்கு யான் உங்களுக்கு நான்; உரைக்கேன் ஒன்று சொல்லுகிறேன்; வெம் கண் கொடிய கண்களை உடைய; புள் ஊர்ந்து வந்து கருடன் மேல் ஊர்ந்து வந்து; வினையேனை பாவியான; நெஞ்சம் கவர்ந்த என் மனதைக் கவர்ந்த; செங் கண் சிவந்த கண்களை உடைய; கரு முகிலை மேகவர்ணப் பெருமானை; செய்ய வாய் சிவந்த அதரத்தை உடையவனை; செழும் செழுமையான; கற்பகத்தை கற்பகம் போன்றவனை; எங்குச் சென்று ஆகிலும் எங்கே சென்றாகிலும்; கண்டு கண்டு வணங்கி; இதுவோ தக்க வாறு? இதுதானோ தகுதி?; என்மினே என்று கேளுங்கள்
kil̤igāl̤ ŏh parrots!; vammin come (not ignoring me due to your familiarity towards me); yān ī (who am going to benefit by you who are raised by me); nungatku to you (who will live if ī live); uraikkĕn telling (you what you already know and do);; vem staring at the enemies; kaṇ having eye; pul̤ periya thiruvadi (garudāzhwān); ūrndhu riding him (to reveal his urge); vandhu arriving (near me); vinaiyĕnai me who is having the sin to be separated from him now; nenjam kavarndha having captured my heart; sem reddish; kaṇ eye; karumugilai having a blackish-form (contrast to that red colour, being seated in an apt way on the shoulders of periya thiruvadi as said in -pon malaiyin mīmisaik kārmugil pŏlĕ- (like a dark cloud on a golden mountain)); seyya reddish (due to being pleased with the accomplishment of the desire); vāy having beautiful lips; sezhum kaṛpagaththai the great benefactor, who is like a distinguished kalpaka (desire fulfilling) tree (for letting me enjoy this beauty as a benefit for him); engāgilum any location/state such as para (paramapadham), vyūha (milky ocean), vibhava (incarnations) etc; senṛu go; kaṇdu see; idhuvŏ this act of capturing her heart and making her feel lonely; thakkavāṛu apt; enmin ask that!; thī cruel (instead of my serving you, ī am making you serve me); vinaiyĕn ī (who am having sin)

TVM 6.8.6

3425 என்மின்னுநூல்மார்வன் என்கரும்பெருமா னென்கண்ணன் *
தன்மன்னுநீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றிநல்கான் *
கன்மின்கள்என்றும்மையான் கற்பியாவைத்தமாற்றம் சொல்லி *
சென்மின்கள்தீவினையேன் வளர்த்தசிறுபூவைகளே.
3425 என் மின்னு நூல் மார்வன் * என் கரும் பெருமான் என் கண்ணன் *
தன் மன்னு நீள் கழல்மேல் * தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் **
கல்மின்கள் என்று உம்மை யான் * கற்பியாவைத்த மாற்றம்சொல்லி *
செல்மின்கள் தீவினையேன் * வளர்த்த சிறு பூவைகளே (6)
3425 ĕṉ miṉṉu nūl mārvaṉ * ĕṉ karum pĕrumāṉ ĕṉ kaṇṇaṉ *
taṉ maṉṉu nīl̤ kazhalmel * taṇ tuzhāy namakku aṉṟi nalkāṉ **
kalmiṉkal̤ ĕṉṟu ummai yāṉ * kaṟpiyāvaitta māṟṟamcŏlli *
cĕlmiṉkal̤ tīviṉaiyeṉ * val̤artta ciṟu pūvaikal̤e (6)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Little Pūvai birds, nurtured by this fortunate sinner, fly to my dark-hued Kaṇṇaṉ adorned with a radiant sacred thread on His charming chest, a gift He once bestowed upon me. Gentle and kind, He will grant only to us the cool tuḷaci flowers adorning His long feet. Recite to Him the hymns I have taught you, remembering them completely intact.

Explanatory Notes

(i) The little Pūvai birds, commissioned by the Nāyakī to carry her message to the Supreme Lord, were naturally diffident about getting the Lord’s attention. The Nāyakī, therefore, enthuses them by saying that the Lord, who had enticed her by His sweet decorations, exquisite Form and amazing simplicity, would surely give unto His devotees, the tuḷaci worn on His feet. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீவினையேன் பாவியான நான்; வளர்த்த வளர்த்த; சிறு பூவைகளே! சிறிய பூவைப் பறவைகளே!; என் மின்னு நூல் மின்னும் பூணூல் அணிந்த; மார்வன் மார்பை உடைய; என் கரும் கருத்த நிறமுடைய; பெருமான் பெருமான்; என் கண்ணன் என் கண்ணன்; தன் மன்னு நீள் தன் நீண்ட; கழல்மேல் திருவடிகளின் மீது; தண் குளிர்ந்து; துழாய் பொருந்தி இருக்கும் துளசியை; நமக்கு அன்றி என்னைத் தவிர வேறு; நல்கான் ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது; என்று என்று நான் சொல்வதை; கல்மின்கள் கற்றுக் கொள்ளுங்கள்; உம்மை யான் உங்களுக்கு நான்; கற்பியாவைத்த கற்பித்து வைத்ததை; மாற்றம் சொல்லி இதுவோ தக்கது என்று; செல்மின்கள் அவனிடம் சென்று கேளுங்கள்
val̤arththa raised; siṛu young; pūvaigal̤ĕ ŏh mynās!; en minnu nūl mārvan one who let me enjoy his divine chest which is having the divine yagyŏpavīdham which is shining contrarily to his black coloured divine body; en karum perumān my lord who let me enjoy (not only the part-by-part beauty, but also) his wholly beautiful dark-coloured body and my swāmy (l̤ord) who made me his servitor; en totally obedient to me; kaṇṇan krishṇa; than his; nīl̤ which stretch up to the location of his devotees; kazhal divine feet; mĕl on; mannu fittingly present; thaṇ invigorating; thuzhāy thiruththuzhāy; namakku to us; anṛi but; nalgān will not give joyfully (to anyone else); kanmingal̤ l̤earn now!; enṛu that; ummai you (who are young and prideful); yān ī (who am ready to accept your service); kaṛpiyā vaiththa taught (saying -en minnu nūl mārvan- nalgān-); māṝam words; solli saying that; senmingal̤ go!; pūvaigal̤ pŏl (beautiful) like pūvaippū (blue coloured flower); niṛaththan having complexion

TVM 6.8.7

3426 பூவைகள்போல்நிறத்தன் புண்டரீகங்கள்போலும் கண்ணன் *
யாவையும்யாவருமாய் நின்றமாயனென்னாழிப்பிரான் *
மாவைவல்வாய்பிளந்த மதுசூதற்கென்மாற்றம் சொல்லி *
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன்பாசறவே.
3426 பூவைகள் போல் நிறத்தன் * புண்டரீகங்கள் போலும் கண்ணன் *
யாவையும் யாவரும் ஆய் * நின்ற மாயன் என் ஆழிப் பிரான் **
மாவை வல் வாய் பிளந்த * மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி *
பாவைகள் தீர்க்கிற்றிரே * வினையாட்டியேன் பாசறவே? (7)
3426 pūvaikal̤ pol niṟattaṉ * puṇṭarīkaṅkal̤ polum kaṇṇaṉ *
yāvaiyum yāvarum āy * niṉṟa māyaṉ ĕṉ āzhip pirāṉ **
māvai val vāy pil̤anta * matucūtaṟku ĕṉ māṟṟam cŏlli *
pāvaikal̤ tīrkkiṟṟire * viṉaiyāṭṭiyeṉ pācaṟave? (7)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Dolls of mine, can you carry my words to the amazing Lord with blue hue and lotus eyes? He who showed me His beautiful discus, who takes on all forms of things and beings, who defeated Matu and split the mouth of a demoniac horse. Can you alleviate this sinner's miserable plight?

Explanatory Notes

The Nāyakī’s plight is such that she is obliged to seek the assistance of even inanimate things like dolls; the Supreme Lord seems to be indifferent while the mobile creatures like the winged birds have their own occupations. In the last resort, she falls back upon her very playthings. The folks around question why at all she should agitate like this, when the Lord is + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவைகள்! பாவைகளே!; பூவைகள் போல் காயாம்பூ போன்ற; நிறத்தன் நிறமுடையுவனும்; புண்டரீகங்கள் செந்தாமரைகள்; போலும் கண்ணன் போன்ற கண்களுடையவனும்; யாவையும் அசேதனமும்; யாவரும் ஆய் நின்ற சேதனமுமாய் நிற்பவனும்; மாயன் மாயனுமான; என் ஆழி சக்கரத்தைக் கையிலுடைய; பிரான் என் ஸ்வாமியானவன்; மாவை கேசி என்னும் குதிரையாக வந்த அசுரனின்; வல் வாய் பிளந்த வலிய வாயைப் பிளந்த; மதுசூதற்கு மதுசூதனனிடம்; வினையாட்டியேன் பாவியான; என் மாற்றம் நான் சொன்னதை; சொல்லி சொல்வீர்களானால்; பாசறவே என் பசலை நிறமும்; தீர்க்கிற்றிரே என் துக்கமும் தீரும்
puṇdarīgangal̤ pŏlum like lotus flowers; kaṇṇan having eyes; yāvaiyum all achĕthanas (insentient objects); yāvarum all chĕthanas (sentient beings); āy having as body/form, in those forms; ninṛa being untouched by their defects; māyan (while being amaśingly present everywhere) being able to be aloof; en āzhip pirān the great benefactor who let me enjoy his beautiful combination of hand and divine chakra (disc), earlier; māvai kĕṣi, the horse (who was a hurdle for the gŏpikās who were enjoying him); val very strong; vāy mouth; pil̤andha one who tore; madhusūdhaṛku for madhusūdhana (who is naturally the eliminator of enemies); en māṝam the words ī taught to the parrots and mynās; solli telling; pāvaigal̤ ŏh dolls (who remain here unable to bear my sorrow, unlike the birds who flew away)!; vinaiyāttiyĕn me who is sinful to be forced to get my desire fulfilled through you; pāsaṛavu loss of fresh complexion; thīrkkiṝirĕ can you remedy?; āsu any shortcoming in flying; aṛu not having

TVM 6.8.8

3427 பாசறவெய்தியின்னே வினையேனெனையூழிநைவேன்? *
ஆசறுதூவிவெள்ளைக்குருகே அருள்செய்தொருநாள் *
மாசறுநீலச்சுடர்முடி வானவர்கோனைக் கண்டு *
ஏசறும்நும்மையல்லால் மறுநோக்கிலள்பேர்த்துமற்றே.
3427 பாசறவு எய்தி இன்னே * வினையேன் எனை ஊழி நைவேன் *
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே * அருள்செய்து ஒருநாள் **
மாசு அறு நீலச் சுடர் முடி * வானவர் கோனைக் கண்டு *
ஏசு அறும் நும்மை அல்லால் * மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8)
3427 pācaṟavu ĕyti iṉṉe * viṉaiyeṉ ĕṉai ūzhi naiveṉ *
ācu aṟu tūvi vĕl̤l̤aik kuruke * arul̤cĕytu ŏrunāl̤ **
mācu aṟu nīlac cuṭar muṭi * vāṉavar koṉaik kaṇṭu *
ecu aṟum nummai allāl * maṟunokku ilal̤ perttu maṟṟe (8)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You, pure stork with flawless feathers, kindly set aside a day for me. Go and visit the Lord in SriVaikuntam, the One with blue-tinted and pristine locks, and inquire how much longer this sinner must endure in such a state. Tell Him, in essence, that besides His faultless Self, there is no refuge for me.

Explanatory Notes

The Nāyakī prays to the stork, near at hand, to carry her message to the Lord of the Celestials, in spiritual world and bursts into grief. She can’t articulate and spell out her woes, in detail, as both her grief and the Lord, whose separation is the cause thereof, are too deep for words.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆசு அறு தூவி குற்றமற்ற சிறகுகளை உடைய; வெள்ளைக் குருகே! வெள்ளைப் பறவைகளே!; வினையேன் பாவியான நான்; பாசறவு எய்தி பிரிவால் நிறமழிந்து; இன்னே பசலை நிறத்துடன்; எனை ஊழி எத்தனை காலம் தான்; நைவேன்! துன்புறுவேன்; அருள் செய்து ஒரு நாள் ஒரு நாள் அருள் செய்து; மாசறு நீல மாசற்ற நீல; சுடர் முடி ஒளிமயமான முடியை உடைய; வானவர் நித்யஸூரிகளின்; கோனைக் கண்டு தலைவனைக் கண்டு; ஏசறும் நும்மை பழிப்பற்ற உம்மை; அல்லால் அல்லாது; பேர்த்து மற்றே மறு வேறு எதையும் பார்க்காத; நோக்கு இலள் நிலையில் உள்ளாள் என்று சொல்லுங்கள்
thūvi having wings; vel̤l̤ai having white colour which reflects the internal purity; kurugĕ ŏh heron!; vinaiyĕn ī who am sinful not seeing the end of this suffering in separation; pāsaṛavu eydhi losing my complexion; innĕ in this manner; enai ūzhi many kalpa (day of brahmā); naivĕn will remain broken;; māsu fault; aṛu not having; neelach chudar having blue radiance; mudi having hair; vānavar for nithyasūris; kŏnai the supreme lord, who is the leader; kaṇdu on seeing; ĕsu blemish; aṛum not having; nummai you; allāl other than; pĕrththu further; maṝu other; maṛu nŏkkilal̤ not having the option to see;; oru nāl̤ one day; arul̤ sey give your mercy.; nīr water-s; thirai tide

TVM 6.8.9

3428 பேர்த்துமற்றோர்களைகண் வினையாட்டியேன் நானொன்றிலேன் *
நீர்த்திரைமேலுலவி இரைதேரும்புதாவினங்காள் *
கார்த்திரள்மாமுகில்போல்கண்ணன் விண்ணவர்கோனைக் கண்டு *
வார்த்தைகள்கொண்டருளியுரையீர்வைகல்வந்திருந்தே.
3428 பேர்த்து மற்று ஓர் களைகண் * வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் *
நீர்த் திரைமேல் உலவி * இரை தேரும் புதா இனங்காள் **
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் * விண்ணவர் கோனைக் கண்டு *
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் * வைகல் வந்திருந்தே (9)
3428 perttu maṟṟu or kal̤aikaṇ * viṉaiyāṭṭiyeṉ nāṉ ŏṉṟu ileṉ *
nīrt tiraimel ulavi * irai terum putā iṉaṅkāl̤ **
kārt tiral̤ mā mukil pol kaṇṇaṉ * viṇṇavar koṉaik kaṇṭu *
vārttaikal̤ kŏṇṭu arul̤i uraiyīr * vaikal vantirunte (9)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh, flocks of herons, gliding through waves in quest of sustenance. Besides you, this sinner has none to reach the Lord who resembles the thick rain clouds and is the leader of Nithyasuris. Bring His message graciously to me, sit by me, and recount it endlessly, day after day.

Explanatory Notes

These birds are commissioned by the Nāyakī to go and meet the Lord in spiritual world, surrounded by Angels and regaling them (like unto rains, unleashed on the ocean instead of on the crops, withering away) and tell Him, His greatness lay not in His might and majesty in that transcendent setting but in His loving condescension unto the desolate Nāyakī who was dwindling, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர்த்திரை மேல் நீர் அலைகளின் மேலே; உலவி இரை தேரும் உலாவி இரை தேடும்; புதா இனங்காள்! பறவை இனங்களே!; வினையாட்டியேன் நான் பாவியான நான்; பேர்த்து மற்று உங்களைத் தவிர வேறொரு; ஓர் களைகண் ஒப்பற்ற தஞ்சம்; ஒன்று இலேன் இல்லாதவள்; கார்த்திரள் கார்காலத்தில் திரண்ட; மா முகில் போல் பெரிய மேகங்கள் போன்றவனான; கண்ணன் கண்ணன்; விண்ணவர் நித்யஸூரிகளின்; கோனைக் கண்டு தலைவனைக் கண்டு; வார்த்தைகள் அவன் கூறுவதை; கொண்டு கேட்டுக் கொண்டு வந்து; அருளி தயவு செய்து; வைகல் இதையே; வந்திருந்தே பொழுது போக்காக; உரையீர் என்னிடம் வந்து கூறுங்கள்
mĕl on top; ulāvi moving around; irai prey (which is dear to you); thĕrum searching; pudhāvinangāl̤ oh big cranes!; vinaiyāttiyĕn having sin (since the one who is supposed to help, is not helping); nān ī; pĕrththu other than you; maṝu other; ŏr unique; kal̤aikaṇ saviour; onṛu one; ilĕn not having;; kār in rainy season; thiral̤ gathered; mā mugil pŏl (beautiful) like huge clouds; kaṇṇan very obedient to his devotees through his incarnation; viṇṇavar letting (such beauty) to be enjoyed by the residents of paramapadham; kŏnai the supreme lord; kaṇdu on seeing; vārththaigal̤ (his merciful) message; koṇdu bringing; arul̤i showering that mercy upon me; vandhu irundhu coming and residing here; vaigal for a long time (to have this as our activity); uraiyīr speak.; vandhu coming here (without any expectation); irundhu remaining here (with full focus)

TVM 6.8.10

3429 வந்திருந்தும்உம்முடைய மணிச்சேவலும்நீருமெல்லாம் *
அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையுமன்னங்காள்! *
என்திருமார்வற்குஎன்னை இன்னவாறிவள்காண்மி னென்று *
மந்திரத்தொன்றுஉணர்த்தியுரையீர் மறுமாற்றங்களே.
3429 வந்திருந்து உம்முடைய * மணிச் சேவலும் நீரும் எல்லாம் *
அந்தரம் ஒன்றும் இன்றி * அலர்மேல் அசையும் அன்னங்காள் **
என் திரு மார்வற்கு என்னை * இன்னவாறு இவள் காண்மின் என்று *
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் * மறுமாற்றங்களே (10)
3429 vantiruntu ummuṭaiya * maṇic cevalum nīrum ĕllām *
antaram ŏṉṟum iṉṟi * alarmel acaiyum aṉṉaṅkāl̤ **
ĕṉ tiru mārvaṟku ĕṉṉai * iṉṉavāṟu ival̤ kāṇmiṉ ĕṉṟu *
mantirattu ŏṉṟu uṇartti uraiyīr * maṟumāṟṟaṅkal̤e (10)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Swans, gracefully gliding on flowers before me, with your charming mates unhindered, go and convey to the Lord, bearing Tiru on His chest, when He is alone in His chamber, about my well-being, and bring His reply to me.

Explanatory Notes

The Swans are instructed by the Nāyakī, to disclose her critical condition to the Lord, when He retires to His private chamber, on the conclusion of His Durbar, so that it can catch the attention of ‘Tiru’, Lakṣmī. the Gracious Mother, the great Intercessor between the Lord and His Subjects; The birds are to bring back the Lord’s reply, and inform the Nāyakī.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வந்திருந்து வந்திருந்து; உம்முடைய உம்முடைய; மணிச் சேவலும் அழகிய சேவல்களும்; நீரும் எல்லாம் நீங்களும் ஆக எல்லாம்; அந்தரம் ஒன்றும் இன்றி இடையூறு ஒன்றுமில்லாமல்; அலர் மேல் பூக்களின் மீது உல்லாஸமாக; அசையும் அன்னங்காள்! உலாவுகிற அன்னங்களே!; என் திருமார்வற்கு லஷ்மீபதியான எமபெருமானுக்கு; என்னை இன்னவாறு உம்மைப் பிரிந்த இப்பெண்; இவள் காண்மின் என்று தனக்கில்லை உமக்கே என்று கூறி; மந்திரத்து பிராட்டியும் அவனும் தனியாக இருக்கும்போது; ஒன்று உணர்த்தி என்னைப் பற்றி ஒரு பேச்சு அறிவித்து; மறு அதற்கு அவன் சொல்லும் மறு; மாற்றங்களே மொழிகளை என்னிடம்; உரையீர் வந்து கூறுங்கள்
ummudaiya your pleasant; maṇi best; sĕvalum pairs; nīrum you all; ellām all the relatives; onṛum any; andharam hurdle; inṛi without; alar mĕl on top of the flowers; asaiyum moving around; annangāl̤ ŏh swans!; em lord for those girls like me; thiru lakshmi; mārvaṛku having in his chest; ennai me; ival̤ she; innavāṛu in this manner; ānāl̤ has become; kāṇmin see; enṛu saying that; mandhiriththu in his (and her) private abode; onṛu a word; uṇarththi informing him; maṛu māṝangal̤ reply (he mercifully gives); uraiyīr tell me; māṝangal̤ distinguished words; āyndhu koṇdu analysing

TVM 6.8.11

3430 மாற்றங்களாய்ந்துகொண்டு மதுசூதபிரானடிமேல் *
நாற்றங்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தோற்றங்களாயிரத்துள் இவையுமொருபத்தும்வல்லார் *
ஊற்றின்கண்நுண்மணல்போல் உருகாநிற்பர்நீராயே. (2)
3430 ## மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு * மதுசூத பிரான் அடிமேல் *
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
தோற்றங்கள் ஆயிரத்துள் * இவையும் ஒருபத்தும் வல்லார் *
ஊற்றின்கண் நுண் மணல் போல் * உருகாநிற்பர் நீராயே (11)
3430 ## māṟṟaṅkal̤ āyntukŏṇṭu * matucūta pirāṉ aṭimel *
nāṟṟaṅkŏl̤ pūm pŏzhil cūzh * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
toṟṟaṅkal̤ āyirattul̤ * ivaiyum ŏrupattum vallār *
ūṟṟiṉkaṇ nuṇ maṇal pol * urukāniṟpar nīrāye (11)

Ragam

Dvajāvanti / த்வஜாவந்தி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Those familiar with these verses, among the thousand crafted in exquisite language by Caṭakōpaṉ of Kurukūr, adorned with fragrant flower gardens, worshipping Matucūtaṉ's graceful feet, will surely melt away like fine sands in springs of water.

Explanatory Notes

(i) The end-song usually gives out the tangible (in concrete terms) benefit accrued by dint of learning the songs in this decad. Melting tenderness of heart is indeed a great virtue when one sees that only those with such a disposition can tread the path of Bhakti (God-love) and that is acquired by those who are conversant with this decad. Intangible though it might seem + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாற்றங்கள் சிறந்த சொற்களை; ஆய்ந்து கொண்டு ஆராய்ந்தெடுத்து; மதுசூத பிரான் மதுசூத பிரான்; அடிமேல் திருவடிகளைக் குறித்து; நாற்றங் கொள் மணம் கமழும்; பூம் பொழில் சூழ் பூஞ்சோலைகள் சூழ்ந்த; குருகூரவர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; தோற்றங்கள் தமக்குள் தோன்றின; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவையும் ஒரு பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; ஊற்றின் கண் நீர் ஊற்றில் உண்டாகும்; நுண் மணல் போல் நுண் மணல் போல்; உருகா நிற்பர் நீராயே மனம் கரைந்து உருகுவார்கள்
madhusūdhan one who destroyed madhu who robbed the vĕdham which is the cause for knowledge; pirān benefactor-s; adi mĕl on the divine feet; nāṝam kol̤ with fragrance; having flower; pozhil gardens; sūzh surrounded by; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan āzhvār who won over bāhya (those who reject vĕdham) and kudhrushti (those who misinterpret vĕdham) philosophers; sonna mercifully spoke; thŏṝangal̤ incarnation of vĕdham like bhagavān-s incarnations; āyiraththul̤ among the thousand pāsurams; oru unique; ivai these; paththum ten pāsurams; vallār those who can recite with meditation; ūṝinkaṇ in a spring; nuṇ tiny; maṇal pŏl like sand particles (which will get sucked in due to the water); nīrāy urugā niṛpar (with overwhelming emotions) will melt; nīr having importance as said in manu smruthi #apa ĕva sasarjāthau- (ḥe first created water); āy having as body