Your browser does not support the audio element.
audio
3431 நீராய்நிலனாய்த் தீயாய்க்காலாய்நெடுவானாய் *
சீரார்சுடர்க்களிரண்டாய்ச் சிவனாயனானாய்! *
கூராராழிவெண்சங்கேந்திக் கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும்விண்ணும்மகிழவே. (2)
3432 மண்ணும்விண்ணும்மகிழக் குறளாய்வலங்காட்டி *
மண்ணும்விண்ணும்கொண்ட மாயவம்மானே? *
நண்ணியுனைநான் கண்டுகந்துகூத்தாட *
நண்ணியொருநாள் ஞாலத்தூடேநடவாயே.
3433 ஞாலத்தூடேநடந்தும்நின்றும் கிடந்திருந்தும் *
சாலப்பலநாள் உகந்தோறுஉயிர்கள்காப்பானே! *
கோலத்திருமாமகளோடு உன்னைக்கூடாதே *
சாலப்பலநாள் அடியேன்இன்னம்தளர்வேனோ?
3434 தளர்ந்தும்முறிந்தும் சகடவசுரருடல்வேறா *
பிளந்துவீயத் திருக்காலாண்டபெருமானே! *
கிளர்ந்துபிரமன்சிவன் இந்திரன்விண்ணவர்சூழ *
விளங்கவொருநாள் காணவாராய்விண்மீதே.
3435 விண்மீதிருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடல்சேர்ப்பாய்! *
மண்மீதுழல்வாய்! இவற்றுளெங்கும்மறைந்துறைவாய்! *
எண்மீதியன்றபுறவண்டத்தாய்! எனதாவி *
உள்மீதாடி உருக்காட்டாதேஒளிப்பாயோ?
3436 பாயோரடிவைத்து அதன்கீழ்ப் பரவைநிலமெல்லாம்
தாய் * ஓரடியால் எல்லாவுலகும்தடவந்த
மாயோன்! * உன்னைக்காண்பான் வருந்தியெனைநாளும் *
தீயோடுடன்சேர்மெழுகாய் உலகில்திரிவேனோ?
3437 உலகில்திரியுங்கருமகதியாய் உலகமாய் *
உலகுக்கேயோருயிருமானாய்! புறவண்டத்து *
அலகில்பொலிந்த திசைபத்தாயஅருவேயோ *
அலகில்பொலிந்த அறிவிலேனுக்கருளாயே.
3438 அறிவிலேனுக்கருளாய் அறிவாருயிரானாய் *
வெறிகொள்சோதிமூர்த்தி! அடியேன்நெடுமாலே! *
கிறிசெய்தென்னைப்புறத்திட்டு இன்னம்கெடுப்பாயோ? *
பிறிதொன்றறியாஅடியேன் ஆவிதிகைக்கவே.
3439 ஆவிதிகைக்க ஐவர்குமைக்கும்சிற்றின்பம் *
பாவியேனைப் பலநீகாட்டிப்படுப்பாயோ *
தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே *
கூவிக்கொள்ளும்காலம் இன்னங்குறுகாதோ?
3440 குறுகாநீளா இறுதிகூடாஎனையூழி *
சிறுகாபெருகா அளவிலின்பம்சேர்ந்தாலும் *
மறுகாலின்றிமாயோன் உனக்கேயாளாகும் *
சிறுகாலத்தையுறுமோ? அந்தோ! தெரியிலே.
3441 தெரிதல்நினைதல் எண்ணலாகாத்திருமாலுக்கு *
உரியதொண்டர்தொண்டர் தொண்டன்சடகோபன் *
தெரியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் *
உரியதொண்டராக்கும் உலகமுண்டாற்கே. (2)