Chapter 10

Pay obeisance to Thirumālirum Solai - (கிளர் ஒளி)*

திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக
Two mountains, namely, Thirumālirum Solai and Thiruvenkadam, represent Sri Bhoodevi’s bosoms. Bhagavān relishes both these mountains. This segment is about Mount Thirumālirum Solai. The act of meditating about this mountain, paying obeisance and residing on this mountain even for a few days are deemed great deeds as Azhagar relishes residing here. “Do visit this mountain before you lose your youth” requests Āzhvār.
பூதேவியின் திருமார்பகமாக விளங்குவன இரண்டு மலைகள். ஒன்று திருவேங்கடம்; மற்றொன்று திருமாலிருஞ்சோலை மலை. பகவானுக்கு இவ்விரண்டு மலைகளிலும் விருப்பம் மிகுதி. இது திருமாலிருஞ்சோலையைப் பற்றிய பகுதி. அழகர் விரும்பியுறையும் இம்மலையை நினைப்பதும், வணங்குவதும், இம்மலையில் சில நாட்களேனும் வாழ்வதும் + Read more
Verses: 3002 to 3012
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நாட்டம்
Timing: 12-1.12 PM
Recital benefits: will reach His feet
  • TVM 2.10.1
    3002 ## கிளர் ஒளி இளமை * கெடுவதன் முன்னம் *
    வளர் ஒளி மாயோன் * மருவிய கோயில் **
    வளர் இளம் பொழில் சூழ் * மாலிருஞ்சோலை *
    தளர்வு இலர் ஆகில் * சார்வது சதிரே (1)
  • TVM 2.10.2
    3003 சதிர் இள மடவார் * தாழ்ச்சியை மதியாது *
    அதிர் குரல் சங்கத்து * அழகர் தம் கோயில் **
    மதி தவழ் குடுமி * மாலிருஞ்சோலை *
    பதியது ஏத்தி * எழுவது பயனே (2)
  • TVM 2.10.3
    3004 பயன் அல்ல செய்து * பயன் இல்லை நெஞ்சே *
    புயல் மழை வண்ணர் * புரிந்து உறை கோயில் **
    மயல் மிகு பொழில் சூழ் * மாலிருஞ்சோலை *
    அயன்மலை அடைவது * அது கருமமே (3)
  • TVM 2.10.4
    3005 கரும வன் பாசம் * கழித்து உழன்று உய்யவே *
    பெருமலை எடுத்தான் * பீடு உறை கோயில் **
    வரு மழை தவழும் * மாலிருஞ்சோலை *
    திருமலை அதுவே * அடைவது திறமே (4)
  • TVM 2.10.5
    3006 திறம் உடை வலத்தால் * தீவினை பெருக்காது *
    அறம் முயல் ஆழிப் * படையவன் கோயில் **
    மறு இல் வண் சுனை சூழ் * மாலிருஞ்சோலை *
    புறமலை சாரப் * போவது கிறியே (5)
  • TVM 2.10.6
    3007 கிறி என நினைமின் * கீழ்மை செய்யாதே *
    உறி அமர் வெண்ணெய் * உண்டவன் கோயில் **
    மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
    நெறி பட அதுவே * நினைவது நலமே (6)
  • TVM 2.10.7
    3008 நலம் என நினைமின் * நரகு அழுந்தாதே *
    நிலம் முனம் இடந்தான் * நீடு உறை கோயில் **
    மலம் அறு மதி சேர் * மாலிருஞ்சோலை *
    வலம் முறை எய்தி * மருவுதல் வலமே (7)
  • TVM 2.10.8
    3009 வலஞ்செய்து வைகல் * வலம் கழியாதே *
    வலஞ்செய்யும் ஆய * மாயவன் கோயில் **
    வலஞ்செய்யும் வானோர் * மாலிருஞ்சோலை *
    வலஞ்செய்து நாளும் * மருவுதல் வழக்கே (8)
  • TVM 2.10.9
    3010 வழக்கு என நினைமின் * வல்வினை மூழ்காது *
    அழக்கொடி அட்டான் * அமர் பெருங்கோயில் **
    மழக் களிற்று இனம் சேர் * மாலிருஞ்சோலை *
    தொழக் கருதுவதே * துணிவது சூதே (9)
  • TVM 2.10.10
    3011 சூது என்று களவும் * சூதும் செய்யாதே *
    வேதம் முன் விரித்தான் * விரும்பிய கோயில் **
    மாது உறு மயில் சேர் * மாலிருஞ்சோலை *
    போது அவிழ் மலையே * புகுவது பொருளே (10)
  • TVM 2.10.11
    3012 ## பொருள் என்று இவ் உலகம் * படைத்தவன் புகழ்மேல் *
    மருள் இல் வண் குருகூர் * வண் சடகோபன் **
    தெருள் கொள்ளச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்து *
    அருளுடையவன் தாள் * அணைவிக்கும் முடித்தே (11)