Chapter 4

Thirunaraiyur 1 - (கண்ணும் சுழன்று)

திருநறையூர் 1
Thirunaraiyur 1 - (கண்ணும் சுழன்று)
To Thirumangai āzhvār, who wished to go to Paramapadam, the Lord seemed to say, "Behold the greatness of Thirunaraiyur. What more is there in Paramapadam compared to this?" The glory of Thirunaraiyur is extolled in these verses. Thirunaraiyur is also known as Nachiyar Koil. This place bestows honor upon Neeladevi.
பரமபதம் செல்ல விரும்பிய திருமங்கையாழ்வாருக்குப் பகவான் திருநறையூரின் சிறப்பைப் பாரும். இதைவிடப் பரமபதத்தில் என்ன இருக்கிறது? என்று கூறினார் போலும்! திருநறையூரின் பெருமை ஈண்டுப் பாடப்பட்டுள்ளது. திருநறையூருக்கு நாச்சியார்கோயில் என்று பெயர். நீளாதேவிக்குச் சிறப்பைத் தருகிறது இவ்வூர்.
Verses: 1478 to 1487
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: சீகாமரம்
Recital benefits: Will rule the world of Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.4.1

1478 கண்ணும்சுழன்றுபீளையோடு ஈளைவந்தேங்கினால் *
பண்ணின்மொழியார் பையநடமினென்னாதமுன் *
விண்ணும்மலையும் வேதமும்வேள்வியுமாயினான் *
நண்ணுநறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே! (2)
1478 ## கண்ணும் சுழன்று பீளையோடு * ஈளை வந்து ஏங்கினால் *
பண் இன் மொழியார் * பைய நடமின் என்னாதமுன் **
விண்ணும் மலையும் * வேதமும் வேள்வியும் ஆயினான் *
நண்ணு நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 1
1478 ## kaṇṇum cuzhaṉṟu pīl̤aiyoṭu * īl̤ai vantu eṅkiṉāl *
paṇ iṉ mŏzhiyār * paiya naṭamiṉ ĕṉṉātamuṉ **
viṇṇum malaiyum * vetamum vel̤viyum āyiṉāṉ *
naṇṇu naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-1

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1478. When you grow old you won’t be able to see and your eyes will be filled with mucus. Girls with words as sweet as music may tell you, “Walk slowly. You may fall. ” Before that happens, O heart, rise, we will go to Naraiyur and worship him who is the sky, the mountains, the Vedās and the sacrifice.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பீளையோடு கண்ணில் மலத்தோடு; கண்ணும் சுழன்று கண்ணும் சுழன்று; ஈளை வந்து கோழைமேலிட்டு; ஏங்கினால் தளர்ச்சியடைந்தால்; பண் இன் இசையின் இனிமையான; மொழியார் மொழி பேசும் பெண்கள்; பைய மெள்ள; நடமின் நடந்து செல்லுங்கள் என்று; என்னாத முன் கூறுவதற்கு முன்; விண்ணும் ஆகாசமும்; மலையும் மலைகளும்; வேதமும் வேதங்களும்; வேள்வியும் வேள்விகளும்; ஆயினான் தானேயாயிருக்கும் எம்பெருமான்; நண்ணும் நறையூர் விரும்பி உரையும் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.2

1479 கொங்குண்குழலார் கூடியிருந்துசிரித்து * நீர்
இங்கென்? இருமி எம்பால்வந்ததென்றிகழாதமுன் *
திங்களெரிகால் செஞ்சுடராயவன்தேசுடை *
நங்கள்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1479 கொங்கு உண் குழலார் * கூடி இருந்து சிரித்து * நீர்
இங்கு என் இருமி * எம்பால் வந்தது? என்று இகழாதமுன் **
திங்கள் எரி கால் * செஞ் சுடர் ஆயவன் தேசு உடை *
நங்கள் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 2
1479 kŏṅku uṇ kuzhalār * kūṭi iruntu cirittu * nīr
iṅku ĕṉ irumi * ĕmpāl vantatu? ĕṉṟu ikazhātamuṉ **
tiṅkal̤ ĕri kāl * cĕñ cuṭar āyavaṉ tecu uṭai *
naṅkal̤ naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-2

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1479. When you grow old, women with lovely hair adorned with flowers dripping honey will join together, laugh and say mockingly, “How could you come to us coughing liked this?” Before that happens, O heart, rise, we will go to shining Naraiyur and worship him who is the moon, fire, wind and the bright sun.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு உண் மணம் மிக்க; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; கூடி இருந்து கூட்டமாக கூடி; சிரித்து சிரித்து; நீர் இங்கு நீங்கள் இங்கு; என் இருமி இருமிக்கொண்டு; வந்தது எங்களிடத்தில் வந்தது; எம்பால் என்று எதற்காக என்று; இகழாத முன் இகழ்வாக பேசுவதற்கு முன்; திங்கள் சந்திரனும்; எரி கால் அக்நியும் காற்றும்; செஞ் சுடர் ஸூரியனும்; ஆயவன் ஆகியவைகளாயிருக்கும்; தேசு உடை தேஜஸ்ஸையுடைய; நங்கள் நமக்காக வந்து; நறையூர் நறையூரிலிருக்கும் நம்முடைய பெருமானை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.3

1480 கொங்கார்குழலார் கூடியிருந்துசிரித்து * எம்மை
எங்கோலம்ஐயா! என்? இனிக்காண்பதுஎன்னாதமுன் *
செங்கோல் வலவன்தான் பணிந்தேத்தித்திகழுமூர் *
நங்கோன்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1480 கொங்கு ஆர் குழலார் * கூடி இருந்து சிரித்து * எம்மை
எம் கோலம் ஐயா * என் இனிக் காண்பது? என்னாதமுன் **
செங்கோல் வலவன் * தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர் *
நம் கோன் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 3
1480 kŏṅku ār kuzhalār * kūṭi iruntu cirittu * ĕmmai
ĕm kolam aiyā * ĕṉ iṉik kāṇpatu? ĕṉṉātamuṉ **
cĕṅkol valavaṉ * tāl̤ paṇintu ettit tikazhum ūr * -
nam koṉ naṟaiyūr * -nām tŏzhutum ĕzhu nĕñcame-3

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1480. When you grow old, women with lovely hair adorned by flowers dripping honey will join together, laugh and say, “What is this? Is it good? How could you love us, we are so beautiful. What do you think you will be able to do at your age?” Before they mock you like this, O heart, rise, we will go to famous Naraiyur where our king Valavan with his scepter of justice went and worshiped our god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு ஆர் மணம் மிக்க; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; கூடி இருந்து கூட்டமாக கூடி; சிரித்து சிரித்து; ஐயா! கிழவரே!; இனி இப்படி நீர் கிழவரான பின்பு; எம்மை எங்களையும்; எம் கோலம் எங்கள் அலங்காரத்தையும்; என் காண்பது? எதுக்காகப் பார்ப்பது?; என்னாத முன் என்று சொல்வதற்கு முன்னே; செங்கோல் செங்கோல்; வலவன் மன்னன் சோழ அரசன்; தான் பணிந்து தான் பணிந்து வணங்கி; ஏத்தித் துதித்து; திகழும் ஊர் திகழும் ஊரான; நம் கோன் நம்முடைய பெருமான்; நறையூர் இருக்கும் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.4

1481 கொம்பும் அரவமும் வல்லியும்வென்றநுண்ணேரிடை *
வம்புண்குழலார் வாசலடைத்துஇகழாதமுன் *
செம்பொன்கமுகினம் தான்கனியும்செழுஞ்சோலைசூழ் *
நம்பன்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1481 கொம்பும் அரவமும் * வல்லியும் வென்ற நுண் ஏர் இடை *
வம்பு உண் குழலார் * வாசல் அடைத்து இகழாதமுன் **
செம் பொன் கமுகு இனம் தான் * கனியும் செழும் சோலை சூழ் *
நம்பன் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 4
1481 kŏmpum aravamum * valliyum vĕṉṟa nuṇ er iṭai *
vampu uṇ kuzhalār * vācal aṭaittu ikazhātamuṉ **
cĕm pŏṉ kamuku-iṉam-tāṉ * kaṉiyum cĕzhum colai cūzh *
nampaṉ naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-4

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1481. When you grow old, women with lovely hair that swarms with bees and waists that are thinner than the stalks of flowers will close their doors to you and not allow you to enter their houses. Before this disgrace happens, O heart, rise, we will go to Naraiyur surrounded by flourishing groves, ripening fruits and kamugu trees that shine like pure gold and worship him, dear friend of all.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொம்பும் கொம்பையும்; அரவமும் பாம்பையும்; வல்லியும் கொடியையும்; வென்ற வெல்லக் கூடிய; நுண் ஏர் நுண்ணிய; இடை அழகிய இடையையுடைய; வம்பு உண் மணம் மிக்க; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; வாசல் அடைத்து வாசற் கதவை அடைத்து; இகழாத முன் இகழ்வதற்கு முன்; செம்பொன் சிவந்த பொன் போன்ற; கனியும் கனிகளையுடைய; கமுகு இனம் தான் பாக்கு மரங்களுள்ள; செழும் வளம்மிக்க; சோலை சூழ் சோலைகளால் சூழ்ந்த; நம்பன் நறையூர் நம்பத்தகுந்த நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.5

1482 விலங்கும்கயலும் வேலும்ஒண்காவியும்வென்றகண் *
சலம்கொண்டசொல்லார்தாங்கள் சிரித்துஇகழாதமுன் *
மலங்கும்வராலும் வாளையும்பாய்வயல்சூழ்தரு *
நலங்கொள்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1482 விலங்கும் கயலும் வேலும் * ஒண் காவியும் வென்ற கண் *
சலம் கொண்ட சொல்லார் * தாங்கள் சிரித்து இகழாத முன் **
மலங்கும் வராலும் * வாளையும் பாய் வயல் சூழ்தரு *
நலம் கொள் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 5
1482 vilaṅkum kayalum velum * ŏṇ kāviyum vĕṉṟa kaṇ *
calam kŏṇṭa cŏllār * -tāṅkal̤ cirittu ikazhāta muṉ **
malaṅkum varālum * vāl̤aiyum pāy vayal cūzhtaru *
nalam kŏl̤ naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-5

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1482. When you become old, women with eyes even lovelier than a doe’s, a fish, a spear or a beautiful kāvi flower and with clever words will laugh among themselves and mock you. Before that happens, O heart, rise, we will go to flourishing Naraiyur surrounded by fields where vālai and viral fish frolic and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விலங்கும் மானையும்; கயலும் மீனையும்; வேலும் வேலையும்; ஒண் காவியும் செங்கழுநீர்ப்பூவையும்; வென்ற தோற்கடித்த; கண் கண்களையுடைய; சலம் கொண்ட கபடமுள்ள; சொல்லார் பெண்கள்; தாங்கள் சிரித்து தாங்கள் சிரித்து; இகழாத முன் இகழ்வதற்கு முன்; மலங்கும் பலவகைப்பட்ட; வராலும் வாளையும் மீன்கள்; பாய் துள்ளி விளையாடும்; வயல் சூழ்தரு வயல்களால் சூழ்ந்த; நலம் நன்மை மிக்க; கொள் விரும்பியதைக்கொடுக்கும்; நறையூர் நரையூரறை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.6

1483 மின்னேரிடையார்வேட்கையைமாற்றியிருந்து *
என்நீர்இருமி எம்பால்வந்தது? என்றுஇகழாதமுன் *
தொன்னீரிலங்கைமலங்க விலங்கெரியூட்டினான் *
நன்னீர்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1483 மின் நேர் இடையார் * வேட்கையை மாற்றியிருந்து *
என் நீர் இருமி * எம்பால் வந்தது? என்று இகழாதமுன் **
தொல் நீர் இலங்கை மலங்க * விலங்கு எரி ஊட்டினான் *
நல் நீர் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 6
1483 miṉ ner iṭaiyār * veṭkaiyai māṟṟiyiruntu *
ĕṉ nīr irumi * ĕmpāl vantatu? ĕṉṟu ikazhātamuṉ **
tŏl nīr ilaṅkai malaṅka * vilaṅku ĕri ūṭṭiṉāṉ *
nal nīr naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-6

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1483. When you become old, women with waists as thin as lightning will not want to love you. They will only mock you and laugh, saying, “You are coughing so much, how dare you come near us?” Before that happens, O heart, rise, we will go to Naraiyur surrounded with fresh water and worship him who burned and destroyed ancient Lankā surrounded by oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் நேர் மின்னல் போன்ற; இடையார் இடையையுடைய பெண்கள்; வேட்கையை முன்பு வைத்திருந்த அன்பை; மாற்றியிருந்து மாற்றிகொண்டு; நீர் இருமி நீங்கள் இருமிக்கொண்டு; எம்பால் எங்களிடம்; வந்தது? என் வந்தது ஏதற்காக?; என்று இகழாத முன் என்று இகழ்வதற்கு முன்; தொன் நீர் இலங்கை கடல் சூழ்ந்த இலங்கை; மலங்க துயரப்படும்படி; விலங்கு அனுமனைக்கொண்டு; எரி ஊட்டினான் தீமூட்டின பெருமான் இருக்கும்; நல் நீர் நறையூர் நல்ல நீரையுடைய நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.7

1484 வில்லேர்நுதலார் வேட்கையைமாற்றிச் சிரித்து * இவன்
பொல்லான்திரைந்தானென்னும் புறனுரை கேட்பதன்முன் *
சொல்லார்மறைநான்கோதி உலகில்நிலாயவர் *
நல்லார்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1484 வில் ஏர் நுதலார் * வேட்கையை மாற்றிச் சிரித்து * இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் * புறன் உரை கேட்பதன்முன் **
சொல் ஆர் மறை நான்கு ஓதி * உலகில் நிலாயவர் *
நல்லார் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 7
1484 vil er nutalār * veṭkaiyai māṟṟic cirittu * ivaṉ
pŏllāṉ tiraintāṉ ĕṉṉum * puṟaṉ -urai keṭpataṉmuṉ **
cŏl ār maṟai nāṉku oti * ulakil nilāyavar *
nallār naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-7

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1484. When you become old, women with foreheads as beautiful as bows will not love you. They will laugh and say, “He is a dirty old man, he has gray hair. ” Before you hear those mocking words, O heart, rise, we will go and worship him in Naraiyur where good Vediyars recite the four Vedās and spread them around the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வில் ஏர் வில் போன்று அழகிய; நுதலார் நெற்றியையுடைய பெண்கள்; வேட்கையை முன்பு வைத்திருந்த அன்பை; மாற்றி மாற்றிகொண்டு; சிரித்து சிரித்து; இவன் பொல்லான் இவன் பொல்லாதவன்; திரைந்தான் தளர்ந்த சரீரத்தையுடையவன்; என்னும் என்று; புறன் உரை இழிவான பேச்சை; கேட்பதன்முன் கேட்கும் முன்; சொல் ஆர் சொற்செல்வமுடைய; மறை நான்கு நான்கு வேதங்களையும்; ஓதி ஓதி அவைகளை; உலகில் உலகில்; நிலாயவர் ஸ்தாபிப்பவர்களாய்; நல்லார் வைதிகர்கள்; நறையூர் வாழும் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.8

1485 வாளொண்கண்நல்லார்தாங்கள் மதனனென்றார்தம்மை *
கேளுமின்கள்ஈளையோடு ஏங்குகிழவனென்னாதமுன் *
வேள்வும்விழவும் வீதியில்என்றும்அறாதவூர் *
நாளுநறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1485 வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் * மதனன் என்றார் தம்மை *
கேள்மின்கள் ஈளையோடு * ஏங்கு கிழவன் என்னாதமுன் **
வேள்வும் விழவும் * வீதியில் என்றும் அறாத ஊர் *
நாளும் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 8
1485 vāl̤ ŏṇ kaṇ nallār tāṅkal̤ * mataṉaṉ ĕṉṟār-tammai *
kel̤miṉkal̤ īl̤aiyoṭu * eṅku kizhavaṉ ĕṉṉātamuṉ **
vel̤vum vizhavum * vītiyil ĕṉṟum aṟāta ūr *
nāl̤um naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-8

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1485. When you become old, women with sharp sword-like eyes who once praised you saying, “You are my Cupid!” will say, “Listen, he is an old man who coughs up phlegm but he still longs for women. ” Before that happens, O heart, rise, we will go and worship him in Naraiyur where sacrifices and festivals are celebrated on the streets every day and never stop.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் ஒண் வாள்போன்ற; கண் நல்லார் கண்களையுடைய பெண்கள்; தாங்கள் இப்போது இகழும் தாங்களே; மதனன் இவன் மன்மதன்; என்றார் என்று சொன்ன; தம்மை ஆண்களைப் பார்த்து; ஈளையோடு கோழையோடு; ஏங்கு கிழவன் ஏங்கும் கிழவன்; கேண்மின்கள் எங்கே வந்தான் என்று கேளுங்கள்; என்னாத முன் என்று சொல்வதற்கு முன்; வேள்வும் யாகங்களும்; விழவும் வீதியில் விழாக்களும் வீதியில்; என்றும் அறாத என்றும் தினமும்; ஊர் நாளும் நிகழும் ஊரான; நறையூர் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.9

1486 கனிசேர்ந்திலங்குநல்வாயவர் காதன்மைவிட்டிட *
குனிசேர்ந்துடலம் கோலில்தளர்ந்துஇளையாதமுன் *
பனிசேர்விசும்பில் பான்மதிகோள்விடுத்தானிடம் *
நனிசேர்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1486 கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் * காதன்மை விட்டிட *
குனி சேர்ந்து உடலம் * கோலில் தளர்ந்து இளையாதமுன் **
பனி சேர் விசும்பில் * பால்மதி கோள் விடுத்தான் இடம் *
நனி சேர் நறையூர் * நாம் தொழுதும் எழு நெஞ்சமே 9
1486 kaṉi cerntu ilaṅku nal vāyavar * kātaṉmai viṭṭiṭa *
kuṉi cerntu uṭalam * kolil tal̤arntu il̤aiyātamuṉ **
paṉi cer vicumpil * pālmati kol̤ viṭuttāṉ iṭam *
naṉi cer naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-9

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1486. When you become old, beautiful women with mouths as sweet as fruit will not love you anymore. Your back will be bent and you will carry a stick and walk slowly and grow weak. Before that happens, O heart, we will go to beautiful Naraiyur and worship him who removed the curse of the moon that shines in the cool sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கனி சேர்ந்து கோவைப்பழம் போன்று; இலங்கு விளங்கும்; நல் வாயவர் அழகிய அதரத்தையுடைய பெண்கள்; காதன்மை தன்னிடம் வைத்திருந்த அன்பை; விட்டிட தவிர்த்திருந்த; உடலம் தன் சரீரமானது; குனி சேர்ந்து கூன் விழுந்து; கோலில் தடி ஊன்றி; தளர்ந்து சிதிலமாகி; இளையாத முன் தளர்வதற்கு முன்; பனி சேர் விசும்பில் குளிர்ந்த ஆகாசத்தில்; பான்மதி கோள் பால் போன்ற சந்திரனின்; விடுத்தான் துன்பத்தை போக்கின பெருமான்; இடம் இருக்குமிடம் இடம்; நனி சேர் பெருமை வாய்ந்த; நறையூர் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே

PT 6.4.10

1487 பிறைசேர் நுதலார் பேணுதல்நம்மையிலாதமுன் *
நறைசேர்பொழில்சூழ் நறையூர் தொழுநெஞ்சமே! என்ற *
கறையார்நெடுவேல்மங்கையர்கோன் கலிகன்றிசொல் *
மறவாதுரைப்பவர் வானவர்க்குஇன்னரசாவரே. (2)
1487 ## பிறை சேர் நுதலார் * பேணுதல் நம்மை இலாதமுன் *
நறை சேர் பொழில் சூழ் * நறையூர் தொழு நெஞ்சமே என்ற **
கறை ஆர் நெடு வேல் மங்கையர் கோன் * கலிகன்றி சொல் *
மறவாது உரைப்பவர் * வானவர்க்கு இன் அரசு ஆவரே 10
1487 ## piṟai cer nutalār * peṇutal nammai ilātamuṉ *
naṟai cer pŏzhil cūzh * naṟaiyūr tŏzhu nĕñcame ĕṉṟa **
kaṟai ār nĕṭu vel maṅkaiyar-koṉ * kalikaṉṟi cŏl *
maṟavātu uraippavar * vāṉavarkku iṉ aracu āvare-10

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1487. Kaliyan, the chief of Thirumangai with a long spear smeared with blood, composed ten pāsurams that describe how women with foreheads like crescent moons mock old men and no longer like them. The poet says, “O, heart, before that happens old men should go to Naraiyur surrounded by groves blooming with flowers dripping honey and worship him. ” If devotees learn and recite these pāsurams without forgetting them they will become kings of the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறை சேர் பிறைச் சந்திரனைப் போல்; நுதலார் நெற்றியையுடைய பெண்கள்; பேணுதல் தமக்கு ஆதரவைத் தவிர்த்து; நம்மை தம்மை; இலாத முன் இகழ்வதற்கு முன்; நறை சேர் தேன் நிறைந்த; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; நறையூர் நறையூரை; தொழு வணங்கு; நெஞ்சமே நெஞ்சமே; என்ற என்று உபதேசித்தவரும்; கறை ஆர் நெடு கரை நிரம்பிய நீண்ட; வேல் வேலையுடையவரும்; மங்கையர் கோன் திருமங்கை மன்னனான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த பாசுரங்களை; மறவாது உரைப்பவர் மறவாது உரைப்பவர்; வானவர்க்கு இன் வானவர்களுக்கு அழகிய; அரசு ஆவரே அரசர்கள் ஆவரே