PT 6.4.3

முதுமை கண்டு பலர் சிரிப்பர்; விரைவில் தொழு

1480 கொங்கார்குழலார் கூடியிருந்துசிரித்து * எம்மை
எங்கோலம்ஐயா! என்? இனிக்காண்பதுஎன்னாதமுன் *
செங்கோல் வலவன்தான் பணிந்தேத்தித்திகழுமூர் *
நங்கோன்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1480 kŏṅku ār kuzhalār * kūṭi iruntu cirittu * ĕmmai
ĕm kolam aiyā * ĕṉ iṉik kāṇpatu? ĕṉṉātamuṉ **
cĕṅkol valavaṉ * tāl̤ paṇintu ettit tikazhum ūr * -
nam koṉ naṟaiyūr * -nām tŏzhutum ĕzhu nĕñcame-3

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1480. When you grow old, women with lovely hair adorned by flowers dripping honey will join together, laugh and say, “What is this? Is it good? How could you love us, we are so beautiful. What do you think you will be able to do at your age?” Before they mock you like this, O heart, rise, we will go to famous Naraiyur where our king Valavan with his scepter of justice went and worshiped our god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு ஆர் மணம் மிக்க; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; கூடி இருந்து கூட்டமாக கூடி; சிரித்து சிரித்து; ஐயா! கிழவரே!; இனி இப்படி நீர் கிழவரான பின்பு; எம்மை எங்களையும்; எம் கோலம் எங்கள் அலங்காரத்தையும்; என் காண்பது? எதுக்காகப் பார்ப்பது?; என்னாத முன் என்று சொல்வதற்கு முன்னே; செங்கோல் செங்கோல்; வலவன் மன்னன் சோழ அரசன்; தான் பணிந்து தான் பணிந்து வணங்கி; ஏத்தித் துதித்து; திகழும் ஊர் திகழும் ஊரான; நம் கோன் நம்முடைய பெருமான்; நறையூர் இருக்கும் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே