PT 6.4.10

இவற்றைப் படிப்போர் தேவர்க்கு அரசாவர்

1487 பிறைசேர் நுதலார் பேணுதல்நம்மையிலாதமுன் *
நறைசேர்பொழில்சூழ் நறையூர் தொழுநெஞ்சமே! என்ற *
கறையார்நெடுவேல்மங்கையர்கோன் கலிகன்றிசொல் *
மறவாதுரைப்பவர் வானவர்க்குஇன்னரசாவரே. (2)
1487 ## piṟai cer nutalār * peṇutal nammai ilātamuṉ *
naṟai cer pŏzhil cūzh * naṟaiyūr tŏzhu nĕñcame ĕṉṟa **
kaṟai ār nĕṭu vel maṅkaiyar-koṉ * kalikaṉṟi cŏl *
maṟavātu uraippavar * vāṉavarkku iṉ aracu āvare-10

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1487. Kaliyan, the chief of Thirumangai with a long spear smeared with blood, composed ten pāsurams that describe how women with foreheads like crescent moons mock old men and no longer like them. The poet says, “O, heart, before that happens old men should go to Naraiyur surrounded by groves blooming with flowers dripping honey and worship him. ” If devotees learn and recite these pāsurams without forgetting them they will become kings of the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறை சேர் பிறைச் சந்திரனைப் போல்; நுதலார் நெற்றியையுடைய பெண்கள்; பேணுதல் தமக்கு ஆதரவைத் தவிர்த்து; நம்மை தம்மை; இலாத முன் இகழ்வதற்கு முன்; நறை சேர் தேன் நிறைந்த; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; நறையூர் நறையூரை; தொழு வணங்கு; நெஞ்சமே நெஞ்சமே; என்ற என்று உபதேசித்தவரும்; கறை ஆர் நெடு கரை நிரம்பிய நீண்ட; வேல் வேலையுடையவரும்; மங்கையர் கோன் திருமங்கை மன்னனான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த பாசுரங்களை; மறவாது உரைப்பவர் மறவாது உரைப்பவர்; வானவர்க்கு இன் வானவர்களுக்கு அழகிய; அரசு ஆவரே அரசர்கள் ஆவரே