PT 6.4.2

மனமே! விரைவில் திருநறையூர் தொழு

1479 கொங்குண்குழலார் கூடியிருந்துசிரித்து * நீர்
இங்கென்? இருமி எம்பால்வந்ததென்றிகழாதமுன் *
திங்களெரிகால் செஞ்சுடராயவன்தேசுடை *
நங்கள்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1479 kŏṅku uṇ kuzhalār * kūṭi iruntu cirittu * nīr
iṅku ĕṉ irumi * ĕmpāl vantatu? ĕṉṟu ikazhātamuṉ **
tiṅkal̤ ĕri kāl * cĕñ cuṭar āyavaṉ tecu uṭai *
naṅkal̤ naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-2

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1479. When you grow old, women with lovely hair adorned with flowers dripping honey will join together, laugh and say mockingly, “How could you come to us coughing liked this?” Before that happens, O heart, rise, we will go to shining Naraiyur and worship him who is the moon, fire, wind and the bright sun.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு உண் மணம் மிக்க; குழலார் கூந்தலையுடைய பெண்கள்; கூடி இருந்து கூட்டமாக கூடி; சிரித்து சிரித்து; நீர் இங்கு நீங்கள் இங்கு; என் இருமி இருமிக்கொண்டு; வந்தது எங்களிடத்தில் வந்தது; எம்பால் என்று எதற்காக என்று; இகழாத முன் இகழ்வாக பேசுவதற்கு முன்; திங்கள் சந்திரனும்; எரி கால் அக்நியும் காற்றும்; செஞ் சுடர் ஸூரியனும்; ஆயவன் ஆகியவைகளாயிருக்கும்; தேசு உடை தேஜஸ்ஸையுடைய; நங்கள் நமக்காக வந்து; நறையூர் நறையூரிலிருக்கும் நம்முடைய பெருமானை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே