PT 6.4.7

பிறர் பரிகாசஞ் செய்யுமுன் நறையூர் தொழு

1484 வில்லேர்நுதலார் வேட்கையைமாற்றிச் சிரித்து * இவன்
பொல்லான்திரைந்தானென்னும் புறனுரை கேட்பதன்முன் *
சொல்லார்மறைநான்கோதி உலகில்நிலாயவர் *
நல்லார்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1484 vil er nutalār * veṭkaiyai māṟṟic cirittu * ivaṉ
pŏllāṉ tiraintāṉ ĕṉṉum * puṟaṉ -urai keṭpataṉmuṉ **
cŏl ār maṟai nāṉku oti * ulakil nilāyavar *
nallār naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-7

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1484. When you become old, women with foreheads as beautiful as bows will not love you. They will laugh and say, “He is a dirty old man, he has gray hair. ” Before you hear those mocking words, O heart, rise, we will go and worship him in Naraiyur where good Vediyars recite the four Vedās and spread them around the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வில் ஏர் வில் போன்று அழகிய; நுதலார் நெற்றியையுடைய பெண்கள்; வேட்கையை முன்பு வைத்திருந்த அன்பை; மாற்றி மாற்றிகொண்டு; சிரித்து சிரித்து; இவன் பொல்லான் இவன் பொல்லாதவன்; திரைந்தான் தளர்ந்த சரீரத்தையுடையவன்; என்னும் என்று; புறன் உரை இழிவான பேச்சை; கேட்பதன்முன் கேட்கும் முன்; சொல் ஆர் சொற்செல்வமுடைய; மறை நான்கு நான்கு வேதங்களையும்; ஓதி ஓதி அவைகளை; உலகில் உலகில்; நிலாயவர் ஸ்தாபிப்பவர்களாய்; நல்லார் வைதிகர்கள்; நறையூர் வாழும் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே