Chapter 5

Thirunaraiyur 2 - (கலங்க முந்நீர்)

திருநறையூர் 2
Thirunaraiyur 2 - (கலங்க முந்நீர்)

The āzhvār sings again in praise of the Lord residing in the temple at Thirunirnayur.


The Āzhvār’s arrival at the sacred precinct of Thirunaṟaiyūr was not an act of retreat prompted by the fear of worldly scorn. Rather, it was a pilgrimage undertaken in perfect alignment with his intrinsic nature (svarūpa), a journey to the lotus feet of the

+ Read more

திருநிறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியையே ஆழ்வார் ஈண்டும் பாடுகிறார்.

Verses: 1488 to 1497
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: The Lord will save them and be with them
  • PT 6.5.1
    1488 ## கலங்க முந்நீர் கடைந்து * அமுதம் கொண்டு * இமையோர்
    துலங்கல் தீர * நல்கு சோதிச் சுடர் ஆய **
    வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் * உடையான் ஊர் *
    நலம் கொள் வாய்மை * அந்தணர் வாழும் நறையூரே 1
  • PT 6.5.2
    1489 முனை ஆர் சீயம் ஆகி * அவுணன் முரண் மார்வம் *
    புனை வாள் உகிரால் * போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர் **
    சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் * குயில் கூவும்
    நனை ஆர் சோலை சூழ்ந்து * அழகு ஆய நறையூரே 2
  • PT 6.5.3
    1490 ஆனை புரவி தேரொடு காலாள் * அணிகொண்ட *
    சேனைத் தொகையைச் சாடி * இலங்கை செற்றான் ஊர் **
    மீனைத் தழுவி வீழ்ந்து எழும் * மள்ளர்க்கு அலமந்து *
    நானப் புதலில் * ஆமை ஒளிக்கும் நறையூரே 3
  • PT 6.5.4
    1491 உறி ஆர் வெண்ணெய் உண்டு * உரலோடும் கட்டுண்டு *
    வெறி ஆர் கூந்தல் * பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர் **
    பொறி ஆர் மஞ்ஞை * பூம் பொழில்தோறும் நடம் ஆட *
    நறு நாள்மலர்மேல் * வண்டு இசை பாடும் நறையூரே 4
  • PT 6.5.5
    1492 விடை ஏழ் வென்று * மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் *
    நடையால் நின்ற * மருதம் சாய்த்த நாதன் ஊர் **
    பெடையோடு அன்னம் * பெய்வளையார் தம் பின் சென்று *
    நடையோடு இயலி * நாணி ஒளிக்கும் நறையூரே 5
  • PT 6.5.6
    1493 பகு வாய் வன் பேய் * கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு *
    புகு வாய் நின்ற * போதகம் வீழப் பொருதான் ஊர் **
    நெகு வாய் நெய்தல் * பூ மது மாந்திக் கமலத்தின் *
    நகு வாய் மலர்மேல் * அன்னம் உறங்கும் நறையூரே 6
  • PT 6.5.7
    1494 முந்து நூலும் முப்புரி நூலும் * முன் ஈந்த *
    அந்தணாளன் பிள்ளையை * அஞ்ஞான்று அளித்தான் ஊர் **
    பொந்தில் வாழும் பிள்ளைக்கு * ஆகிப் புள் ஓடி *
    நந்து வாரும் * பைம் புனல் வாவி நறையூரே 7
  • PT 6.5.8
    1495 வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் * விறல் வியூகம்
    விள்ள * சிந்துக்கோன் விழ * ஊர்ந்த விமலன் ஊர் **
    கொள்ளைக் கொழு மீன் * உண் குருகு ஓடி பெடையோடும் *
    நள்ளக் கமலத் * தேறல் உகுக்கும் நறையூரே 8
  • PT 6.5.9
    1496 பாரை ஊரும் பாரம் தீரப் * பார்த்தன் தன்
    தேரை ஊரும் * தேவதேவன் சேரும் ஊர் **
    தாரை ஊரும் * தண் தளிர் வேலி புடை சூழ *
    நாரை ஊரும் * நல் வயல் சூழ்ந்த * நறையூரே 9
  • PT 6.5.10
    1497 ## தாமத் துளப * நீள் முடி மாயன் தான் நின்ற *
    நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த * நறையூர்மேல் **
    காமக் கதிர் வேல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
    சேமத் துணை ஆம் * செப்பும் அவர்க்கு திருமாலே 10