PT 6.4.9

நெஞ்சே! உடனே நறையூர் தொழு

1486 கனிசேர்ந்திலங்குநல்வாயவர் காதன்மைவிட்டிட *
குனிசேர்ந்துடலம் கோலில்தளர்ந்துஇளையாதமுன் *
பனிசேர்விசும்பில் பான்மதிகோள்விடுத்தானிடம் *
நனிசேர்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1486 kaṉi cerntu ilaṅku nal vāyavar * kātaṉmai viṭṭiṭa *
kuṉi cerntu uṭalam * kolil tal̤arntu il̤aiyātamuṉ **
paṉi cer vicumpil * pālmati kol̤ viṭuttāṉ iṭam *
naṉi cer naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-9

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1486. When you become old, beautiful women with mouths as sweet as fruit will not love you anymore. Your back will be bent and you will carry a stick and walk slowly and grow weak. Before that happens, O heart, we will go to beautiful Naraiyur and worship him who removed the curse of the moon that shines in the cool sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கனி சேர்ந்து கோவைப்பழம் போன்று; இலங்கு விளங்கும்; நல் வாயவர் அழகிய அதரத்தையுடைய பெண்கள்; காதன்மை தன்னிடம் வைத்திருந்த அன்பை; விட்டிட தவிர்த்திருந்த; உடலம் தன் சரீரமானது; குனி சேர்ந்து கூன் விழுந்து; கோலில் தடி ஊன்றி; தளர்ந்து சிதிலமாகி; இளையாத முன் தளர்வதற்கு முன்; பனி சேர் விசும்பில் குளிர்ந்த ஆகாசத்தில்; பான்மதி கோள் பால் போன்ற சந்திரனின்; விடுத்தான் துன்பத்தை போக்கின பெருமான்; இடம் இருக்குமிடம் இடம்; நனி சேர் பெருமை வாய்ந்த; நறையூர் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே