PT 6.4.5

மனமே! விலைமகளிர் இகழுமுன் நறையூர் தொழு

1482 விலங்கும்கயலும் வேலும்ஒண்காவியும்வென்றகண் *
சலம்கொண்டசொல்லார்தாங்கள் சிரித்துஇகழாதமுன் *
மலங்கும்வராலும் வாளையும்பாய்வயல்சூழ்தரு *
நலங்கொள்நறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1482 vilaṅkum kayalum velum * ŏṇ kāviyum vĕṉṟa kaṇ *
calam kŏṇṭa cŏllār * -tāṅkal̤ cirittu ikazhāta muṉ **
malaṅkum varālum * vāl̤aiyum pāy vayal cūzhtaru *
nalam kŏl̤ naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-5

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1482. When you become old, women with eyes even lovelier than a doe’s, a fish, a spear or a beautiful kāvi flower and with clever words will laugh among themselves and mock you. Before that happens, O heart, rise, we will go to flourishing Naraiyur surrounded by fields where vālai and viral fish frolic and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விலங்கும் மானையும்; கயலும் மீனையும்; வேலும் வேலையும்; ஒண் காவியும் செங்கழுநீர்ப்பூவையும்; வென்ற தோற்கடித்த; கண் கண்களையுடைய; சலம் கொண்ட கபடமுள்ள; சொல்லார் பெண்கள்; தாங்கள் சிரித்து தாங்கள் சிரித்து; இகழாத முன் இகழ்வதற்கு முன்; மலங்கும் பலவகைப்பட்ட; வராலும் வாளையும் மீன்கள்; பாய் துள்ளி விளையாடும்; வயல் சூழ்தரு வயல்களால் சூழ்ந்த; நலம் நன்மை மிக்க; கொள் விரும்பியதைக்கொடுக்கும்; நறையூர் நரையூரறை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே