PT 6.4.8

நரை திரை மூப்பு வருமுன் நறையூர் தொழு

1485 வாளொண்கண்நல்லார்தாங்கள் மதனனென்றார்தம்மை *
கேளுமின்கள்ஈளையோடு ஏங்குகிழவனென்னாதமுன் *
வேள்வும்விழவும் வீதியில்என்றும்அறாதவூர் *
நாளுநறையூர் நாம்தொழுதும்எழுநெஞ்சமே!
1485 vāl̤ ŏṇ kaṇ nallār tāṅkal̤ * mataṉaṉ ĕṉṟār-tammai *
kel̤miṉkal̤ īl̤aiyoṭu * eṅku kizhavaṉ ĕṉṉātamuṉ **
vel̤vum vizhavum * vītiyil ĕṉṟum aṟāta ūr *
nāl̤um naṟaiyūr * nām tŏzhutum ĕzhu nĕñcame-8

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1485. When you become old, women with sharp sword-like eyes who once praised you saying, “You are my Cupid!” will say, “Listen, he is an old man who coughs up phlegm but he still longs for women. ” Before that happens, O heart, rise, we will go and worship him in Naraiyur where sacrifices and festivals are celebrated on the streets every day and never stop.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் ஒண் வாள்போன்ற; கண் நல்லார் கண்களையுடைய பெண்கள்; தாங்கள் இப்போது இகழும் தாங்களே; மதனன் இவன் மன்மதன்; என்றார் என்று சொன்ன; தம்மை ஆண்களைப் பார்த்து; ஈளையோடு கோழையோடு; ஏங்கு கிழவன் ஏங்கும் கிழவன்; கேண்மின்கள் எங்கே வந்தான் என்று கேளுங்கள்; என்னாத முன் என்று சொல்வதற்கு முன்; வேள்வும் யாகங்களும்; விழவும் வீதியில் விழாக்களும் வீதியில்; என்றும் அறாத என்றும் தினமும்; ஊர் நாளும் நிகழும் ஊரான; நறையூர் நறையூரை; நாம் தொழுதும் நாம் வணங்குவோம்; எழு நெஞ்மே! எழுந்திரு மனமே