Chapter 2

Yasoda lamenting after sending Kannan to herd the cows - (அஞ்சன வண்ணனை)

கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல்
Yasoda lamenting after sending Kannan to herd the cows - (அஞ்சன வண்ணனை)
Yashoda sent Krishna to the forest to graze the cows. However, she couldn't bear his absence. Her heart melts as she thinks, "How could I send my beloved son to a forest full of stones and thorns instead of keeping him here?" She reminisces about all his mischiefs and speaks about them with fondness. The āzhvār also experiences these feelings in the same way.
மாடு மேய்க்கக் கண்ணனை யசோதை காட்டிற்கு அனுப்பி விட்டாள். ஆனல் அவனது பிரிவைத் தாளமுடியவில்லை. "என் அன்பு மகனை இங்கேயே இருக்கச் செய்யாமல் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிற்கு அனுப்பிவிட்டேனே" என்று மனம் கரைந்து அவனது தீம்புகளை எல்லாம் நினைத்து அனுபவித்துப் பேசுகிறாள். ஆழ்வாரும் அதை அப்படியே அனுபவிக்கிறார்.
Verses: 234 to 243
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 3.2.1

234 அஞ்சனவண்ணனை ஆயர்கோலக்கொழுந்தினை *
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே *
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் *
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2)
234 ## அஞ்சன வண்ணனை * ஆயர் கோலக் கொழுந்தினை *
மஞ்சனம் ஆட்டி * மனைகள்தோறும் திரியாமே **
கஞ்சனைக் காய்ந்த * கழல் அடி நோவக் கன்றின்பின் *
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (1)
234 ## añcaṉa vaṇṇaṉai * āyar kolak kŏzhuntiṉai *
mañcaṉam āṭṭi * maṉaikal̤toṟum tiriyāme **
kañcaṉaik kāynta * kazhal aṭi novak kaṉṟiṉpiṉ *
ĕṉcĕyap pil̤l̤aiyaip pokkiṉeṉ? * ĕlle pāvame (1)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

234. Yashodā says, “I bathed the dear kohl-colored child of the cowherd clan in turmeric water and sent him out to go behind the calves because I didn’t want him wandering from house to house. But how could I send my child who fought Kamsan without worrying that his ankleted feet would hurt as he went behind the calves? O, What a terrible thing have I done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அஞ்சன மைபோன்ற கருத்த; வண்ணனை நிறத்தையுடையவனை; ஆயர் குல ஆயர் குல; கொழுந்தினை தலைவனை; மஞ்சனம் ஆட்டி நீராட்டி; மனைகள் தோறும் மற்றவர்கள் வீடுகளுக்கு; திரியாமே சென்று திரிந்துகொண்டிராமல் இருக்க; கஞ்சனை கம்சனை; காய்ந்த உதைத்த; கழல் அடி வீரகழல் அணிந்த; நோவ பாதங்கள் நோக; கன்றின் பின் மாடு மேய்க்க போவென்று; என்செயப் பிள்ளையை ஏனோ குழந்தையை; போக்கினேன் அனுப்பினேன்; எல்லே பாவமே! அந்தோ என்னபாவம் செய்தேனோ!
kŏḻuntiṉai He is the Leader; āyar kula of cowherd clan; vaṇṇaṉai the One with the complexion of; añcaṉa black kohl; mañcaṉam āṭṭi I bathed Him; kaṉṟiṉ piṉ then sent Him to go behind the cows; tiriyāme to prevent Him from; maṉaikal̤ toṟum going to other people houses; nova it must have caused pain in His feet; kaḻal aṭi that has anklets; kāynta that once hit and killed; kañcaṉai kamsan; pokkiṉeṉ why have I sent; ĕṉcĕyap pil̤l̤aiyai my child; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.2

235 பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் *
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே *
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் *
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே.
235 பற்றுமஞ்சள் பூசிப் * பாவைமாரொடு பாடியில் *
சிற்றில் சிதைத்து எங்கும் * தீமை செய்து திரியாமே **
கற்றுத் தூளியுடை * வேடர் கானிடைக் கன்றின் பின் *
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? * எல்லே பாவமே (2)
235 paṟṟumañcal̤ pūcip * pāvaimārŏṭu pāṭiyil *
ciṟṟil citaittu ĕṅkum * tīmai cĕytu tiriyāme **
kaṟṟut tūl̤iyuṭai * veṭar kāṉiṭaik kaṉṟiṉ piṉ *
ĕṟṟukku ĕṉ pil̤l̤aiyaip pokkiṉeṉ? * ĕlle pāvame (2)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

235. Yashodā says (laments), “I don’t want my son to go wandering around kicking and destroying the play houses of lovely doll-like girls with bodies adorned with fragrant turmeric powder. I don’t want him going around doing naughty things. O, Why have I sent him behind the calves to the forest of Gokulam where hunters go with their axes? Why did I send my child behind the calves? O, What a terrible thing have I done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பற்று மஞ்சள் பற்றுப் பார்க்கும் பசு மஞ்சளை; பூசி பூசிக்கொண்டு விளையாடும்; பாடியில் ஆயர்பாடியில்; பாவைமாரொடு சிறுமிகளுடைய; சிற்றில் மணல் வீடுகளை; சிதைத்து காலால் உதைத்து; எங்கும் தீமை எங்கும் தீம்புகளைச் செய்து; செய்து திரியாமே திரிந்து கொண்டிராமலிருக்க; கற்றுத் கன்றுகளோடு; தூளியுடை இருப்பதனால் ஏற்படும் தூசுகளோடு; வேடர் கானிடை வேடர்கள் இருக்கும் காட்டில்; கன்றின் பின் கன்றுகளை மேய்க்க; எற்றுக்கு என் பிள்ளையை எதற்கு என் பிள்ளையை; போக்கினேன் அனுப்பினேனோ!; எல்லே பாவமே அந்தோ! என்ன பாவம் செய்தேனோ!
cĕytu tiriyāme to avoid Him; ĕṅkum tīmai doing naughty things; citaittu like kicking; ciṟṟil the sand houses; pāvaimārŏṭu built by gilrs of; pāṭiyil Aiyarpadi; pūci whose bodies are adorned with; paṟṟu mañcal̤ fragrant turmeric powder; kaṟṟut I sent him to go behind the cattle; tūl̤iyuṭai as a result he faces dust; veṭar kāṉiṭai and goes to the forrest where hunters exist; pokkiṉeṉ why did I send; ĕṟṟukku ĕṉ pil̤l̤aiyai my child; kaṉṟiṉ piṉ to go behind the cattle; ĕlle pāvame what a sinful thing I have done

PAT 3.2.3

236 நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் *
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே *
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் *
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே.
236 நன்மணி மேகலை * நங்கைமாரொடு நாள்தொறும் *
பொன்மணி மேனி * புழுதியாடித் திரியாமே **
கல்மணி நின்று அதிர் * கான் அதரிடைக் கன்றின்பின் *
என் மணிவண்ணனைப் போக்கினேன் * எல்லே பாவமே (3)
236 naṉmaṇi mekalai * naṅkaimārŏṭu nāl̤tŏṟum *
pŏṉmaṇi meṉi * puzhutiyāṭit tiriyāme **
kalmaṇi niṉṟu atir * kāṉ- atariṭaik kaṉṟiṉpiṉ *
ĕṉ maṇivaṇṇaṉaip pokkiṉeṉ * ĕlle pāvame (3)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

236. Yashodā says, “I don’t want my son to wander and play every day with young girls decorated with beautiful manimegalai ornaments. I don’t want him to dirty his shining golden body with mud. That’s why I’ve sent my sapphire-colored son to go behind calves on the forest paths where the bells of the cattle ring. O, What a terrible thing have I done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ணனை நீலமணி போன்ற; என்மணி என் கண்ணனை; நல் மணி நல்ல நவரத்னம் பதித்த; மேகலை மேகலை அணிந்த; நங்கைமாரொடு பெண்களுடன்; நாள் தொறும் தினந்தோறும் விளையாடி; பொன் மணி மேனி பொன்மணி போன்ற மேனியில்; புழுதி ஆடி புழுதி படிந்து; திரியாமே திரியாமலிருக்க; கல் மணி மலையிலேயிருந்து; நின்று அதிர் எதிரொலி கேட்கும் அளவு; கான் அதரிடை காட்டு வழியில் அதட்டியபடி; கன்றின் பின் கன்றுகள் பின்சென்று மேய்த்திட; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவ காரியம் செய்தேன்!
ĕṉmaṇi my Son with; vaṇṇaṉai sapphire-colored complexion; nāl̤ tŏṟum plays everyday with; naṅkaimārŏṭu girls; mekalai decorated with manimegalai ornaments; nal maṇi studded with nine different gems; tiriyāme to avoid; pŏṉ maṇi meṉi His golden body from; puḻuti āṭi getting covered by dust; pokkiṉeṉ I sent Him; kaṉṟiṉ piṉ to go behind the cattle; kāṉ in the forest path; kal maṇi where bells of the cattle; niṉṟu atir ring and echo; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.4

237 வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிடப் *
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே *
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின் *
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே.
237 வண்ணக் கருங்குழல் * மாதர் வந்து அலர் தூற்றிடப் *
பண்ணிப் பல செய்து * இப் பாடி எங்கும் திரியாமே **
கண்ணுக்கு இனியானைக் * கான் அதரிடைக் கன்றின்பின் *
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் * எல்லே பாவமே (4)
237 vaṇṇak karuṅkuzhal * mātar vantu alar tūṟṟiṭap *
paṇṇip pala cĕytu * ip pāṭi ĕṅkum tiriyāme **
kaṇṇukku iṉiyāṉaik * kāṉ -atariṭaik kaṉṟiṉpiṉ *
ĕṇṇaṟku ariyāṉaip pokkiṉeṉ * ĕlle pāvame (4)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

237. Yashodā says, “I don’t want him to wander around Gokulam doing naughty things and so the beautiful dark-haired women there come and gossip about him. He, the god beyond all thought is sweet to the eyes of all. O, I have sent him to the forest behind the calves to graze them. What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ணக் கருங்குழல் கரு நிறக் கூந்தலையுடைய; மாதர் வந்து பெண்கள் வந்து; அலர் தூற்றி பழிச்சொல்லும்படி; பண்ணிப் பல செய்து தீமைகள் பல செய்து; இப் பாடி எங்கும் இந்த ஆயர்பாடிஎங்கும்; திரியாமே திரியாதிருக்க; கான் அதரிடை காட்டு வழியில்; கன்றின்பின் மாடு மேய்க்க; கண்ணுக்கு கண்களுக்கு; இனியானை இனிமையானவனை; எண்ணற்கு எண்ணங்களுக்கு; அரியானை அப்பாற்பட்ட பிரானை; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவ காரியம் செய்தேன்!
tiriyāme to prevent Him from wandering; ip pāṭi ĕṅkum in Aiyarpadi; paṇṇip pala cĕytu and doing naughty things; mātar vantu and to avoid the coherd women; vaṇṇak karuṅkuḻal with dark hair; alar tūṟṟi come and complain about Him; kaṉṟiṉpiṉ I sent Him behind the cattle; kāṉ atariṭai in the forest path; pokkiṉeṉ I sent Him; iṉiyāṉai who is sweet; kaṇṇukku to the eyes; ariyāṉai and is beyond; ĕṇṇaṟku the thoughts; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.5

238 அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய் *
கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே *
எவ்வும்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின் *
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே.
238 அவ்வவ் இடம் புக்கு * அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் *
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் * கூழைமை செய்யாமே **
எவ்வும் சிலை உடை * வேடர் கானிடைக் கன்றின் பின் *
தெய்வத் தலைவனைப் போக்கினேன் * எல்லே பாவமே (5)
238 avvav iṭam pukku * av āyar pĕṇṭirkku aṇukkaṉāy *
kŏvvaik kaṉivāy kŏṭuttuk * kūzhaimai cĕyyāme **
ĕvvum cilai uṭai * veṭar kāṉiṭaik kaṉṟiṉ piṉ *
tĕyvat talaivaṉaip pokkiṉeṉ * ĕlle pāvame (5)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

238. Yashodā says, “I don’t want him to wander here and there in the cowherd village doing naughty things. Let him not approach the cowherd girls and kiss them with his lips that are like kovvai fruits. So I’ve sent that divine one, the king of gods, to the forest behind the calves where hunters carry afflicting bows. O what a terrible thing have I done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவ்வவ் அந்தந்த வேறு வேறு; இடம்புக்கு வீடுகளுக்குச் சென்று; அவ் ஆயர் அங்கு ஆய்ப்பாடி; பெண்டிர்க்கு பெண்களுக்கு; அணுக்கனாய் நெருங்கிய அன்பனாய்; கொவ்வைக் கனிவாய் சிவந்த தன் அதரத்தை; கொடுத்து கொடுத்து; கூழைமை செய்யாமே களிக்கவிடாமல்; எவ்வும் சிலைஉடை பயமூட்டும் வில்லையுடைய; வேடர் கானிடை வேடர்கள் இருக்கும் காடுகளில்; கன்றின் பின் மாடுமேய்க்க கன்றுகளின் பின்னே; தெய்வத் தலைவனை தேவர்களுக்கும் தலைவனை; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவம் செய்தேனோ!
kūḻaimai cĕyyāme to avoid Him; iṭampukku going to; avvav different houses; aṇukkaṉāy going closer; kŏṭuttu and giving a kisses with His; kŏvvaik kaṉivāy red lips; pĕṇṭirkku to women of; av āyar Aiyarpadi; pokkiṉeṉ I sent Him; tĕyvat talaivaṉai who is the Lord of the gods; kaṉṟiṉ piṉ to go behind the cattle; veṭar kāṉiṭai where reside the hunters; ĕvvum cilaiuṭai with scary looking bows; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.6

239 மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய் *
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே *
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின் *
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே.
239 மிடறு மெழுமெழுத்து ஓட * வெண்ணெய் விழுங்கிப் போய் *
படிறு பல செய்து * இப் பாடி எங்கும் திரியாமே **
கடிறு பல திரி * கான் அதரிடைக் கன்றின் பின் *
இடற என்பிள்ளையைப் போக்கினேன் * எல்லே பாவமே (6)
239 miṭaṟu mĕzhumĕzhuttu oṭa * vĕṇṇĕy vizhuṅkip poy *
paṭiṟu pala cĕytu * ip pāṭi ĕṅkum tiriyāme **
kaṭiṟu pala tiri * kāṉ -atariṭaik kaṉṟiṉ piṉ *
iṭaṟa ĕṉpil̤l̤aiyaip pokkiṉeṉ * ĕlle pāvame (6)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

239. Yashodā says "“I don’t want him to steal butter, and gulp it as it glides softly down his throat and do all sorts of mischief, roaming about in this cowherd village Gokulam. So I’ve sent him behind the calves to the forest paths where many elephants wander and people trip and stumble. O, What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண்ணெய் வெண்ணெய்; மிடறு தொண்டையில்; மெழுமெழுத்து ஓட மழமழவென்று ஓட; விழுங்கிப்போய் விழுங்கிவிட்டு; படிறு கள்ள வேலைகள் விஷமங்கள்; பல செய்து பல செய்துகொண்டு; இப்பாடி எங்கும் ஆய்ப்பாடியில்; திரியாமே திரிந்துகொண்டிருக்காமல்; கடிறு பல காட்டு யானைகள்; திரி கான் அதரிடை பல திரியும் காட்டிலே; கன்றின் பின் இடற மாடு மேய்க்க கன்றுகளின் பின்னே; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவம் செய்தேனோ!
tiriyāme to prevet Him for wandering; ippāṭi ĕṅkum in Aiyarpadi; pala cĕytu doing things; paṭiṟu that are naughty; viḻuṅkippoy like stealing and swallowing; vĕṇṇĕy the butter; mĕḻumĕḻuttu oṭa that smoothly glides; miṭaṟu in His throat; pokkiṉeṉ I sent Him; kaṉṟiṉ piṉ iṭaṟa behing the cattle; tiri kāṉ atariṭai to the forest where; kaṭiṟu pala wild elephants roam around; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.7

240 வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட *
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே *
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின் *
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே.
240 வள்ளி நுடங்கு இடை * மாதர் வந்து அலர் தூற்றிட *
துள்ளி விளையாடித் * தோழரோடு திரியாமே **
கள்ளி உணங்கு * வெங்கான் அதரிடைக் கன்றின் பின் *
புள்ளின் தலைவனைப் போக்கினேன் * எல்லே பாவமே (7)
240 val̤l̤i nuṭaṅku-iṭai * mātar vantu alar tūṟṟiṭa *
tul̤l̤i vil̤aiyāṭit * tozharoṭu tiriyāme **
kal̤l̤i uṇaṅku * vĕṅkāṉ -atariṭaik kaṉṟiṉ piṉ *
pul̤l̤iṉ talaivaṉaip pokkiṉeṉ * ĕlle pāvame (7)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

240. Yashodā says, "I don’t want him jumping around, playing and wandering about with his friends as women with vine-like waists gossip about him. I’ve sent the lord of Garudā behind the calves to the hot forest paths where there are dry cactuses. What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வள்ளி கொடி போனற; நுடங்கு இடை துவளும் இடையுடைய; மாதர் வந்து பெண்கள் வந்து; அலர் தூற்றிட குறைகூறிட; துள்ளி அவர்களுடன் துள்ளி; விளையாடி விளையாடிக் கொண்டு; தோழரோடு தோழர்களோடு; திரியாமே திரிவதை தடுக்க; கள்ளி கள்ளிச்செடி கூட; உணங்கு உலர்ந்து போகும்படி; வெங் மிக்க வெப்பத்தையுடைய; கான் அதரிடை காட்டுவழியில்; கன்றின் பின் மாடு மேய்க்க கன்றின் பின்; புள்ளின் கருடாழ்வானுக்கு; தலைவனை தலைவனை; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவம் செய்தேனோ!
tiriyāme to prevent Him for wandering; toḻaroṭu with His friends; tul̤l̤i jumping,; vil̤aiyāṭi and playing; mātar vantu and to avoid the cowherd women; val̤l̤i with vine-like; nuṭaṅku iṭai hips; alar tūṟṟiṭa complain; pokkiṉeṉ I sent; talaivaṉai the Lord of; pul̤l̤iṉ garuda; kaṉṟiṉ piṉ to go behind the cattle; kāṉ atariṭai in the forest path; vĕṅ which is so hot; kal̤l̤i that even the cactus; uṇaṅku would wither; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.8

241 பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் *
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான் *
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் *
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே.
241 பன்னிரு திங்கள் * வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் *
என் இளங் கொங்கை * அமுதம் ஊட்டி எடுத்து யான் **
பொன்னடி நோவப் * புலரியே கானில் கன்றின் பின் *
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் * எல்லே பாவமே (8)
241 paṉṉiru tiṅkal̤ * vayiṟṟil kŏṇṭa ap pāṅkiṉāl *
ĕṉ il̤aṅ kŏṅkai * amutam ūṭṭi ĕṭuttu yāṉ **
pŏṉṉaṭi novap * pulariye kāṉil kaṉṟiṉ piṉ *
ĕṉ il̤añ ciṅkattaip pokkiṉeṉ * ĕlle pāvame (8)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

241. Yashodā says, “I bore him in my womb for twelve months and out of fondness I fed him nectar-like milk from my young breasts. Now I have sent my young lion-like son, behind the calves to the dry forest where he will hurt his golden feet. O, What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பன்னிரு திங்கள் பன்னிரண்டு மாதங்கள்; வயிற்றில் வயிற்றில்; கொண்ட அப் பாங்கினால் சுமந்த பாசத்தால்; என் இளங் கொங்கை அமுதம் என் தாய்ப்பால்; ஊட்டி எடுத்து யான் ஊட்டி வளர்த்த நான்; பொன்னடி நோவ பொன் போன்ற அழகிய பாதங்கள் நோக; கானில் புலரியே விடியற்காலையிலேயே காட்டிற்கு; கன்றின் பின் மாடு மேய்க்க கன்றுகளின் பின்னால்; என் இளஞ்சிங்கத்தை என் சிங்கக் குட்டியான சிறுவனை; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவம் செய்தேன்!
kŏṇṭa ap pāṅkiṉāl I bore Him happily for; paṉṉiru tiṅkal̤ twelve months; vayiṟṟil in my womb; ĕṉ il̤aṅ kŏṅkai amutam I gave my milk; ūṭṭi ĕṭuttu yāṉ to Him; pokkiṉeṉ I sent; ĕṉ il̤añciṅkattai my Son, who is like a young lion; kaṉṟiṉ piṉ to go behind the cattle; kāṉil pulariye in the morning and in the forest path; pŏṉṉaṭi nova which is bound to hurt His beautiful golden feet; ĕlle pāvame! what a sinful thing I have done

PAT 3.2.9

242 குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் *
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை *
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் *
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே.
242 குடையும் செருப்பும் கொடாதே * தாமோதரனை நான் *
உடையும் கடியன * ஊன்று வெம் பரற்கள் உடை **
கடிய வெங் கானிடைக் * கால் அடி நோவக் கன்றின் பின் *
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன் * எல்லே பாவமே (9)
242 kuṭaiyum cĕruppum kŏṭāte * tāmotaraṉai nāṉ *
uṭaiyum kaṭiyaṉa * ūṉṟu vĕm paraṟkal̤ uṭai **
kaṭiya vĕṅ kāṉiṭaik * kāl- aṭi novak kaṉṟiṉ piṉ *
kŏṭiyĕṉ ĕṉpil̤l̤aiyaip pokkiṉeṉ * ĕlle pāvame (9)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

242. Yashodā says, “I have sent my son Damodaran behind the calves without giving him an umbrella and sandals to go in the terrible forest, where broken, hard, rough stones will hurt his feet. Cruelly, I have sent my son to the forest. What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடையும் செருப்பும் குடையும் செருப்பும்; கொடாதே கொடுக்காமல்; தாமோதரனை நான் என் தாமோதரனை நான்; உடையும் உடைந்து; கடியன ஊன்று கூரியனவாய்க் கொண்டு உறுத்தும்; வெம் கால் வைக்க ஒண்ணாத; பரற்கள் உடை பரல்கள் கற்கள் உடைய; கடிய வெங் கடுமையாகத் தகிக்கும் வெப்பம் உடைய; கானிடை காட்டிற்கு; காலடி நோவ பாதங்கள் நோக; கன்றின்பின் மாடு மேய்க்க; என் பிள்ளையை என் அருமை மகனை; கொடியேன் கொடியவளான நான்; போக்கினேன் அனுப்பினேனே!; எல்லே பாவமே அந்தோ என்ன பாவம் செய்தேன்!
kŏṭāte I have not given; tāmotaraṉai nāṉ my Damodhara; kuṭaiyum cĕruppum umbrella and sandals yet sent Him to; kaṭiya vĕṅ hot scorching; kāṉiṭai forest; vĕm with difficult to walk pathways; paraṟkal̤ uṭai filled with stones; uṭaiyum broken and; kaṭiyaṉa ūṉṟu sharp objects; kŏṭiyeṉ me being cruel; pokkiṉeṉ I sent; ĕṉ pil̤l̤aiyai my lovely Son; kaṉṟiṉpiṉ to graze the cattle; ĕlle pāvame what a sinful thing I have done; kālaṭi nova hurt His feer

PAT 3.2.10

243 என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை *
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய *
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல் *
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2)
243 ## என்றும் எனக்கு இனியானை * என் மணிவண்ணனை *
கன்றின் பின் போக்கினேன் என்று * அசோதை கழறிய **
பொன் திகழ் மாடப் * புதுவையர்கோன் பட்டன் சொல் *
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு * இடர் இல்லையே (10)
243 ## ĕṉṟum ĕṉakku iṉiyāṉai * ĕṉ maṇivaṇṇaṉai *
kaṉṟiṉ piṉ pokkiṉeṉ ĕṉṟu * acotai kazhaṟiya **
pŏṉ tikazh māṭap * putuvaiyarkoṉ paṭṭaṉ cŏl *
iṉ tamizh mālaikal̤ vallavarkku * iṭar illaiye (10)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

243. Pattan, the chief of Puduvai filled with palaces that shine like gold composed a garland of sweet Tamil pāsurams that describe how Yashodā was worried when she sent her sweet sapphire-colored son to graze the calves. Those who recite these pāsurams will have no difficulties in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்றும் எனக்கு என்றும் எனக்கு; இனியானை இனிமையானவனை; என் மணி வண்ணனை என் நீலமணி போன்றவனை; கன்றின் பின் மாடு மேய்க்க கன்றுகளின் பின்; போக்கினேன் என்று அனுப்பினேன் என்று; அசோதை கழறிய யசோதை மனம் வருந்தியதை; பொன் திகழ் அழகிய பொன்னொளிர்; மாட மாடங்கள் நிறைந்த; புதுவையர் கோன் ஸ்ரீவில்லிபுத்தூர் பெம்மான்; பட்டன் சொல் பெரியாழ்வார் பாடிய; இன் தமிழ் மாலைகள் இனிய தமிழ்ப் பாசுரங்களை; வல்லவர்க்கு ஓதவல்லவர்களுக்கு; இடர் இல்லையே துன்பம் இல்லையே
vallavarkku those who recite; iṉ tamiḻ mālaikal̤ these pasurams; paṭṭaṉ cŏl composed by Periyazhwar; putuvaiyar koṉ of Srivilliputhur; māṭa that is filled with places; pŏṉ tikaḻ which shine like gold; acotai kaḻaṟiya describing how Yashoda became worried; pokkiṉeṉ ĕṉṟu after sending; ĕṉṟum ĕṉakku her always; iṉiyāṉai sweet; ĕṉ maṇi vaṇṇaṉai sapphire-colored son; kaṉṟiṉ piṉ to graze the cattle; iṭar illaiye will have no difficulties in their lives