PAT 3.2.4

கண்ணுக்கினியவன்; எண்ணற்கு அரியவன்

237 வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிடப் *
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே *
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின் *
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே.
237 vaṇṇak karuṅkuzhal * mātar vantu alar tūṟṟiṭap *
paṇṇip pala cĕytu * ip pāṭi ĕṅkum tiriyāme **
kaṇṇukku iṉiyāṉaik * kāṉ -atariṭaik kaṉṟiṉpiṉ *
ĕṇṇaṟku ariyāṉaip pokkiṉeṉ * ĕlle pāvame (4)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

237. Yashodā says, “I don’t want him to wander around Gokulam doing naughty things and so the beautiful dark-haired women there come and gossip about him. He, the god beyond all thought is sweet to the eyes of all. O, I have sent him to the forest behind the calves to graze them. What a terrible thing I have done!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ணக் கருங்குழல் கரு நிறக் கூந்தலையுடைய; மாதர் வந்து பெண்கள் வந்து; அலர் தூற்றி பழிச்சொல்லும்படி; பண்ணிப் பல செய்து தீமைகள் பல செய்து; இப் பாடி எங்கும் இந்த ஆயர்பாடிஎங்கும்; திரியாமே திரியாதிருக்க; கான் அதரிடை காட்டு வழியில்; கன்றின்பின் மாடு மேய்க்க; கண்ணுக்கு கண்களுக்கு; இனியானை இனிமையானவனை; எண்ணற்கு எண்ணங்களுக்கு; அரியானை அப்பாற்பட்ட பிரானை; போக்கினேன் அனுப்பினேனே; எல்லே பாவமே! அந்தோ என்ன பாவ காரியம் செய்தேன்!